செவ்வாய், 2 அக்டோபர், 2018

முல்லை-மயன் என்னும் மாயோன், மயனாட்டி-மீனாட்சி



தமிழர்கள் வகுத்த ஐந்திணை நிலங்களில் முல்லை என்ற நிலத்தின் வாழ்ந்த மாயோனை பற்றி தமிழனின் தடயங்களாக பதிவு செய்யபடுகிறது..

மாயோன்-என்பது மயன்,மாயன்,மாயோன் என வளமை பெற்றது..
மயன்-மாயன் என்றால் வித்தை காட்டும் வித்தகன்..

 *மறைந்த இருகின்ற ஒன்றை காட்டுவது..*

இது சிற்பி என நீங்கள் எளிதில் அடையாளம் கண்டு கொள்ளலாம்..

வெறும் கல்.. ஆனால் அதில் மறைத்த சிற்பத்தை வடிக்கும் வித்தகனே மயன்-மாயன் என்னும் மாயோன்..

*மாயோன் மேயகாடுறை யுலகமும்* முல்லை என தொல்காப்பியம் பதிந்துள்ளது.. யார் இந்த மயன் என்பதற்கு முன்..

முல்லை நிலத்தை கானுவோம்.. முல்லை நிலம்  மலையடிவாரத்தில் உள்ள பகுதிகளே..
முல்லை என்பது ஒரு வகை மல்லிகையே..

மல்லர்கள் வாழ்ந்த மலையடிவார பகுதிகளே முல்லை நிலம்.. அதில் பலர் இருப்பினும் இமயமலை அடிவாரத்தில் இருந்த மல்லர் இங்கிருந்து சென்றவர்களே..

 நே என்றால் இறக்கம் மற்றும் சரிவு
நேவார் என்றால் மலை இறக்கத்தில் வாழ்பவர்கள்.. இவர்கள் வேடர்களே.. காடுகளை காக்கும் வாழ்கை முறை கொண்டவர்கள்.. இவர்கள் இறகுகளை தலையில் முடிசூடி இருப்பர்..

மயனே தமிழர்களின் குமரி கண்டத்தில் வாழ்ந்தவர் என சங்க இலக்கியம் பதிந்துள்ளது..

கட்டடக் கலை
சிற்பக் கலை
ஓவியக் கலை
வானியற் கலை
மரக் கலை
மருத்துவ கலை என அனைத்தும் தந்தவர் இவரே..
இன்றைய நேபாளம் நேவார் என்னும் மல்லர்களால் தூய தமிழ் பெயர்பெற்றதுவே..

இந்த வேடுவ இன குழு தலைவனே இந்த மயன்.. இதனை பறைசாற்றும் வகையில் எஞ்சிய தடயமே இன்றைய மாமல்லபுரம்..

இந்த கருபொருளோடு தொடர்புடையவர்களே மயன் மாயன் மாறன் திருமால் பெருமால் விஷ்ணு..


மயன் மாயோன் என்பவர் வேடுவர் என்பதை நமக்கு பக்தி இலக்கியத்தில் மறைமுகமாக கூறப்பட்டுள்ளது..

அது அவரது துணைவியார் இலக்குமி யே. .  இலக்கு
என்று குறி வைத்து தாக்கும் வேடுவர்களை  குறித்ததுவே இலக்குமி என்னும் வேடுவர்..

திருமால் என்பதும் மயன் என்னும் சிற்பியே.. இசையும் நடனமும் எவ்வளவு பழமையான கலைகளோ அவைகளைப் போல மிகத் தொன்மையானது நமது சிற்பக்கலை. இந்த சிற்பகலையை தந்த தச்சனே மயன் என்னும் மாயோன்.. இராமாயணம் மற்றும் மகாபாரதம் ஒரே காலகட்டத்தில் குமரிகண்டதில் இருந்த போது நடந்தது என்பதற்கு இவரும் ஒரு தடயமே.. அனுமன் போல இவரும் இரண்டு இதிகாசத்திலும் பதிய பட்டுள்ளார்..























