சனி, 30 செப்டம்பர், 2017

இராகபயணம் என்னும் இராமாயணம் 

இராமாயணம்  இதிகாசங்களில் ஒன்று மகாபாரதம் எப்படி சேரர் பாண்டியர்களின் இடையே ஆன போரோ..

அதே போல் சோழர் பாண்டியர் இடையே ஆன போரே இராமாயணம்..

மகாபாரதம் பீஷ்மர் தோண்றிய ரகுவம்சம் என்பது சோழரே.. சோழனின் ராஜ்ஜியத்தை வழிவந்த சேரர்-பாண்டியர் இடையே ஆன மோதல் மகாபாரதம்..

 பீஷ்மரின் வாழ்க்கை வரலாற்றை எவ்வாறு பதிந்ததோ. .

அவ்வாறு இராமன் வாழ்க்கையை பதிந்தது தான் இராமாயணம்..

தமிழில் பிற்காலத்தில் சோழர் சம்ராஜ்ஜியத்தில் வழி வந்த கம்பர் மூலமாக கம்பராமாயணம் இயற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது..

வால்மீகி ஏதோ வடநாட்டவர் என்று என்ன வேண்டாம்.. இன்று தமிழகத்தில் தகவல் தொழில் நுட்பக் பூங்காவாக திகழும் திருவான்மியூர் வான்மீகி பிறந்த ஊரே...

திரு வான்மிகி ஊரே திருவான்மியூர்...


இசை சக்கரவர்த்தி வம்சம்.. இராகம் கண்ட தலைவனின் பயணம் இராமாயணம்... இராமன்-இராகவன்..

விஷ்னுவே-தசரதன்..தசரதன் பண்டிகையே தசரா.. புரட்டாசி மாதத்தில் அமாவாசை அடுத்து வரும் தசமியில் நாம் கொண்டாடும் விஜயதசமி யும் குறிப்பிடத்தக்கது ..

கோசலை புதல்வன் இராகவன் ( கோசலை - கலைவாணி என்னும் கல்யாணியே.. கசல்- யா என்னும் கவுசல்யா - காயத்தீரியே.. .) வில்லுப்பாட்டு கண்டெத்த இராகவனே இராமன்...

இராகவனே அரங்கநாதன்..
அரங்கத்தில் இசைபாடுவனே அரங்கநாதன்..இவன் இசைபாடும் அரங்கமே திருச்சி திரு+அரங்கம் - திருவரங்கம்

சுமித்தரை புதல்வன் இலக்குமணன் மற்றும்  சத்துருக்கன்

(சுமித்ரை-ல+சுமி தாரை-இலக்குமி ) தாரை இசை
கலைஞரே..



இராகவன்-க்கு இலக்குமணன் மற்றும்  சத்துருக்கன் தாளம் இசைகருவி தட்டுபவர்களே..

விதேகனின் புதல்வியே சீதா (எ) வைதேவி..

வைதேவி வைத்தியம் செய்பவர் மற்றும் சித்தார் இசை கலைஞர் (சித்தா-சீதா )
இலங்கையில் இவள் கற்று வந்து இங்கு கொடுக்கபட்டதே சித்தவைத்தியம்..

சித்தாரில் இசை கருவியில் முதன் முதலில் மைதிலி இசை கண்ட மைதிலியே  சீதாதேவி..

வசிட்டர் (வாசிப்பவர்)- அனைத்து இசை கருவிகளையும் கற்றுக் தருபவரே. ..

வாலி-வாலின்(வயலின்) கலைஞனே. இவரது மனைவி தாரையும் தாரை இசை கருவியை வாசிப்பவரே. .

வாலி மகன் அங்கதனும் இரு அங்கத்தை அடிக்கும் மிருதங்கம் வித்துவானே. .

அஞ்சலை (அஞ்சல்)மைந்தன் அனுமன் தூதுவனே..சால்ரா இசை கலைஞன்..

சீதையின் புதல்வர் லவன், குசன் தம்புரா இசை கலைஞர்கள்...

கைகேசி புதல்வன் பரதன் என்னும் வரதன். .சங்கு இசைக்கும் கலைஞன்...

வரதராஜன் ஆண்ட இம்மண்ணில் இன்றும் அதிகமாக
வரத ராஜ கோயில்கள் காணபடுவது குறிப்பிடத்தக்கது...

விஷ்னு-தசரதசோழன் தலைநகராய் கொண்டு ஆண்ட ஊரே அரி+இல்+ஊர் - அரியலூர் -கோதண்டராமசாமி கோவில்

இராவண்ணன் இராபண்ணன்.. இரவில் இசையமைத்து பாடுபவன்..


மொத்ததில் இராமாயணத்தில் வரும் கதை மாந்தர்கள் அனைவரும்  சித்தவைத்தியம் கற்ற இசை கலைஞர்களே...

வீனை இசை கலைஞன்... பரதம் ஆடிய அரசன்..பத்து கலைகள் கண்ட ராவணன்.. இராபண்ணன். ..

*சந்திரகாசம்*
சந்திரகாசம் என்பது தமிழ் மன்னர்களான பாண்டியர்களின் குலவாளாகவும், இந்து தொன்மவியலில் சிவபெருமானின் வாளாக சந்திரகாசம் கருதப்படுகிறது..

இராமாயணம் சிவபெருமானின் வாளின் பெயர் சந்திரகாசம் என்கிறது. இராவணனின் தவத்தினால் சிவபெருமானினடமிருந்து சந்திரகாச வாளைப் பெறுகிறான்.  இராவணன் பாண்டியனே... சந்திரகாசம் வாள் இராவணன் உடையது. ..

யாழ் மீட்டுவதில் வல்லமை பெற்றவன்..வீனை மற்றும் வயலின் வித்தகன்..

வேட்டைச் சமூகத்தில் பயன்பாட்டில் இருந்த கருவிகளின் ஒன்று வில். அந்த வில்லில் முறுக்கேற்றிக் கட்டப்பெற்ற நாணிலிருந்து அம்பு செல்லும்பொழுது தோன்றிய இசையே யாழின் உருவாக்கத்திற்கு மூல காரண‌ம். இதில் இருந்து பண் அமைத்து பாட பட்டதே வில்லுப்பாட்டு.. இதில் இராகவனும்,இராபண்ணும் சிறந்தவர்களே. ..

இராவணன் சிறந்த யாழ் வித்வான் என்றும் கூறப்பட்டுள்ளது. இராவணன் இயற்றிய இசைநூலின் பெயர் இராவணியம் ஆகும், யாழ் மீட்டுபவர்களை யாழ்பாணர் என்றழைப்பர். இலங்கையில் இப்போது உள்ள யாழ்பாணம் மேலும் ஒரு சான்று...

நடணம் ஆடும் கூத்து கலைஞன்..சிவனின் தாண்டவம் ஆடும் இராவணன் *பா*வம், *ரா*கம், *தா*ளத்தோடு ஆடும் ஆட்டமே பரதம்...

