வியாழன், 3 ஆகஸ்ட், 2017

*🎠🗡🛡⚔மகாபாரதம் தமிழ்நாட்டில் நடந்ததற்கான தடயங்கள் -18⚔🛡🗡🎠 **

18ம் போரில் மதியமே 100 துரியோதணனன கொன்று பாண்டியர்கள் வெற்றி வாகை சூடியனர்.. நூறு துரியோதணனுக்கு  நினைவாக பாண்டியராஜன் கோவில் இன்று ஆதிச்சநல்லூரில். ..

அன்றைய தினம் எஞ்சியவர்கள் நீரில் மூழ்கி உழவுதொழில் செழிக்க நீரை வழிபட்டனர்..   

குகைக்குள் வாழ்ந்த மலைவாழ் குறவருக்கும் (கௌரவர்கள்) மற்றும் நதிகரைகளில் புதிதாக வளர்ந்து வந்த உழவுதொழில் பாண்டியர்களுக்கும் (பாண்டவர்கள்) நடைபெற்ற போரே மகாபாரத போர். .

சொந்தமாக பாட்டு எழுதி  இசைத்து பாடியவர்கள் பாகவதர் என்கிறார்கள்.. அவ்வாறு ஆடி மாதம் முதல் 18 நாட்கள் பாகவதர் கீதங்களாக கோவில்களில் ஒலித்து வந்ததில் இருந்து இவ்வுலகிற்கு நூல் வடிவில் எடுத்து வந்ததே சமஸ்கிருதத்தில் பகவத்கீதை..

இன்றும் ஆடி18 நீருக்கு நன்றி கூறி 18நாட்கள் கோவில்களில் பாரதபுராணம் நடைபெறுவது.. இதன் தனி சிறப்பு..

இதுவரை பல ஆயிரம் தடயங்களை இழந்துவிட்டோம்...

இங்கு இருந்து கொள்ளை அடிக்கபட்டு....
கொண்டு போனவர்களால் கண்டுபிடிக்க பட்டவை ஏராளமாக உள்ளது...

எடுத்துக்காட்டாக
தூத்துக்குடி உப்பில் இருந்து பொட்டாசியம் நைட்ரேட்  சேர்மத்தை கண்டுபிடித்தவன் தமிழன்.. இந்த போரில் காந்தம் மற்றும் கரிதூள் கலவையை மூங்கில் வைத்து வெடிக்க செய்தவன் பாண்டியன்..

இன்றோ இம்மண்ணில் விவசாயம் அழிய தொடங்கிவிட்டது..

இப்படியே தொடர்ந்தால்...

நாளை உன் பிள்ளைகள் படிக்கும் விவசாயத்தை கண்டுபிடித்தவன் வெளிநாட்டுகாரன் என்று...

*விவசாயம் தமிழனின் அடையாளம்*

*சுபம்*

🙏 வசந்த் வெள்ளைத்துரை 🙏

*🎠🗡🛡⚔மகாபாரதம் தமிழ்நாட்டில் நடந்ததற்கான தடயங்கள் - 17⚔🛡🗡🎠 **

பீஷ்மர் அம்பு படுக்கை உள்ள இடத்தை விடுத்து தெற்கில் போர் துரோனர் தலைமையில் பலமாக அமைந்தது 13ம் நாள் அபிமன்யூ வும் 15ம் நாள்  துரோனரும்     இறக்க..

17ம் நாள் வெற்றி இருதரப்புக்கும் சமமாக அமைந்தது இருப்பினும் அன்றே கர்ணன் கொல்லபட்டான்.. கர்ணன் இறந்த இடம் தாமிரபரணி தவழும் கொங்கராயகுறிச்சி
(கொங்கு+இறைய+குறிச்சி ) ...