மயன் இராவணனின் மாமனார். . மண்டோதிரியின் தந்தையாக இராமாயணத்திலும் மற்றும்   இந்திரபிரஸ்தம் நகரம் பாண்டியர்களுக்காக காண்டவ வனத்தை அழித்த கிருஷ்ணன். .  குமரிகண்டதின் மாயசுரன்.. சிற்பகலைஞர் மயனால் உருவாக்கபட்டது என பதியபட்டுள்ளது.

அந்த இந்திரபிரஸ்தம் என்பது இனித்தபிரசாதமே..

 இன்றைய லட்டு அன்றைய பொங்கல்.. இந்திரபிரஸ்தம் என்பது இன்றைய திருப்பதியே..

இன்னும் திருப்பதி அடிவாரத்தில் விலங்குகள் பலியிட்டு பொங்கல் படையல் கோவிந்தன் தமக்கைக்கு படைக்கபடுகிறது அது கிருஷ்ணனே மற்றும் அடிவாரத்தில் கங்கம்மா என்பது திரௌபதியே..

மயன்-மாயோன்-திருமால் என்பவர் சக்கரம் மற்றும் ரதம் வடித்த தச்சன்.. அவர் தச்சரதன் என்னும் தசசரதனே.. இராமாயணத்தில் பதியபட்டுள்ள தசரதன் இந்த மயனே..

மயன் வடித்தது வாஸ்து சாஸ்திரம் வகுத்த வாண சாஸ்திரம்  தமிழர்கள் உலகிற்கு கொடையாக வழங்கிய மாயன் நாட்காட்டி..

9அடுக்கு படிகள் நாட்புரமும் படிகள் ஒரு திசைக்கு 91படி என 364 மற்றும் மேலே உள்ள கோபுரம் உச்சிபடி என ஒன்றை சேர்த்து 365 நாள் கொண்ட மாயன் நாட்காட்டி யே. .

மயனின் மகளையே இராவணன் மணந்தான்.. அவளே மண்டோதிரி என்னும் மீனாட்சி..

இதனை குறித்த நிகழ்வே மதுரையின் வருடா வருடம் நடக்கும்
சொக்கநாதர் மீனாட்சி திருகல்யாணம்..

கள்ளழகர் என்பது மயனின் புதல்வன் இராமனே.. அரங்கநாதன் என்பவர் இவரே..

ராகு என்பது இராகவன் என்னும் இராமனை குறித்தது.. கேது என்பது கிருஷ்ணனை குறித்தது.. இதனை போன்றே வரதராஜன் என்ற தசரதன் மகன் பரதனை குறித்தது பெருமாள் என்னும் பெயர்..

ராகு-ராகவன்-ராமன் -இராமநவமி..

கேது-மயில் இறகு முடிசூடியவன்-கோகுலஅஷ்டமி..

வரதராஜன் பெருமாள் -பரதன் என்னும் நாட்டை ஆண்ட மன்னனே..

இன்னும் எந்த திருமால் விஷ்ணு  பெருமாள் கோயில்களில் நவகிரகம் சன்னதி என்று உலகில் எங்கும் கிடையாது.. அதற்கு அவர் தலைமேல் குடையாக இருக்கும் ஐந்து தலை நாகமே.. இது ஐந்து தலை ஐந்து கூறுகளை கொண்ட பஞ்சாங்கத்தை குறித்தது..


விஷ்ணு என்பதும் இராமனை இராமனை குறித்த்தது வே (வீத்தனு-வீட்டிணன்).. அதே போல இவர்கள் அனைவரும் வாணியல் மருத்துவம் நன்கு கற்றவர்கள்.. மற்றவர்களுக்கு கற்று கொடுத்தவர்களே..