மதுரை ஆண்ட மயனின் மகள் மண்டோதிரியை (மீனாட்சி ) மணந்தவன்..

மயன் மூலிகைச்செந்நூல் என்னும் நூலுக்கு ஆசிரியர் என்றும் கூறுகிறது.

 காவிரிப்பூம் பட்டினத்தில் தொடித்தோட் செம்பியனால் நடத்தப் பெற்ற இந்திர விழாவில் பொன்னாலும் மணியாலும் நியமிக்கப் பெற்ற தோரணவாயில் பட்டிமண்டபம் ஆகியவை மயனால் நியமித்துக் கொடுக்கப்பட்டவை என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.

இரவணன் பஞ்சாங்கம் மற்றும் வாண சாஸ்திரம் எழுதியவன்.. சித்தமருத்துவர் இவர் எழுதிய 27 மருத்துவ நூல்கள் உள்ளன.

இராவணன் ‘அங்கவெட்டு’ எனப்படும் வர்மக்கலை, மருத்துவக்கலை, இசைக்கலை போன்ற பல கலைகளில் சிறந்து விளங்கியவன்..

பணை ஓலையில் சூரனம் தரும் சூர்ப்பனகை...

தசரதனுக்கு பின்பு வரதராஜன் க்கு முடி சூட்டபடுகிறது.. இராகவன், இலக்குவனன் வேட்டை ஆடுவது மற்றும் இசைமீட்டுவதுமாய் இருந்ததனர்..

இவர்களது வாழ்க்கை காட்டிலேயே அதிகமாக இருந்தது.. வேட்டை ஆடும்போது அடிபடும் காயங்களுக்கு இவர்கள் காட்டில் உள்ள மூலிகைகள் மூலம் மருத்துவத்தை கண்டனர்..

சீதையை மணந்த இராமன் காட்டிலேயே வாழ்ந்தார்.. இராவணன் தமிழகம் முழுவதும் ஆண்டவன்..

குளித்தலை  ரத்னகிரீஸ்வரர் (திருவாட்போக்கி - சிவபெருமான்) சுற்றிலும் 8 பாறைகளுக்கு நடுவே உள்ள ஒன்பதாவது பாறையில் சுயம்புவாக எழுந்தருளியுள்ள ஈசன் ரத்னகிரீஸ்வரர் -இராவணன்

 இராவணன் பாஞ்சங்கம் ஆராய்ச்சி செய்த இடமே குளித்தலை ஐந்தங்க மலையே ஐயர்மலை...

சூர்ப்பனகை ஒரு கை வைத்தியம் செய்பவள்.. காட்டில் மூலிகைகளை சேகரித்து பொடியாக்கி பணை ஓலையில் சூரணம் தருபவள்..


ஒருமுறை வேட்டையாடும் போது சூர்பனை கூந்தலை மிருகம் என்று என்னி இலக்குவன் அம்பை விட..

 சூர்பணகை அம்பு வரும் திசையை நோக்கி  முகத்தை திரும்பியதும். அம்பு அவளது காது மற்றும் மூக்கை துண்டித்தது. . சூர்பணகையின்  காது மூக்கு சிதறிய இடமே மூக்குசிதறி - முசீதறி - முசிறி

இராவணன் தவமிருந்த கரூர்- கிருஷ்ணராயபுரம் மகாலட்சுமி ஆலயம் மேலும் சிறப்பு..

சூர்பணகை நடந்தவற்றை இராவணனிடம் கூற..

 இராவணன் காட்டில் இருந்த இராமன்,இலக்குமணன் மற்றும்  சீதையை காண  காட்டிற்கு வருகிறார்..


ராவணனால் மாயமான சீதை...இராகவன் தேடும் சீத்தா..

குழந்தை இல்லாத சீதை.. அவள் வளர்க்கும் பறவைகள், விலங்குகள் போல மானையும் வளர்க்க வேண்டும் என்று இராகவனிடம் கேட்க..

இராகவனும், இலக்குமனனும் மானை தேடி  காட்டுகுள் சென்றனர்.. காட்டில் தனியாக இருந்த சீதை சித்தார் இசை மீட்க.. சீதையின் சித்தார் இசையில் மயங்கிய இராவணன்..

சீதையிடம் சித்தாரை கேட்க..

சீதை சித்தாரை தரமறுத்ததும்... சித்தாரை பிடுங்கி கொண்டு பூஷ்பகவிமானத்தில் இராவணன் வானில் பறந்தான்.. சீதையின் சித்தார் மாயமாண ஊரே கரூர் மாயனூர்

புஷ்பகவிமானம் பூ-வினால் ஆனது..நீரில் மிதக்கும் மற்றும் வானில் பறக்கும் தன்மையை கொண்டது..இன்றைய பாராசூட் வானில் பறக்கும் முறையே பூஷ்பகவிமானம்..

 சீதை வளர்த்த  கழுகுகள் இராவணனை துரத்த... சந்திரகாச வாளால்  கழுகுகளை வேட்டையாடி பறந்தான் இராவணன்..

 சீதையோ பூஷ்பக விமானம் பறந்த திசையை நோக்கி சென்றாள்... இறுதியாக இலங்கை அசோகவனத்தை அடைந்தாள் சீதை..

இராகவன் இலக்குமணன் கானும் மான்கள் அனைத்தும் துறவி ஒருவரை நோக்கியே ஓடியது..

கொல்லிமலையை ஆண்ட சுக்கீரிவன் ஒரு மூலிகை வைத்தியன்..

அவருடைய சீடனும், கேசரியின் மகனுமான அனு-மான் வளர்த்த மான்களே கொல்லிமலையை  சுற்றி திரிந்தவை...

நாமக்கல் அனுமானின் தந்தை கேசரியின் ஊர்.. நாமகேசரி தூதுவர் தலைவன்..

 அனுமான் துறவி வாழ்ந்த ஊரே துறையூர்.. அனுமானிடம் தன் மோதிரத்தை கொடுத்து பொன்னுக்கு வாங்கிய மானே பொன்மான்.. துறையூர் பெருமாள்மலை  மேலும் சிறப்பு..

சீதையை காட்டில் தொலைத்த இராகவன்.. இறுதியில் கரூர் கழுகூரில் சீதை வளர்த்த கழுகுகளை காயங்களுடன்  கண்டான்..

கழுகூர் பிரசன்ன வெங்கடாசலபதி கோயில் மேலும் சிறப்பு..

சுக்கீரிவன் அனுமனோடும்..கலங்கிய கண்களோடும். .இராகவன்… தேடும் சீதை….

சுக்கீரிவன் அண்ணன் வாலியின் ஊரில் சீதையை தேட தடை... அசோகவனத்தில் சீதையை போல் பலர்..

சுக்கீரிவன் தன் அண்ணன் ஊரான இப்போதைய பெரம்பலூர்-ல் சீதையை தேடினர்.இதனை அறிந்த வாலி சீதையை தேட தடை விதித்தார் ..