பாரதப் போரில் பங்கு பற்றிய சேனைகள் - 18 ஆக்ரோணிப் படைகள்

போர் நடைபெற்ற நாட்கள் - 18

பாரதப் போர் வர்ணிக்கப்படும் காண்டங்கள் - 18

பகவத் கீதையின் (பாகவதர் கீதம்) அத்தியாயங்கள் - 18

போரின் பின்பு பாண்டியர்  தரப்பில் எஞ்சியவர் - 6 இது 18இல் மூன்றில் ஒரு பங்கு

குறவர்  (கௌரவர்) தரப்பில் எஞ்சியவர் - 3 இது 18 இல் ஆறில் ஒரு பங்கு

தருமன் ஆண்ட ஆண்டுகள் - 36 இது 18இன் இரு மடங்கு

போர் முடிந்து கிருஷ்ணன் வாழ்ந்த ஆண்டுகள் - 36 இதுவும் 18இன் இரு மடங்குகள்.

இப்படி இந்த 18 என்ற இலக்கம் மகாபாரதக் கதையில் முக்கியத்துவம் பெற்ற இலக்கமாக மீண்டும் மீண்டும் சுற்றி வருகிறது.

இது உழவுத்தொழிலுக்காக கற்காலத்தில் நடைபெற்ற மாபெரும் போர்.. இன்று உங்கள் தட்டுக்கு வரும் உணவுக்காக அன்று போர் ஒரு நடந்துள்ளது...

பஞ்சபூதங்களை காசாக்கிய  மானிடா...
பூமிக்கு அடியில் எடுக்கப்படும் காற்று ..
உன் உயிர் நாடி துடிக்கும் சுவாச காற்று ..
என்பது உனக்கு புரியவில்லையா..

தமிழா ஜல்லிக்கட்டு எப்படி உன் பாரம்பரியமோ. .. விவசாயம் உனது அடையாளம்...

மகாபாரத இறப்பும்...ஆடி-18 பிறப்பும்....

🙏 வசந்த் வெள்ளைத்துரை 🙏

*🎠🗡🛡⚔மகாபாரதம் தமிழ்நாட்டில் நடந்ததற்கான தடயங்கள் - 16⚔🛡🗡🎠 **


பலராமன்  மேய்ச்சல் நிலம் குறுகும் மற்றும் பாண்டியர் வனவாசம் தோல்வி போரில் ஈடுபடாமல் தீர்க்க யாத்திரை சென்றார்...

விதுரன் அஸ்தினாபுரத்தில் (  இப்போது உள்ள அகஸ்தியர்மலை ) போர்  வேண்டாம் என கூற துரியோதனனின் வார்த்தைகள் விதுரன் வில்லை உடைத்து போரில் கலந்து கொள்ளமாட்டேன் என்றார்....

மறுமுனையில் பீஷ்மர் வார்த்தைகள் கர்ணனை காயபடுத்த.. பீஷ்மர் இருக்கும் வரை போர்களம் காணமாட்டேன் என்றதால் சேர நாட்டின் வடக்குப் பகுதியில் யான கொங்கு தேசத்தில்   போர்  நடைபெறவில்லை. .

தெற்கில் செம்பகபொழிலில் போருக்கான ஏற்பாடு நடந்தது
பாண்டியர்கள் தங்கள் படைகளால் குத்துகல்வலசை முதல் தெற்கே குலசேகரம் வரை அகத்தியர்மலையை சுற்றி வளைத்தனர்...

தருமன் தனது மூதாதையர் நினைவாக வனங்கிய இடம் குத்துகல்வலசை (வலசை-இடம்பெயர்வது).

கிருஷ்ணன் மற்றும் (விநாயகர்) பீஷ்மர் சங்கு முழங்க போர் ஆரம்பமானது... இன்றைய குலசேகரம் என்னும் குருஷேத்திரத்தில்..

9 நாள் போர் பீஷ்மர் பாண்டியர்களை தெற்கில் இருந்து வடக்கே நகர்தினார்...

10ம் நாள் பாஞ்சாலங்குறிச்சி சிகண்டியை  
பீஷ்மர் முன் நிறுத்தினார் கிருஷ்ணன்.. தன் தந்தை சிவந்தானு மற்றும் தாய் சத்தியவதி (சிவசக்தி) எதிராக வில் ஏந்தாத பீஷ்மர்..