இதில் மிகவும் முக்கியமான ஒன்று *மயன் - திருமாலின் புதல்வியே..* காட்டின் அரசன் சிங்கம் என வழக்கம் வந்ததும் லட்சுமிநரசிம்மனை வைத்தே.. ஆனாலும் இவை குறிப்பது மயேசுவரியே..

இவர்கள் சின்னம் சிம்மம்.. அதே போல அரி என்ற பட்டபெயரும் மயனுக்கு சூட்டப்பட்டுள்ளது..காரணம் கடல்,காற்று,தீ,வாணம்,மண்,பொண்,விதை,சங்கு,சக்கரம்,அரிவாள், பாம்பு ,ஆயுதம், அரசன் என காக்கும் அனைத்தும் குறித்தது அரி என்னும் மயன் அரசனையே..

ஆக குமரி கண்டத்தில் மயன் ஆட்சியும் மயனின் மகள் மயனாட்டி என்னும் மீனாட்சி ஆட்சி நடந்துள்ளதை இதனை வைத்தே அறிந்து கொள்ள முடியும் இருப்பினும் இதனையும் காண்போம் ..

அதனை போல மயன் சக்கரம் கண்டுபிடித்து இவ்வுலகிற்கு  தந்தமையால் சக்கரவர்த்தி என்றும் சக்கரத்தாழ்வார் என்றும் பெயர் பட்டபெயராக வழக்கம் பெற்றதுவே..

இதன் மூலம் குறிஞ்சி நெய்தல் இடையில் முல்லை இருந்தமையால் கடல் எல்லை முதல் மலை உச்சி வரை காடுகளை ஆண்டுள்ளனர்..

இதனை போண்றே முல்லையில் குயவரும் இந்த மயனே.. இவர் தந்ததே பாணை, கடம் வீட்டில் இருக்கும்  சட்டி முட்டி தொட்டி  எல்லாம் அதன் பட்டபெயரே வீட்டிணன்..

இதன் தொடர்ச்சியாக இன்னும் புதைக்கும் ஈம முறை மயனாலும்.. எரிக்கும் முறை இராவணாலும் குமரி கண்டத்தில் இருந்துள்ளது..

 இதற்கு தடயமாக நெற்றியில் இடும் பட்டை,நாமம் பல வருடங்களாக இதனை அழியாமல் இன்றும் தாங்கி நிற்கிறது.. நாமம் வெள்ளை நிற கோடு பாணை விடிவமும்..இதன் நடுவே சிவப்பு கோடு சவஉடலை   குறித்ததுவே..

பட்டையில் நான்கு கோடு சவஉடலையும் இறுதி வைக்கும் நடுவே பொட்டு சவதுக்கு இறுதில் இடும்  தீயே..

மயன் இசையில்  உச்சத்தின் உச்சமாகவே இன்னும் பிரமிப்பை ஏற்படுத்துகிறார்.. காரணம் கல்லுக்குள் சுரங்களை வைத்து கட்டும் கட்டுமானம் மதுரை திருநெல்வேலி திருச்சி என கோயில்களில்  இன்றும் காண முடிகிறது.. இதுவே இ‌ப்படி இருக்க.. அப்ப குமரி கண்டத்தில் சொல்ல வார்த்தையே இருந்திருக்காது..

 இராமனின் வில் வேட்டைக்கு மட்டும் அல்ல இசைக்கும் இவர் வில்லடித்து பாடும் வில்லுப்பாட்டு காரனே.. முல்லை நிலத்தின் இடையன் இவர்களே கால்நடைகள் மற்றும் காடுகளை காப்பதை தொழிலாக வைத்து கட்டமைக்கபட்டதுவே இந்த முல்லை நிலம்..

மயன் நூல்கள் என பட்டியலிட்டால்.. ஐந்திறம் என்னும் நூல் மிக முக்கியமான ஒன்று..