 சுக்கீரிவனுன் அனுமானும் வாலியோடு இசை போர் புரிந்து தோல்வியை கண்டனர்.. பின்பு சுக்கீரிவன், இராகவன் மற்றும்  இலக்குவணனோடு சேர்ந்து இசை போரில் வாலியை வென்றனர்..

இராமன் வாலியை கண்ட இடமே வாலிகண்டபுரம்.. பெரம்பலூர் வாலீஸ்வரர் கோயிலில் வாலி முன்னால் வீற்றிருக்கும் மூன்று நந்நிகள் (சுக்கீரிவன்,இலக்குமணன் மற்றும் இராகவன்) மேலும் சிறப்பு..

வாலியின் தோல்வி-யையும் சுக்கீரிவன் வெற்றியை-யையும் இராவணனிடம் கூற இலங்கைக்கு தூது சென்றார் அனுமான்..

 இராவணன் நூபுர  தாண்டவம் ஆடும் இடமே இலங்கை நுவரெலியா  இதுவே அசோகவணம்.. நூபுர ஒலியே நுவரெலியா..இது தாண்டவம் ஆடும் போது கேட்கும் சலங்கை ஒலியே..
நுவரெலியா சீதை கோயில் மேலும சிறப்பு...

மண்டோதரி சீதை பற்றி அறிந்து இராவணனிடம் கூற..  சூர்ப்பனகை முன்பே சீதை மற்றும்  இராகவனை பற்றி  கூறியிருந்தாள். .

அனுமானும் அசோகவனம் வந்து வாலியின் தோல்வி-யை கூறினார்..மண்டோதரி இராவணனிடம் சீதையின் சித்தாரை கொடுத்து  அனுமனோடு சீதையை அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறினாள்..

சூர்ப்பனகை கூறிய இராமர்-சீதை யின் குழந்தையின்மை  இராவணனுக்கு நினைவில் வந்ததும்.. இராவணன்  சித்தாரை அசோகவனத்தில் சிறை வைத்தான்..

 அனுமான் சீதையிடம் இராகவனின் தூதுவன் என்று இராகவன் மோதிரத்தை தந்து சீதையின் சூடாமணியோடு கொல்லிமலை திரும்பினார் ..

அசோகவனத்தில் சீதையை போல் பலரும் இருந்தனர்.. குழந்தையின்மை கருப்பை கோளாறுகள் குணமாக்கும் வல்லமை பெற்ற சித்தமருத்துவனே இராவணன்..



 அசோகவனம் அசோகமரம் நிறைந்த காடு கருப்பைக் கோளாறுகள் (அடிக்கடி உண்டாகும் கருச்சிதைவு, கருப்பை பலவீனம், கருப்பையில் கட்டி, கருப்பை வீக்கம், கருப்பையில் சதை வளர்ச்சி, கரு சரியான நேரத்தில் கருப்பைக்கு வராத நிலை, சினைப்பையில் உண்டாகும் நீர்க்கட்டி, சினைப்பையையும் கருப்பையையும் இணைக்கும் பாலோப்பியன் குழாய்களில் உண்டாகும் குறைபாடுகள்)  போன்ற வியாதிகளை அசோக மரம் குணமாக்கும்.

சீதை சித்தவைத்தியம் மற்றும் இசைக்கலைகள் பயின்ற இடமே அசோகவனம்..



சீதையின் சித்தாரை விடுவிக்க அங்கதனின் தூது.. மதுரையில் மாயோன் (எ) மயன் கங்கை போல் வைகை கொண்ட சோழபுரம். ..


சீதையை அசோகவனத்தில் கண்டேன் என்று இராகவனிடம் அனுமான் கூறினார்..

 சீதையின் சித்தாரை விடுவித்து சீதையை அழைத்து வர  அங்கதன் தூதுவனாக அசோகவனம் சென்றார்..

வாலியின் மைந்தன் அங்கதனிடம் சித்தாரை விடுவிக்க மறுத்து திருப்பி அனுப்பினார் இராவணன்..

 இராவணனை போல் குமரி காண்டத்தில் பிறந்தவரே மாயோன் (எ) மயன்.. திருமால் மற்றும் பெருமாள் என்றும் கூறப்படுகிறது..

 மாயோன் என்பவர்  மருத்துவம், இசைகலை, கட்டிடகலை மேதையான தச்சரே..

பல்லாக்கு கொண்டு நகர்ந்த ஆதிதமிழன் வாழ்வில் சக்கரத்தை கண்டெடுத்த தச்சர் கலை சிற்பியே திருமால் (எ) மயன் ( *மால்* )..

மயன் வடிவமைத்ததே ரதம்.. ரதம் தந்த தச்சரே தச்சரதன்.. இராமனின் தந்தையே தசரதன் என்னும் மாயோன்..

 இவரும் இராகவனை போல சங்கு இசைக்கும் இசை கலைஞனே..







காவிரி என்பது கங்கையே.
 மயன் ஆண்டதும் அரியலூரில் உள்ள கங்கை கொண்ட சோழபுரமே.. பின்பு

கங்கையை போல் மதுரையில் வைகையை நதி கண்ட  சோழனே மயன்..

சீதையின் தந்தை சனகர் ஆட்சி செய்த ஊர். . சீதை பிறந்ததும் இந்த சனகபுரத்திலேயே.. மதுரை சோழவந்தான் சனகபுரமே மேலும் சிறப்பு..

கங்கையில் மகன் வரதராஜன் ஆட்சி செய்ய.. வைகையில் மகள் மீனாட்சி ஆட்சி செய்ய..  இலங்கை  மாந்தையில் ஆட்சி செய்து கப்பல் கட்டும் மயன் சோழன்.. மயன் பூர்வீகம் இலங்கை மாந்தையே..

இராகவனின் தந்தை மயன்..
( நளன் மற்றும்  நீலன் தூதுவர்கள் வாழும் நாட்டை ஆண்ட மன்னன்..)

 தூதுவர்கள் குடிபுகும் இடமே  *தூத்துக்குடி* இது இயற்கையாக அமைந்த துறைமுக நகரம்..இதனை ஆட்சி செய்தவர்களே நளனும்,நீலனும்..

 கடலை கடந்து சேதி கொண்டு செல்பவர்களைஆண்ட நளனும்-நீலனும்
 சேது சமுத்திர ராஜன்கள்..


மாந்தை-க்கு வடக்கே வணிக தொடர்புக்கு மயன் மன்னன் நளன் -நீலன் வைத்து கட்டிய பாலமே சேது பாலம் என்னும் *சேதுபந்தனம்* ..


மன்டோதரி என்னும் மீனாட்சி.. மன்டோதரியின் மகளே சீதை..

மலையில் வேடர்களுக்கு வேட்டையாட தரபட்டதே வில் இதனை வடிவமைத்தவன் விசுவகர்மன்..

விசுவகர்மன் இரண்டு வில் செய்தார்... வில்லை
வி *ஸ்ரவன்* என்னும் சிவனிடமும்.. மயன் என்னும் மாயோனிடமும் தந்தார்..