அர்ஜுனன் அம்புகள் சல்லடையாய் துளைக்க பீஷ்மர் வீழ்ந்த இடம்.. தாமிரபரணி தவழும் இன்றைய கங்கைகொண்டான்...

துரோணரும் கர்ணனும் சக்கர த்தில் அபிமன்யு- வும்....

🙏 வசந்த் வெள்ளைத்துரை 🙏

*🎠🗡🛡⚔மகாபாரதம் தமிழ்நாட்டில் நடந்ததற்கான தடயங்கள் - 15⚔🛡🗡🎠 **


18நாள் போர்..  பாண்டியர்கள்
அரவானை பலியிட்டு போர் துவங்கி இடம் இன்றைய விழுப்புரம்...

பாண்டியர்கள் தென்னகத்தின் தென்பாண்டி சீமை நோக்கி பயணம் புறப்பட்டடது...

மகாபாரதத்தில் போருக்ககான காரணம் யாரும் தெளிவாக சொல்லியதில்லை...

திரௌபதியின் துகில் உரிக்கபட்டது, ராஜ்ஜியத்தை ஆள வேண்டும் என்ற கருத்தை முன் வைத்துள்ளனர்...

ஆனால்...

போருக்கான காரணம் பாண்டியர்களின் பாகப்பிரிவினை...

அது வரை பிரித்துவிடாத ராஜ்ஜியத்தை திருதராஷ்டிரனால் பாண்டியர்கள் திரௌபதியுடன்  அத்தினாபுரம் சென்ற போது காண்டவ வனத்தை கொடுத்தது...

அதன் பின்பு பாண்டியர்கள் அதில் உழவுகுடில்  புகுத்தியது..

இந்த போருக்கான மிக முக்கிய காரணம் உழவுத்தொழிலே.

துரியோதணன் கூறியது பாண்டியர்கள் தோற்றுவிட்டார்கள் மீண்டும் வனவாசம் செல்ல வேண்டும் என்று..

ஆனால் பாண்டியர்கள் செல்லாமல் போருக்காக ஆயத்தமானர். . கிருஷ்ணனை தூதுவராக அனுப்பினர்..

அத்தினாபுரத்தில் அனைவரும் போர் வேண்டாம் என்ற போது துரியோதணனிடம் இருந்த நியாயம் ஒன்றே ஒன்றுதான்..

காட்டை அழித்து கலனிவயல் ஆக்குவதா? *இன்றுவரை காட்டை அழிக்காமல் வாழும் குறவர்கள் அதற்கு சாட்சி*

அத்துனை பேரும் துரியோதணன் கூற்றுக்கு மறுத்து பேசவில்லை நூறு மலைநாடு மற்றும் அத்தனை மலைநாட்டின் சிற்றரசும் போருக்காக தயாராகியது..  கிருஷ்ணன் எதிர்பார்க்காத ஒன்று..

இருப்பினும் கிருஷ்ணன் விடவில்லை.. பாண்டியர்கள் வாழ ஐந்து உழவுகுடில் கேட்க..

துரியோதணன் குண்டூசி குத்தும் இடம் கூட இந்த ராஜ்ஜியத்தில் அவர்களுக்கு கொடுக்க முடியாது என்றதும்.. போரில் சந்திப்போம் என்றார் கிருஷ்ணன். .

விலங்குகள் வேட்டையாடி உண்பதை விட இவைகள் மேலானவை என பாண்டியர்கள் கூற...

இவர்கள் கொடுத்த உழவுகுடிலுக்கு சுற்றியுள்ள அத்தனை சிற்றரசும் ஒன்று சேர்ந்தது...

சேரன் ராஜ்ஜியத்துக்கு விட பட்ட சவாலாக மாறியது. .

போருக்கு வராத இருவர் பலராமன் மற்றும் விதுரன்...