ஐந்திறம் என்ற நூலை மயன் எழுதியிருக்கிறார்.
காந்த வேதம்,
சப்த வேதம்,
ஸ்தாபத்ய வேதம்,
நாட்டிய வேதம்,
 பிரணவ வேதம்
என்று ஐந்து வேதங்களாகவும்,

நம் தமிழ் ஐந்தமிழ்களாக நமது கலைமரபு இருந்திருக்கிறது . இயல்,
இசை,
நடணம்,
சிற்பம்,
கட்டிடம் ஆகிய ஐந்தும் கொண்டு தமிழ்களுக்கு இலக்கணம் கூறும் நூல் தான் ஐந்திறம்.

அது நமது தொன்மையான நூல். தொல்காப்பியத்திற்கு பாயிரம் வழங்கிய பெரும்பரனார் *‘ஐந்திறம் நிறைந்த தொல்காப்பியன்’* என்று குறிப்பிட்டிருக்கிறார். ஐந்திறம் காலத்தால் தொல்காப்பியத்திற்கு முந்தியது. இவைமட்டுமல்ல


கப்பல் கட்டுவது குறித்து மரக்கலச் செந்நூல், அணுவைப் பற்றிச் சொல்லும் அணுவியல்,
 வானசாஸ்திரம் பற்றிச் சொல்லும் சூரிய சித்தாந்தம்,

 பிரணவவேதம் போன்ற பல நூல்களை இயற்றியவர் இந்த மயனே.

*நுண்வினைக் கம்மியர் காணா மரபின;*
*துயர் நீங்கு சிறப்பின் அவர் தொல்லோர் உதவிக்கு*
*மயன் விதித்துக் கொடுத்த மரபின*

என்று சிலப்பதிகாரத்தில் பதிந்துள்ளது. .


அரியும் சிவனும் ஒன்னு; இதை அறியாதவர் வாயிலே மண்ணு என்பது மயனின் மகளை சிவன் மணந்ததை குறித்ததுவே... அதனை தாங்கி நிற்பதுவே ஐயப்பன் வரலாறு ..

மயனின் மகளான மண்டோதிரி மற்றும் இவளை மணந்த இராவணனை குறித்ததுவே..

இராவணன் சிவனாகவும்
மண்டோதிரி திருமாலாகவும் பின்னாளில்  உருவகபடுத்தபட்டது..

நடராஜ வடிவத்தை உலகுக்கு முதன் முதல் அறிமுகம் செய்தவன் மயன் என்னும் பழந்தமிழ் சிற்பி. இவன் ஓர் அரசன். ஈழத்தின் வடமேற்கே இருக்கும் மாந்தையை தலைநகராகக் கொண்டு உலகின் வடமேற்குப் பாகத்தை ஆண்ட தமிழ் அரசன்.

மயன் ஐந்தொழிலையே (மூலம், சீலம், காலம், கோலம், ஞாலம்) தனித்தொழிலாகச் செய்யும் மூலத்தின் வடிவமே நடராஜத்திருவுரு என்கின்றான்.மாந்தை மயன் இத்திருவுருவைமரகதக்கல்லில் செய்தான்.நடராஜவடிவமும் பீடமும் சேர்த்து ஏழு அடி உயரமான மரகதக்கல்லால் ஆன அத்திருவடிவம் உத்தரகோசமங்கையில் இருக்கிறது.


இந்த நடராஜ வடிவத்தின் தலையில் கங்கை இல்லை. கங்கைபற்றிய எண்ணமும் கருத்தும் தமிழரிடம் பரவமுன்னர் இந்த நடராஜ சிலை செய்யப்பட்டது என்பதற்கு இது ஓர் ஆதாரமாகும். மரகத நடராஜரின் இடையில் புலித்தோலும் இல்லை. இடுப்பிலோ, கழுத்திலோ பாம்பும் இல்லை. இதுவே தொன்மையான நடராஜர் என்பதை இவையாவும் எடுத்துக் காட்டுகின்றன.  அத்துடன்  உத்தரகோசமங்கை இன்றும் 'ஆதிசிதம்பரம்'  என்றே அழைக்கப்படுகின்றது. மாந்தைக்கு வடமேற்கே இருக்கும் உத்தரகோசமங்கை மயனின் ஆட்சிக்கு உட்பட்ட இடமாக  இருந்ததை மாந்தை மாண்மியம் என்னும் நூல் எடுத்து கூறுகிறது..