விஸ்ரவன் என்னும் சிவன் இராவணனின் தந்தை.. இராவணனின் தந்தை வைத்திருந்தே வில்லே
*சிவ தனுசு*

தசரதனே - மயன் என்னும் மாயோன்.. இராமனின் தந்தை..

 மயன் புதல்வியே மன்டோதரி.. மயனின் புதல்வி மண்டோதரி திருமணமே மதுரை மீனாட்சி திருகல்யாணம்..

மதுரையில் சித்திரை பௌர்னமி அன்று தங்கையின் திருமணத்திற்கு அழைப்பு விடுக்காது.. அழகர் என்னும் பராமசாமி பெருமாள்.. ஆற்றில் இறங்கி வண்டியூர் செல்வது.. மேலும் சிறப்பு..

மதுரை மீனாட்சி கோவில் திருமால் *ஈசனுக்கு மீனாட்சியை* கரம்பிடித்து கொடுக்கும் சிற்பம் மேலும் சிறப்பு..

இராவணன் -மண்டோதரியின் மூத்த புதல்வியே சானகி.. மதுரையை மயன் மற்றும் மீனாட்சிக்கு  பின்பு ஆண்ட சனகரிடம்  மகள் ஜானகியும் சிவதனுசு யையும் ஒப்படைத்தார் இராவணன்..  சனகபுரம் தற்போதைய மதுரை சோழவந்தான்..

 சனகபுரத்தை ஆண்ட சனகர் ஜானகி என்னும் சீதையின் வளர்ப்பு தந்தையே.. சீதையின் சுயம்வரத்தில் சிவதனுசில் இசை மீட்டியவனே இராகவன் (இராமன்)..

திருமால்-பெருமாள்-மாயோன்-தசரதன் சோழன்ஆகியவை குமரி தச்சன் மயன்

அதேபோல்

ஈசன்- இராபண்ணன்- இலங்கேஸ்வரன்- சுந்தரேஸ்வரபாண்டியன் அகியவர்கள் இராவணன் ஒருவரையே குறிப்பிட்டவை..

இராபண்ணனுக்கு குபேரன்,கும்பகர்ணன்,வீபிடன் சகோதரர்கள்
மற்றும்
 இந்திரசித்தன்-கணபதி
அட்சயகுமாரன்-குமரன் என்ற புதல்வர்கள் உண்டு ..

இராமாயணத்தில் குறிப்பிட்ட அனுமன்,வாலி,சுக்கீரவன், அங்கதன், வாலி, நளன்,நீலன், ஜாம்பவன் ஆகியோரை வாணரங்கள் (குரங்குகள் என தவறாக சித்தரிக்கபட்டவை).. இவர்கள் இசைகலை மற்றும் கைவைத்தியம் கற்ற தூதுவர்கள்..


இராமாயணம் கூறிய வாணர்கள்  பாணர்கள் என்னும் இசைவாணர்களே. இவர்கள் பல்வகையான இசைக் கருவிகளை முழக்கிக்கொண்டு ஊர் ஊராகச் செல்வது உண்டு.

யாழ்  இவர்களின் முதன்மையான கருவி. பண்ணிசைத் தொழிலால் இவர்கள் பாணர் எனப்பட்டனர்.

தமிழ் இலக்கியம் சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை  நூல்களும் பாணர்கள்  பெருமையைப் பறைசாற்றுகின்றன மேலும் சிறப்பு..


ஊர்மிளை திருமணமும்.. சித்தாரை மீட்க இராகவன் -கும்பகர்ணன் போரும். .


முதல் நாள் இசை போரில் இராகவனுக்கு சற்று தயக்கம் இருந்தது.. இராவணனுடன் இசை போரில் தோற்றால் பரிசாக என்ன வழங்குவது என்று? ஆகையால் இராவணனிடம் இன்று போய் நாளை வா!! என்றார் இராகவன்..

மறுநாள் இசை போர் புரிய வந்தவரை கண்டு இராகவனும் இலக்குமணனும் அதிர்ச்சி அடைந்தனர்.. காரணம் இசை போருக்கு வந்தது இராவணனின் தம்பி கும்பகர்ணன்..

கும்பம் என்றால் குடம்.. கடம் வாசிக்கும் வித்துவானே கும்பகர்ணன்..

இசைபோருக்கு மானோடு வந்த இராமனுக்கு.. மகள் ஊர்மிளை மற்றும் மதுரையோடு வந்தார் கும்பகர்ணன்..

சோழவந்தான் என்னும் சனகபுரத்தை ஆட்சி செய்த சனகர் என்பவர் இராவணனின் தம்பி கும்பகர்ணனே..

கும்பகர்ணன் என்னும் சனகரின் புதல்வி ஊர்மிளை உருமிமேளம் வாசிக்கும் வித்துவானே..

இலக்குமணன் இசைபோரில் கும்பகர்ணனை வென்று ஊர்மிளை மணக்கிறார்..  இலக்குமணன் இசைபோரில் வென்று மானையும் மதுரையும் கைப்பற்றிய இடமே தற்போதைய  மானாமதுரை..

இன்றும் மானாமதுரை  களிமண்  வளம் மிக்கதாக இருப்பதால் இங்கு தயாரிக்கப்படும் கலை நயமுள்ள பொம்மைகள், பூ தொட்டி, மண் பானை, கொடியடுப்பு,செங்கல், கூரை ஓடு, கடம் எனும் இசைக்கருவி ஆகியன புகழ்பெற்ற இருப்பது மேலும் சிறப்பு...


இந்திரசித்துடன் போரில் இராகவன் மற்றும் இலக்குமணன்  மயங்குதல். . சஞ்சீவி மூலிகையோடு அனுமான்..

இந்திரசித்தன் - இந்திரன்-விநாயகர்-கணபதி எல்லாம் ஒருவரே இதனை பின் வரும் நாட்களில் வேறு பாகங்களில் விரிவாக பார்க்கலாம்..

இந்திரசித்தன் என்னும் மேகநாதன் என்பவர் மேள-நாதம் வித்துவானே..

இராகவன் மற்றும் இலக்குமணன்  இரண்டாம் கட்ட போர் குபேரன் உடன் குபேர நாட்டில் நடைபெற்றது..

 தமிழகத்தில் தென் மேற்கு கடற்கரை முதல் வட கிழக்கு கடற்கரை வரை பறந்து விரிந்த குபேரன் நகரம் வணிக துறைமுகங்கள் பல கொண்டவை..

குபேரன் தலைநகராக கொண்டு ஆட்சி புரிந்த ஊர் அழகாபுரி..இது தற்போதைய இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அழகன்குளம் தான்..

குபேரன் உடன் இசைபோரில் குபேரனுக்கு பதிலாக கலந்து கொண்டது இராவணனின் புதல்வர்கள் மேகநாதனும் மற்றும் அட்சயகுமாரன்..

மேகநாதன் மற்றும் அட்சயகுமாரன் ஆட்சி புரிந்தது குபேரன் நாட்டின் அருகில் அமைந்திருந்த மருதங்குடி என்னும் மருதங்கூர்.. இது  தற்போதைய  பிள்ளையார்பட்டியும் குன்றகுடியும் ஆகும்..