பாண்டியர்களின் வேலிகட்டிய உழவுகுடில் நாளை விரிவடைந்தால் ஆயர்களின் மேய்ச்சல் நிலம் குறுகும் மற்றும் பாண்டியர்கள் வனவாசத்தில் தோற்றுவிட்டதை காரணமாக கூறியுள்ளார்..

கிருஷ்ணன் தனது 100 வைணவ குடில்களை காப்பாற்ற பங்கேற்றார். ..

குத்துகால்வலசையும்... குருஷேத்திரமும்...

🙏 வசந்த் வெள்ளைத்துரை 🙏

*🎠🗡🛡⚔மகாபாரதம் தமிழ்நாட்டில் நடந்ததற்கான தடயங்கள் - 14⚔🛡🗡🎠 **


   விராட தேசத்தில் மாறு வேடத்தில் 13 ம் ஆண்டு தொடங்கியது. விராட தேசம் இன்றைய விருத்தாசலம்...

இங்கு இருந்த பாண்டியர்களின் அர்ச்சுனன் துரியோதணனால் கண்டு பிடித்துவிட..

மீண்டும் செல்ல வேண்டும் 13வருட வனவாசம் என துரியோதணன் கூறிணான்.....

பீஷ்மர்-ன் சந்திர கணக்கு

 “கலைகள் {1.6 நிமிடம்}, காஷ்டைகள் {3.2 விநாடிகள்}, முகூர்த்தங்கள் {48 நிமிடங்கள்}, நாட்கள் {30 முகூர்த்தங்கள்}, அரைத்திங்கள்கள் {15 நாட்கள்} [1], மாதங்கள் {30 நாட்கள்}, நட்சத்திரக்கூட்டங்கள், கோள்கள், பருவகாலங்கள் {ருதுக்கள்} {இரண்டுமாதங்கள்}, ஆண்டுகள் *{360 நாட்கள்} **ஆகிய பிரிவுகளைக் கொண்டு காலச்சக்கரம் சுழன்று வருகிறது. அதில் வரும் கூடுதல் பகுதிகள் {காலாதிக்யம்}

மற்றும் வானத்தின் கோள்களில் ஏற்படும் மாறுதல்கள் ஆகியவற்றின் விளைவாக, ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கும் இரண்டுமாதங்கள் கூடுகின்றன.

இவ்வழியில் கணக்கிட்டால் பதிமூன்று வருடங்களுக்கு ஐந்து மாதங்களும் பனிரெண்டு நாட்களும் அதிகமாக வரும் எனத் தெரிகிறது. எனவே, பாண்டுவின் மகன்கள் வாக்குறுதி அளித்ததுபோல, அந்தக் காலம் அவர்களால் சரியாகவே நிறைவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்...

இதனை துரியோதணன் ஏற்கவில்லை...5மாத வித்தியாசம் பாண்டியர்கள் மீண்டும் வனவாசம் செல்ல வேண்டும் என்றான்...

பாண்டியர்கள் போர் செய்ய தீர்மானித்தார்..

18நாள் போர்..  பாண்டியர்கள்
அரவானை பலியிட்டு போர் துவங்கி இடம் இன்றைய விழுப்புரம்...

🙏 வசந்த் வெள்ளைத்துரை 🙏

*🎠🗡🛡⚔மகாபாரதம் தமிழ்நாட்டில் நடந்ததற்கான தடயங்கள் - 13⚔🛡🗡🎠 **

  பாண்டியர்கள் 4ம் ஆண்டு கழிந்த கடம்பவனம்..

அடுத்த 8 வருடம் கழித்தது இன்றை சோழ வளநாடு
சிதம்பரம் நடராசன் சகாதேவனால் இங்கு பஞ்சாங்கம் கண்டுபிடிக்க பட்டது..

பாண்டியர்கள் 8வருடம் கழித்த பெரும் பகுதி இப்போது இல்லை.. லெமூரியாவாக கடலில் முழ்கியது...