வீட்டிணன் -வீத்தணு என்பது இராமனே.. இவர் மனைவியே கலைவாணி.. இசையில் புலமை பெற்ற இராகவனே- இராமன்..
இராமன் என்பவர் பிரம்மன்
என்னும் பிராமணனே.. ..

இராமன்-சீதையின் மகன்களே லவன் ஐயப்பன்,குசன்-ஐயனார்..

ஆசோகவணத்தில் இருந்த சீதை என்பவள் இராவணன் புதல்வி அசோகசுந்தரியே..


சங்ககாலப் பெண்புலவரான நெட்டிமையார் புறநானூற்றில் பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதியை

*“செந்நீர்ப் பசும்பொன் வயிரியருக்கு ஈந்த*

*முந்நீர் விழவின் நெடியோன்*

*நன்னீர் ப்ஃறுளி மணலிலும் பலவே”*        *- (புறம்: 9: 9 - 11)*

என வாழ்த்துகிறார்.


பாண்டியன்-சிவன் என்னும் இராவணன் போல சோழன் சூரிய குலத்தவர் என்பது இந்த மயனே..

இதில் விஷ்ணு பின்னாளில் முடி சூட்டபட்ட முதல் சேர மண்ணன்.. இதனை இன்றைய
 கேரளமாக உள்ள பண்டைய சேர நாட்டில் மயன் மரபுத் தாக்கம் அதிகமாக காணலாம். கேரள மாநிலத்தில் மரவேலை செய்யும் சிற்பிகளை அதாவது, தச்சர்களை இன்றும் மயாச்சாரிகள் என்று அழைப்பதுண்டு.

குமரிக்கண்டத்தில் வாழ்ந்த இந்த மயன் இவர் வழி தோன்னலான விஷ்னு (இராமன்) தமிழர்கள் இலக்கியம், இலக்கணம், அறிவியல்,இசை, வானியல், சோதிடம், மருத்துவம், தத்துவம், நுண்கலைகள், கைவினைக் கலைகள் ஆகிய பல்வேறு துறைகளில் தேர்ச்சி பெற்று விளங்கினர் என்று அறிய முடிகிறது.

சூரியகுலத்தில் விஷ்னுவை  போண்றே ஐயப்பனும் அரசனாக முடிசூட்டபட்டார்..

மயனின் வரலாற்று எச்சங்களை குமரி மாவட்டத்திலும், கேரள மாநிலத்திலும் இன்றும் நாம் ஏராளமாக காண முடியும் . மலையாளம் மொழி தோற்றத்திற்கு முன்பே சேர நாடான மலைநாட்டில் மயன் பற்றிய பல தகவல்கள் சிதறி கொட்டி கிடக்கின்றன. குமரி மாவட்டத்தில் மயன் வாழ்ந்த மயன்பறம்பு உள்ளது. கேரளத்தில் மயன் ஆண்டு வந்த மயநாடு (மய்யநாடு) உள்ளது.

வின்னவர் என்னும் வைணவர்கள் இந்த மயன் வழி தோன்றியவர்களே. இந்த தேவர்களின் புதல்வியை தெய்வானையை மணந்தவரே முருகன்..இதனையே திருமுருகாற்றுப்படை மாயோன் மருகன் என்று பதிந்துள்ளது.. இவளையே மகாபாரதம் திரௌபதியாக பதிந்துள்ளது..