மருதங்குடி மிருதங்கம் என்னும் மேளம் நாதத்திற்கு பண்டைய காலம் முதல் பெயர்பெற்ற ஊர்.. பிள்ளையார்பட்டி விநாயகர் கோவில் மற்றும் குன்றக்குடி முருகன் கோவில் மேலும் சிறப்பு..

மேகநாதனின் மேள-நாதம் போட்டியில் அங்கு சுற்றி  திரிந்த சர்பநாகங்கள் வந்து தீண்டியதே.. (நாகாஸ்திரம் என்று சித்தரிக்கபட்டுள்ளது..) சர்பங்கள் தீண்டி
இலக்குமணன் மற்ற்ம் வாணரங்கள் என்னும் பாணர்கள் மயங்கி விழ..

ஜாம்பவான் என்பவர் அனுமான் தந்தை நாமகேசரி ஊரின் அருகே ஆட்சி செய்த கை வைத்தியர்.. சஞ்சீவி மூலிகை ஜாம்பவான் நாட்டில் இப்போதும் உள்ளது.. ஜாம்பவான் ஆட்சி புரிந்த ஊர் தற்போதைய  காங்கயம். .

 பெருந்துறை அருகே உள்ள தம்பிகலை  அய்யன் கோவில் மேலும் சிறப்பு.. இப்போதும் இக்கோவிலை சுற்றி ஆயிரம் ஆயிரம் சஞ்சீவி மூலிகைகள்..

இசை போரில் நாகம் தீண்டி இறுதியாக இராமனும் கீழே விழுந்தார்.. ஜாம்பவான் நாட்டில் இருந்து சஞ்சீவி மூலிகையோடு  கொண்டு வந்த அனுமான் நாதம் இசைக்க இராமன், இலக்குமணன் மற்றும் வாணர்கள் மயக்கத்தில் இருந்து எழுந்தனர்..

 இலக்குமணன் மேகநாதனை மேளத்தில் வெல்ல.. அனுமானோ அட்சயகுமாரனுக்கு எதிராக நாதம் வாசிப்பை நிறுத்தவில்லை..

இங்கே  நாதம் வாசித்த அனுமானுக்கு வாயு புத்திரன் என்ற பட்டமும் கிடைத்தது.. அனுமான் இராமனுக்காக நாதம் ஊதிய இடமே தற்போதைய இராமநாதபுரம்... வெற்றிக்கு குபேரன் பரிசாக தென்மேற்கில் இருந்த கடற்கரை நகரம் முழுவதும் இராகவன் க்கு கொடுத்தார்..

இராகவன்-இராவணன் இறுதி இசை போர்.. சித்தாரையும் தென்னிலங்கை வெல்லும்  இராமன்..

இறுதி இசைபோர் இராகவனுக்கும் இலக்குமணனுக்கும்
இராவணனின் தனயன் விபீஷணன் உடன் இருந்தது..

ஆனால் இறுதியில் இராவணனே இசைபோரில் இராகவனை எதிர்கொண்டான்.. இதனை விபீஷணன் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை இராவணன் தட்டி பறிப்பதாக கருதினான்..

அவையில் இராவணன் வில்லுப்பாட்டு இசைக்க விபீஷணன் பாட்டுக்கு தாளம் சேர்த்தான்.. அதே போல் இராகவன் வில்லுப்பாட்டு இசைக்க  இலக்குமணன் பாட்டுக்கு தாளம் சேர்த்தான்..

ஒரு கட்டத்தில் இராவணன் பாட்டுக்கு தாளம் சேர்க்க மறுத்துவிட்டார் விபீஷணன்.. இருப்பினும் இராவணன் வில்லுப்பாட்டு தாளமில்லாமல் தொடர்ந்தாலும்..

விபீஷணன் இராகவனின் வில்லுபாட்டுக்கு  இலக்குமணனோடு சேர்ந்து தாளம் சேர்த்தார்..

*கடன்பட்டார் நெஞ்சம்?   சோழ நாட்டில் ஒரு வழக்கம் இருந்தது. அதாவது வாங்கிய கடனை கட்ட முடியாதவர்களை சுற்றி கடனளித்தவர் பொதுவிடத்தில் ஒரு வட்டம் வரைந்து விட்டுச் சென்று விடுவார். கடனைத் தரும்வரை அவர் அக்கட்டத்தை விட்டு வெளிவர இயலாது. அரசனாயிருந்தாலும் அதே கதிதான். ஆனால் ஒன்று இது கடனைத் திருப்பிப் பெற எல்லா முயற்சிகளும் தோற்றபிறகே கடனளித்தவர் செய்யும் காரியம்*.

*அதற்கு ஆளாகும் கடன்காரர்கள் இறந்ததற்குச் சமம். அப்படிப்பட்ட கடன்பட்டவர் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன் என்பது விபீஷணன் செய்த இந்த செயலுக்கே*..


இறுதியில் வில்லோடு பண் கொடுத்த இலங்கேஸ்வரன்.. அவையில் வில்லோடு முக்தியடைந்தான்...

 இசைபோர் கண்டு இராவணன் முக்தியடைந்த இடமே தற்போது உள்ள *தனுஷ்கோடி*
தனுஷ்-வில்,கோடி-முக்தி

கோதாண்டவ ராமன்- கோதண்டராமன்.. கோதாண்டவ என்றால் தாண்டவம் ஆடும் அரசன் இலங்கேஸ்வரன்..

இராவணன் மற்றும் இராகவன் இசைபோருக்கு தற்போதைய
கோதண்டராமன் கோவில் மேலும் சிறப்பு..

இராமன் வைத்திருந்த *கோதண்டவில்* சிவதனுசே.. இராமன் சீதை சுயம்வரத்தில் வென்ற வில்லே.. கோதாண்டவ வில் இராவணன் உடையது..

 சித்தாரையும்,இலங்கையும் வெண்ற இராகவன்.. இலங்கையை விபீஷணனிடம் கொடுத்தார்...

*பல பெண்கள் வாழ்வில் குலம் தழைக்க மருத்துவம் கொடுத்தவன் இராவணன்*

இசை மற்றும் மருத்துவம் என அனைத்தும் கற்றுக் கொடுத்த தந்தை இலங்கேஸ்வரனை லிங்கேஸ்வரனாக ( *லிங்கம்* )மணலால்  கோசம் வடிவமாக வடிவமைத்தவள் சீதை..

மயன் இதனை கண்டு தற்போது உள்ள *உத்திரகோச மங்கை* ஊரில் சிவதாண்டவம் கண்டு
ஆடிய இராவணனை நடராஜர் ( *நடனராஜன்* ) சிற்பமாக வடிவமைத்து கொடுத்தார்..