தடயங்கள்

குண்டலிவனம் – திருவக்கரை
குதவனம்  – திருவுச்சாத்தனம்
செண்பகவனம்  – திருநாகேச்வரம்
மகிழவனம் – திருநீடூர்
மிதுவனம் –  நன்னிலம்
மறைவனம் – வேதாரண்யம்
வில்வவனம் – திருவாடானை

பாண்டியர்கள் இங்கு இருந்த போது  இவர்கள் இடத்திற்கு அருகில் குடில் அமைத்து கர்ணனும் மற்றும் துரியோதணனும் வனத்தில் தங்கியது.

கந்தவர்கள் துரியோதணனை கைதுசெய்த போது தர்மன் காப்பாற்றி அனுப்பியது..
புதுக்கோட்டை அருகில் உள்ள இன்றைய கந்தர்வகோட்டை...

உழவு குடில் புகுத்திய  பாண்டியர்கள்  வழியில் வந்தவர்கள் சோழர்கள்... அவர்களோடு இருந்தவர்களை அஞ்சாவாசம் செல்லும் முன்பே விட்டுவிட்டார்கள். .

அவ்வாறு விடபட்டபவர்கள் சோறுடைத்த சோழர்கள்...

இறுதியாக அவர்கள் 12ம்ஆண்டு   வந்து சேர்ந்த இடம் இன்றைய திண்டிவனம்...

புளியமரகாடு இங்கு இறுதியில் அவர்கள் வைத்திருந்த அனைத்து பொருளையும் புளியமரத்தில் மறைவாக வைத்துவிட்டு...

   விராட தேசத்தில் மாறு வேடத்தில் 13 ம் ஆண்டு தொடங்கியது. விராட தேசம் இன்றைய விருத்தாசலம்...

5மாதம் வித்தியாசம் மீண்டும் செல்ல வேண்டும் வனவாசம்.....

🙏 வசந்த் வெள்ளைத்துரை 🙏

*🎠🗡🛡⚔மகாபாரதம் தமிழ்நாட்டில் நடந்ததற்கான தடயங்கள் - 12⚔🛡🗡🎠 **


மூன்றாம் ஆண்டு முடிந்த பின் பாண்டியர்கள் சென்ற வனம் கடம்பமர பூக்கள் குலுங்கிய மருதமர காடு..

மிக பெரிய வனம்  கடாயுதகஜன் திரௌபதியை தூக்கி கொண்டு காம்யகம் வந்து சேர்ந்த இடம்..மருதமர காடு இன்றைய மதுரை வைகை ஆற்றின் அமைந்த திருப்புவனம் என்ற கடம்பவனம்..

சோழனுக்கு வித்திட்ட வனம்...
மருதநிலத்தில் வைகை முத்தமிடும் ஊர் சோழவந்தான். ..

உழவு குடில் செழித்த கடம்பவனம்..
இன்றும் பச்சையம்மாள் வீற்றிருக்கும் வயலும் வயல் சார்ந்த நிலம்..

மதுரமல்லி தனி சிறப்பு...

கீழடி வரலாறு மறைக்கப்பட்ட பாண்டிய உழவர் நகரம்..வைகை ஆற்றின் இருபுறமும் உழவுகுடில் மொத்தம் 250 கிலோமீட்டர்...

மருதநிலத்தில் உழவனாகவும்... மானாமதுரை களிமண் வீட்டு உபயோக பொருட்களாகவும் பாண்டியன்  கைவண்ணத்தில்...

  பாண்டியர்கள் 4ம் ஆண்டு கழிந்த கடம்பவனம்..

🙏 வசந்த் வெள்ளைத்துரை 🙏

முல்லை-மயன் என்னும் மாயோன், மயனாட்டி-மீனாட்சி

தமிழர்கள் வகுத்த ஐந்திணை நிலங்களில் முல்லை என்ற நிலத்தின் வாழ்ந்த மாயோனை பற்றி தமிழனின் தடயங்களாக பதிவு செய்யபடுகிறது.. மாயோன்-என்பது ம...