நாகர் இனத்தின் தோன்றிய இடையர் குல ஆயனே நாராயணன்.. முல்லையில் முதன்முதலாக சாழை அமைத்து வாழ்ந்தவரே இந்த சோழர்கள்..அதே போல வீட்டிணன் என்பது வாசன் என்பதும் ஒர் இடத்தில் வாசம் செய்பவன் என்றே பொருள் இதுவே பின்னாளில் திருவாசன் என்னும் ஸ்ரீனிவாசன்.. நிவாஸ் என்றால் வீடு என தோன்ற தமிழே மூலம்..கோவிந்தன் என்றால் இடையர் குல அரசன் என்பதுவே..

புரவிஎடுப்பு விழா என தமிழகத்தில் இதனை முல்லை நில பகுதியில் காணமுடிகிறது.. கிராமங்களில் ஊர் காவல் தெய்வமாக ஊர் மத்தியில் புரவி வைக்கும் மரபும் காலம் காலமாக உள்ளது.. இந்த மய வழிபாடுடன் புரவி நேர்த்திகடனாக இன்றைய ஐயனார் கோவில்களில் செலுத்துவதை இன்றும் காணலாம்.

முல்லை நில கிராமங்களில்  திருவிழா எடுக்கும் முன்னதாக மண் குதிரைகளை செய்யும் சிற்பிகள் வீட்டில் கோயிலுக்கு தேவையான குதிரைகள் உட்பட சுவாமி சிற்பங்கள் செய்யப்படும். பின்னர் மேளதாளம் முழங்க கிராமத்தில் இருந்து கிராம மக்கள் புறப்பட்டு குதிரை செய்யும் இடத்துக்கு சென்று அங்கு குதிரைக்கு கண்திறக்கும் வழிபாடு செய்வர் பின்னர் புரவியோடு கிராமத்தை சுற்றி வருவார்கள்..

இராவணன் பஞ்சங்க நூலை வைத்து மயன் வாஸ்து சாஸ்திரம் கண்டது.. மயனின் வாஸ்து சாஸ்திரம் மற்றும் இராவணன் பஞ்சாங்க நூலை வைத்து தான்  இராமன்(விஷ்ணு) வானசாஸ்திரம் படைத்தார்.. (இதுவே இன்று விஷ்னு பஞ்சாங்கம்)..

மதுரை (விஷ்னு)கள்ளழகர்-ஆற்றில் இறங்குவது சொக்கநாதன் -மீனாட்சி திருமணம்.. திருமால் கைபட  மணமுடிப்பது.. மயன் சிவன் விஷ்னு மீனாட்சி யாவர் என அடையாளம் காண முடிகிறது..


சொர்கம் என்பது மயன் வடிவமைத்த நகரங்களையே..
திரிபுரம்,அழகாபுரி,இந்திரபிரஸ்தம் என நகரங்கள் இன்னும் தமிழக எல்லையில் இருப்பதை காணலாம்..

இந்த சொர்க வாசல் திறப்பு  சூரியன்    வீத் *தனு* சு இராசியில் புகும் மாதமான மார்கழியில் வைணவர்களின் புனித மாதமாகவும் போற்றி கொண்டாட படுகிறது.. துவாரகை என்பதும் விஷ்னு,கிருஷ்ணன் முக்தியடைந்த இடமே அது இன்றைய கொற்கை அருகே உள்ள வைகுந்தம் என்னும்  வைகுண்டம்.. வைகுண்ட ஏகாதேசி - சொர்க்க வாசல் திறப்பே..

நன்றி




🙏வசந்த் வெள்ளைத்துரை🙏

முல்லை-மயன் என்னும் மாயோன், மயனாட்டி-மீனாட்சி

தமிழர்கள் வகுத்த ஐந்திணை நிலங்களில் முல்லை என்ற நிலத்தின் வாழ்ந்த மாயோனை பற்றி தமிழனின் தடயங்களாக பதிவு செய்யபடுகிறது.. மாயோன்-என்பது ம...