சீதை வடித்த லிங்கம் போல இராமன்,இலக்குமணன், அனுமான் மற்றும் பாணர்கள் ஆகியோர் யாழிசை வேந்தன் இலங்கேஸ்வரனை லிங்கம் வடித்து பூஜித்த இடமே *இராமேஸ்வரம்*... இராவணன் முக்தியடைந்த இடமே..

 உத்திரகோசமங்கை ஊரில் நடராஜன் முன்பு மண்டோதரி சிவதாண்டவம் ஆடி முக்தியடைந்தாள். .

வட்டாற்றில் பட்டம் பெற்று அபிசேகம் கானும் இராகவேந்தன் ஆதிகேசவன்..


குபேரன் இசைபோரில் வெற்றிக்கு  பரிசாக தந்த தென் மேற்கு மலையில் வசிட்டர் இராகவனுக்கு முடி சூட்டி.. யாழிசை வேந்தனை வென்றதால் இராகவேந்தன் என்று பட்டம்சூட்டிய இடமே *திருவட்டாறு*..

மங்களாசாசனம் உறைக்கும்..

*உண்டு உறங்கி சாதாரண வாழக்கை வாழும் நாட்டினரோடு இருப்பதை விடுத்து இறைவ‌னின் பாடல்களைப் பலவாறாய்ப் பாடி பழவினைப் பற்றறுத்து ஆதிகேசவன் எனும் திருப்பெயருடன் எழுந்தருளியுள்ள நாரணன் திருவடிகளை இவ்வாற்றாட்டில் வணங்கிப் பிறப்பறுப்பேன்* என்ற வரிகள் மேலும் சிறப்பு..

இங்கு அமைந்துள்ள ஆதிகேசவ பெருமாளும் மேலும் சிறப்பு..

அதேபோல் நாகண்ணார் -(பண் இசைக்கும் நாகர் இன மக்களின்)மக்களின் முடிசுட்டபட்ட முதல் நாவண்ணார் என்னும் நாபண்ணார்-பண் இசைக்கு நாராயண குல இசை வேந்தன்..

இதன் அருகே நாகர்கோவில் நாகண்ணார் (ஈழவர் என்னும் சாணார்  வாழும் பகுதியே -தற்போது சாதிகளுக்குள் சிக்கி பல வடிவமைப்பு பெற்றுள்ளது) மேலும் சிறப்பு...

 நாபண்-நாபன் நாவினால் இசை தொடுப்பவன் *பாடகர்*  வாய்ப்பாட்டு பாடுபவன்.. பத்மநாபனே. .

 தமிழில் பா என்னும் வெண்பா இதனை கீர்த்தனையாக தொடுத்து பாடுதல் மற்றவருக்கும் கற்று கொடுப்பது வாய்ப்பாட்டு அல்லது குரலிசை..

 பெரும்பாலும் பல வடிவங்கள் மற்றும் நடைகளின் இசையை கண்டது..அப்படி கண்டவை ஆதியில் தோண்றிய வாய்பாட்டு வில்லுப்பாட்டே.. பத்மநாபனும் பரமநாதனும் வில்லிடித்து பாடியவர்களே. .

இராமன்-சீதையோடு இல்லறத்தை ஆணந்தமாக  வாழ்ந்த  இடமே ஆணந்தசயனம்.. தற்போது பத்துமநாபண் குடி கொண்டுள்ள *திருவணந்தபுரம்*.. பத்துமநாபமன் கோவில்.. (குபேரன் பூமியில்)   மேலும்  சிறப்பு..

இராவணனின் இசைக்கலையை வையம் முழுக்க கற்று கொடுக்க இராகவனுக்கும் இசை பயணம் வடக்கு மேற்கு நோக்கி  தொடர்ந்தது.. இராகவன் வாய்பாட்டு குருவாக இருந்த இடமே *குருவாயூர்*..

பொதுவாக நமது இலக்கிய தமிழ் இலக்கணத்தில் பிழையாக எதுவும் கிடையாது.. உட்பொருளான கருபொருள்
சிதைக்கபட்டுள்ளது...

நாகர் இனமக்களை நாகத்தோடு ஒப்பிட்டு பாம்பாக சித்தரித்துவிட்டார்கள்.. *பிராமணர்கள்* தமிழர்கள் தானா???.. ஆம் பச்சைதமிழர்களே.. யார் இவர்கள்..??

நாகண்ணார்-யாழிசை பாணர்களான *யாழ்பாணர்கள்*.. இராகவனுக்கு சீடர்கள் அனைவரும் யாழ்பாணர்-யாழ்வாணர்-யாழ்வார் என்ற *ஆழ்வார்*களே. ..

தமிழில் உள்ள " *ழ்*" தமிழனுக்கு மட்டுமே சொந்தமானது. .

அதே சமயம் நாகர்கள் கால்நடை வைத்து வளர்த்த ஆயர்கள்.. மலைக்கும் நிலபரப்புக்கும் மத்தில் வாழ்ந்ததால் இடையர் என்றும் அழைக்கப்பட்டனர்..

 நாகர் இனத்தில் மயன்(எ) மாயன் குலத்தில் தோன்றியவனே இராமன் நாகர்~ஆயணன் என்ற *நாராயணன்*..

இந்த நாராயணன் குல வழி வருபவர்களே இராகவபாணர்கள் என்ற ராமபாணர்கள்- பிராமணர்கள்..

நாகம் இருக்கும் இடம் புத்து.. அதேபோல் வில்லிடித்து பாடும் நாகர்கள் வாழ்ந்த இடம் வில்லிபுத்தூர் என்ற *ஸ்ரீ வில்லிபுத்துர்*..

மதுரை ஆண்ட சனகர் என்னும் கும்பகர்ணன்  மன்னனின் வளர்ப்பு மகள் ஆண்டாள்-சீதையே..

சீதை இராவணனின் மகளே.. சுயவரம் நடந்தது ஸ்ரீவில்லிபுத்தூர்.. திருமணம் நடந்தது திருச்சி திருவரங்கமே..

திருவட்டாறு ஆதிகேசவன் பெருமாள் கோயிலில் இன்னொரு தனித்துவம்.. இங்கு இறைவனுக்குப் பூசனைகள் செய்யும் போத்திமார் ஆவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிறிது மாதத்தில் கருவுற்ற சீதை.. தான் அசோகவனத்தில் கற்ற சித்தமருத்துவம் அனைத்தும் மற்றவர்களுக்கு கற்று கொடுக்க தொடங்கினாள்...

 அவ்வாறு தொடங்கியவள் வனத்தை கடந்து வடதிசை நோக்கி பயணமாக மாறியது..
இறுதியாக வால்மீகி முனிவர் வீட்டில் இருந்து வந்தாள் சீதை..


லவ-குசன் பிறப்பும்... இசைவடிவம் கண்ட இராமாயணமும். .பாம்பு படுக்கையும் கழுத்தில் ஆடும் பாம்பும்..


இராவணன் இறந்த பின்பு.. திருச்செந்தூரில் இராவணின் சந்திரகாச வாளோடு ஆட்சி செய்தவன அட்சயகுமாரன்.. இரவணனின் ஈட்டியே சந்திரகோசம்-சந்திரகாச வாள்.. அட்சயகுமாரன் க்கு அது வேல்.. இதனை பின்வரும் நாட்களில் வேறு தலைப்பில் விளக்கபடும் முருகனே யாழ்கொடியை மீன்கொடியாய் மாற்றினான்..


இறுதியாக சீதை வால்மீகி ஆசிரமம் வந்து சேர்ந்தார்.. லவனும் குசனும் பிறந்ததும் அந்தக் குழந்தைகளை வளர்த்துப் பல கலைகளைக் கற்றுக்கொடுத்ததும், வில் வித்தையில் சிறந்து விளங்கச் செய்ததும் வால்மீகிதான்.

 வால்மீகி முனிவர் இருந்த ஆஸ்ரமம்தான் தற்போது சென்னையில் இருக்கும் கோயம்பேடு எனும் இடம். இந்த இடத்தில்தான் லவன், குசன் இருவரும் ஈஸ்வரன் இராவணனுக்கு கோயில் ஒன்றைக் லிங்கம் வைத்து கட்டினர்..

கோயம்பேடு- கோஅய்யன்பேடு.. அரசன்-அய்யன்-ஊர் கோயன்பேடு என்ற கோயம்பேடு
லவன்-குசன் இருவரும் அய்யனார் -அய்யப்பன்..

வால்மீகி சீதையின் கதையை கேட்ட பின்பு பாடல் வடிவில் வடிவமைத்தார் இராமாயணத்தை.. பாடல்களை லவ-குசன் க்கு சொல்லி கொடுத்தார்..

லவகுசன் இருவரும் தம்புரா கலைஞர்கள்.. இவர்கள் இசைவடிவில் வால்மீகி யிடம் இருந்து இராமாயணம் பாடல் கற்று.. பின்பு நாடு முழுவதும் இதனை பாடி ஆடி மக்களிடம் கொண்டு சேத்தனர். .

தம்புரா கலைஞரான இவர்கள் பாடல்களை சொல்லி கொடுக்கும்.. சாத்தன்.. என்னும் சாஸ்திரி களே..
இவ்வாறு பா-பண்களை சொல்லிக் கொடுப்பவர் சாத்தனார் என்று சங்காலம் கூறுகிறது.. எடுத்துக்காட்டாக  சீதலைசாத்தனார்

இவ்வாறு பா-பண் சொல்லி கொடுப்பவர் பாபண்ணார் என்ற பார்பனர்(பாபானர்).. கீர்த்தனைகளை சுருக்கம் கொடுத்து பா-குறள் அல்லது மந்திரம் ஸ்லேகம் எழுதுவோர் சூத்திரர்.. (சூத்திரம் எழுதுவோர்)

லவ-குசன் அவர்கள் தாய்மாமன் கனபதி-முருகன் போலவே பிற்காலத்தில் வளர்ந்தவர்கள்..
அய்யனார் -கனபதி போல இருக்கும் கம்மாய்,குளங்களில் என எல்லாம் இடத்துக்கும் சென்று சித்த மருத்துவம் மற்றும் பாடல்கள் கேட்டு-கற்று வந்தனர்.. இவருடைய இசை காலபோக்கில் நாட்டுபுறஇசை கலைகள்..


குசன் என்னும் அய்யப்பன் -முருகனை போல் குன்றுகளில் அமர்ந்துவந்தான்..  இவரை தேடி போய் மக்கள் மருத்துவம் மற்றும் இசைகலை கேட்டு-கற்று வந்தனர்.. அதுவே தற்போதய பழனி-சபரிமலை பாதையாத்திரை.. இவருடைய இசை காலபோக்கில் ஸ்லோகங்கள் மற்றும் பசனைகள். .

இந்த சாஸ்தாகள் என்னும் சாஸ்திரிகள்..கூறிய பா.. சிற்றிலக்கிய வகை பாட்டுடைத் தலைவனுக்கு சோதிடம் பார்க்கும் வழமையொட்டி இருந்தது..சாதகம்.. குரல் வளத்திற்கு .. ஜாதகப்பண். .

இராவணன் பாஞ்சங்க நூலை வைத்து மயன் வாஸ்து சாஸ்திரம் கண்டது.. மயனின் வாஸ்து சாஸ்திரம் வைத்து தான் இராகவனும் வானசாஸ்திரம் படைத்தார்.. (விஷ்னுபஞ்சாங்கம்)..

துனைகோள்கள் என்ற ராகு-கேது போல் லவ-குசன் இருவரும் கனபதி-முருகன் க்கு துனையாக நின்றவர்கள்..

 சூரிய துனைகோள் ராகு தலை பாம்பகாவும்,  சந்திர துனைகோள் கேது உடல் பாம்பாக கொடுத்தார் இராமன்.. விட்டுனு க்கு தலைக்கு மேல் பாம்பும்.. சிவனுக்கு கழுத்துக்கு கீழ் பாம்பும் நாகர் இனமக்கள் என அடையாளம் காட்டத்தான்...

மோகினி-பாற்கடல்-அமிர்தம்- மத்து ஆதிசேஷன்-வாசுகி எல்லாம் சித்தரிக்கபட்டவை..

முக்கியகுறிப்பு தமிழகத்தில் எந்த வைணவ கோவில் களிலும் நவகிரகங்கள் சன்னதி என்று கிடையாது.. அதற்கு காரணம் இராமன் பெற்ற இந்த லவ-குசனே..


பின்பு இராமன் -சீதை குபேரன் தந்த தென்மேற்கு பகுதியில் உள்ள வைகுண்டத்தில் வாழ்ந்தனர்..

வைகுண்டத்தில் இராமன் முக்தி கண்ட பின்பு முடிசூடாத அய்யனார் சோழனே (குசன்) என்னும் பீஷ்மர் வரலாறும் மகாபாரதம் பிறந்தது.. சோழனை வைத்து தான்.. வைகுண்டம் ஆதிநாதபுரமே அஸ்தினாபுரம்..

தமிழில் அருமையாக இராமாயணம் கொடுத்த வால்மீகி யார்?

 அகத்தியர் திருவான்மியூர் தலத்தில் தங்கி இருந்தபோது அவருக்கு உடல் உபாதைகள் வரும் போதொல்லாம் சீதையே அகத்தியருக்கு மருந்துகள் பற்றியும், அதன் உபயோக முறைகளைப் பற்றியும் கற்று கொடுத்தாள்.

அதனாலேயே அகத்தியர் இருந்த இடத்தில் லிங்கம் ஒன்றை அமைத்து மருந்தீஸ்வரர் முன்னிலையில் அகத்தியருக்கு சித்தமருத்துவம் கற்று கொடுத்த இடமே திருவான்மியூர் .

சீதையே அகத்தியருக்கு சித்த மருத்துவம் முழுவதும் கற்று கொடுத்தவள். . திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயம் அதற்கு எதிரே அமைந்துள்ள வால்மீகி ஆலயம் மேலும் சிறப்பு..

இறுதியாக சீதை இராகவனோடு சேர்ந்து தற்போதைய தூத்துக்குடி ஸ்ரீ வைகுந்தம் ல் இராகவனோடு முக்தி பெற்றார்.. வால்மீகி வேறுயாருமில்லை மாமுனி அகத்தியர் தான்..

யார் இந்த அகத்தியர்..?
மித்திரவருணனின் புதல்வன் மற்றும் வசிட்டரின் சகோதிரர்..
 லவ-குசனுக்கு குருவும் இவரே..

மித்திரவருணன் யார்?
திருநெல்வேலியில் கோயில் கொண்டுள்ள விசுவாமித்திரர் என்பவரே மித்திரவருணன்.. சகுந்தலை மட்டும் அல்ல வசிட்டர் மற்றும் அகத்தியர் இவர் புதல்வர்களே.. இராவணனின் அரசகுருவும் இவரே..


திரிதாசுயு யார்?
அகத்தியர் மைந்தன்.. உருக்கு வேதம் கண்டறிந்த அகத்தாமன் ( திரித்தவன்) .. ஒலியே கடவுள் என்ற வார்த்தையை மாற்றி உருவமில்லா ஒளியே கடவுள் என்று கூறி கடல் கடந்தவன். ஐய்யனார்-அய்யப்பனின் அரசகுருவான துரோனர் என்னும் திரிதாசுயு.. திரிதாசுயு மைந்தனே ஆதவன் என்ற அசுவத்தாமன் ..


 வசிட்டர் யார்?
தசரதன் என்னும் மயனின் அரச குருவாக விளங்கியவர். இராமன் மற்றும் இலக்குமணனுக்கு குருவும் இவரே..

அகத்தியர்மலை இதுவே விசுவாமித்திரர் பூர்வீகம். . இராவணனை இசைபோரில் வென்று இராவணின் அரசகுருவானவர்..

 தீயர் என்றால் வேடர், அகம் என்றால் உள்புறம்.. அகத்தியர் என்றால் மலையுள்வாழும் வேடரே..

அருத்தகங்கை - பொன்,
வெள்ளிநதிகை-வெள்ளி ,
பரணி-தாமிரம்.. இவையே
சங்ககாலம் குறிப்பிடும் நதிகள்..

அருத்தகங்கை என்றால் காவிரி

அருத்தம் என்றால் பொன் , அகங்கை என்றால் உள்கொண்டவை மற்றும் உள்ளங்கை.. பொன் உள்கொண்ட நதியே காவிரி.. கங்கை என்பது காவிரியே...

அதேபோல். .

கங்காதேவி என்பதும் அகங்கைதேவியே.. உள்ளங்கைகளால் வடிக்கபெறும் கலைகளில் தேவியே கங்காதேவி என்னும் கலைமகள்.. சுரமும்-சுருதியும் சேர்ந்தவளே ஸ்ரசுருதி என்ற சரசுவதி..

ராமன் இசை மட்டுமில்லாமல் வாண சாஸ்திரம்,வாஸ்து சாஸ்திரம் கண்டவர்.. சாஸ்திர இவைகளை புகட்டிய பி ராமன் என்பவர் பிரம்மனே..

இராமன்-பிராமனன் என்னும் பிரம்மன்..இவரது துணைவி சீதை என்பவள் சரஸ்வதியே…. கலைவாணியே..

நவராத்திரி முடிந்த பத்தாம் நாள் விஜயதசமி/ராம்லீலா/சரஸ்வதி பூஜை மேலும் சிறப்பு.. பிரம்மன் மற்றும் கலைமகள் ன் வாழ்க்கை பயணமே இராகபயணம் என்னும் இராமாயணம் .


** *சுபம் ***


நன்றி
வசந்த் வெள்ளைத்துரை
*🎠🗡🛡⚔மகாபாரதம் தமிழ்நாட்டில் நடந்ததற்கான கதாபாத்திர தடயங்கள்⚔🛡🗡🎠 **

அஸ்தினாபுரம் இப்போதும் உள்ள ஆதிநாதபுரம்..
 
குரு வம்சத்து சந்தானு (இராமர் -ரெங்கநாதன்) மணந்தது ... கங்காதேவி  சீதை..(சோட்டனிகரை பகவதி)


திருமணம் செய்யாத பீஷ்மர் அய்யனார்..

சிறுவயதில் உயிர்நீத்த சித்ராந்தன் அய்யப்பன்.. (லவன்)

இரண்டு திருமணம் செய்த முருகன் விசித்திர வீரியன்...(கார்த்திக்கேயன்) அட்சயகுமாரன் சீதையின் சகோதிரன்

வேதவியாசர்-விநாயகர் சீதையின் சகோதிரன்
 
அம்பா இவர் அம்பிகையே..

சிகண்டி-சிவசக்தி..(அர்த்தநாரீஸ்வரர்-
வாசுதேவநல்லூர்)

வள்ளிக்கு (அம்பிகா)  பிறந்த சேரகுறவர் கௌரவர் மன்னன் திருதராஷ்டிரன்- முனீஸ்வரன் 

 துரியோதணன்கள் (சுடலைமாடன்)

 கர்ணன்-கருப்பசாமி..(மாசி பெரியண்ணசாமி)

சகுனி-சங்கிலிகருப்பு..

காந்தாரி-காளி..
மாத்ரி- லலிதா அம்பிகை..
குந்தி -கரு மாரியம்மன்..

தெய்வானைக்கு (அம்பாலிகா) பிறந்த பாண்டியன் பாண்டு..

திருபரங்குன்றம் குமரன் (பாண்டு)..

 குன்றியிருக்கும் 100 சேர மலைநாடு துரியோதணன்கள்- கருப்பசாமிகள்

துச்சலை-இசக்கியம்மன்..

திரிதாசுயு-துரோனர்..
அசுவத்தாமன்-ஆதாம்..

வாசுதேவர்-லக்ஷ்மனன்
நந்தகோபர்-வரதராஜபெருமாள் (பரதன்)

கம்சன்-கும்பகர்ணன்..
தேவகி-ஊர்மிளை..

கோகுலம்-அரியலூர் 

பிருந்தாவனம்-ஸ்ரீவில்லிபுத்தூர் 

துவாரகை -வைகுண்டம்..
துருபதன்-சத்துருகனன்..
பாஞ்சாலி -சத்துருகனன் (சக்கரத்தாழ்வார் ) பெற்ற ஐந்து மகளே.. 

இந்த ஐவரையும் மனந்த ஐந்து குமரன்கள் விஷ்னுவின் மருமகனே..



நன்றி
வசந்த் வெள்ளைத்துரை 

முல்லை-மயன் என்னும் மாயோன், மயனாட்டி-மீனாட்சி

தமிழர்கள் வகுத்த ஐந்திணை நிலங்களில் முல்லை என்ற நிலத்தின் வாழ்ந்த மாயோனை பற்றி தமிழனின் தடயங்களாக பதிவு செய்யபடுகிறது.. மாயோன்-என்பது ம...