செவ்வாய், 18 செப்டம்பர், 2018

பாலை-அவ்வை என்னும் கொற்றவை



தமிழனின் தடயங்கள் இன்னும் எங்கோ ஒரு இடத்தில்  புதைந்து கிடக்கிறது அதனை பல்வேறு வழிகளில் பலர் இவ்வுலகிற்கு எடுத்துரைத்தாலும் இதில் உள்ள வேர்களின் ஆழம் மிக நீண்டது..

முன்பே இதனை முல்லை நெய்தல் மருதம் குறிஞ்சி என தொல்காப்பியம் தரவுகள் நாம் இன்றும் கடைபிடிக்கும் பண்டிகைகள் வழக்கங்கள் மற்றும்  இலக்கியம்,புராணம், இதிகாச தடயங்கள் என இங்கு போற்றபட்டவர்கள்..

மற்றும் இதன் தெய்வங்கள் யார் யார் என தெளிவாக விவரித்தது போல பாலை என்ற திணையும் இங்கு உண்டு..

இதன் காலம் தொண்மையான குமரி கண்டம் என்பதுவே.. நால்வகை தீவே நாவலந்தீவு..
இதில் ஐந்தாம் திணையான பாலை அனைத்து திணைகளிலும் உள்ளது..

இந்த உலகில் மதங்கள்  பல உண்டு அவ்வாறு திரிய காரணம் மடம்.. பல்வேறு காலகட்டங்களில் பலரால் தோற்றுவிக்கபட்டு கட்டமைக்கபட்டதே..

மடம்-மதம்-மயம்-சமயம் என தோற்றத்தை தமிழில் எளிதாக கண்டுபிடித்து விடலாம்..

இந்த கட்டமைப்பு உள் சென்றால் வழிமுறைகள் இதில் கடைபிடிக்கும் நெறிமுறைகள் பல தெரியும்.. ஆனால் தமிழர்களின் இந்த
திணை வாழ்வியலை வைத்தே
உலகில் பல மடங்கள் கிளைகளாக பிறந்தது அதில் உலகிற்கு என்னற்ற நல்வழிகளை சொன்னவர்கள் கடவுளாக இன்று போற்றபடுவர்கள்.. இவர்கள் மடம் என்னும் இடத்தை மட்டும்  நிறுவவில்லை மக்களின் மனதில் தங்களுக்கு என இடத்தை தக்கவைத்துக் கொண்டவர்கள்...

ஆறுமார்கத்தை உள்ளடக்கிய ஏழாவது மார்கம் என கொண்ட ஆசீவகம் (சித்தர் வாழ்வியல்)  பிறப்பதற்கு முன்பே தமிழ் திணைகளில் இயற்கை மற்றும் இறந்தோர் வழிபாடுகள்  பிறந்துவிட்டது..
இதன் பின்னர் தோன்றிய  மற்ற மடங்களிலும் (மதங்களிலும்) தமிழின் தாக்கம் இருப்பதையும் பல புராணங்கள் ஒன்று போல் மற்ற மார்கங்களில் இருப்பதை காணலாம்.. அதே போல அவர்கள் மூதாதையர் என குறிப்பிடுவது குமரி கண்டத்து மக்களே. .

பாலை திணை இறந்தோர் வழிபாடு மட்டும் அல்ல இயற்கை வழிபாட்டை இசையோடு உள்ளடக்கியது..

பாலை நிலம் சுரமும் சுரம் சார்ந்த இடமும் ஆகும். சுரம் என்பது வறண்ட, பயனற்ற வெயில் கொளுத்தும் காட்டுப் பகுதியைக் குறிக்கும். எனவே பாலை எனத் தனி ஒரு நிலப் பகுப்பு இல்லை. வறட்சியின் காரணமாகவே பாலை நிலம் தோன்றுகிறது. என என்பது போல இசை தோன்றிய நாண்கு திணைகளிலும் குறித்தது பாலை திணையே..

கொற்றவை என்றால்  பார்வதி என்று பொருள் இது   குறிஞ்சியில்..
கொற்றவை என்றால் மயேசுவரி என்று பொருள் இது முல்லையில்..
கொற்றவை என்றால் வேதநாயகி என்று பொருள் இது மருதத்தில்..
கொற்றவை என்றால் மாரி என்று பொருள் இது நெய்தலில்..
கொற்றவை என்றால் காளி என்று பொருள் இது பாலையில்..

குறிஞ்சி-வெட்சி
முல்லை-வஞ்சி
மருதம்-உழிஞை
நெய்தல்-தும்பை
பாலை-வாகை
கைக்கிளை-பாடாண்
பெருந்திணை-காஞ்சி

ஆக இந்த அகத்தினை மற்றும் புறத்திணைகளில் ஏழு பெண் தெய்வ வழிபாடு என்பதே சப்தகன்னி வழிபாடு.. இவர்களே பாவை என்னும் அவ்வை (ஔவையார்கள்)...


















அவ்வை என்றால் சங்க காலத்தில் பல்வேறு காலகட்டங்களில் பண் பாடல் தந்து வாழ்ந்த வயதான பெண் புலவர்களை குறித்தது இந்த சப்தகன்னி யில் இருந்து தான்..

இதனை விரிவாக பார்க்கும் முன் பாலை நிலத்தின் தெய்வமாகிய கொற்றவை யார் என்பதை கண்டுகொள்வோம்.. பாலை நிலத்தின் தெய்வம் கொற்றவை இராவணன் மனைவி மண்டோதிரி.. இவள் மயனின் மகளே..

அதே போல மண்டோதரி என்றால் மண் தோத்தரம் (மண்ணையும் மன்னனையும் புகழ்ந்து பாடுவது).. மண்டோதிரி என்றாள் மண்ணையும் மன்னனையும் புகழ்ந்து பாடுபவள் என்றே பொருள்..

பெண் தெய்வம் வழிபாடு என்பது நம் வழிபாடுகளில் மிகவும் முக்கியமானது...
இதனை இந்து மதம் சக்தி வழிபாடாக கட்டமைத்தது சிறிது காலம் முன்பு தான்
ஆனால் இதற்கு முன் தேவி வழிபாடு மற்ற மதங்கள்
பிறப்பதற்கு முன்பே தோண்றியது..

இதில் மற்ற மதங்களில் மறைமுகமாக இருப்பதை இன்றும் நாம் அறியலாம்.. மேரியை இயேசுவின் தாயாக கருதி தாய்மையை போற்றும் வழிபாடாக கிருஸ்துவம் இருக்கிறது.. உருவ வழிபாடு இல்லாத இஸ்லாம் என்பது தூய பெண் தெய்வ வழிபாடே இதனை அவர்களின் கடைபிடிக்கும் வழங்களில் நாம் எளிதில் காணலாம்..

இவையெல்லாம் குறிஞ்சி திணையில் இருந்து பிறந்த பெண் தெய்வ வழிபாடுகள்..
வேட்டை சமூகமான குறவர் வழிபாட்டில் அமாவாசை அன்று இறந்தோர் வழிபாடு செய்வது போல பெளர்ணமி அன்று சூல வழிபாட்டை காணலாம்..

 இறந்த பெணகளை தங்கள் குலம் காப்பவர்களாக கருதி
வழிபடும் முறை.. அதே போண்று பெண்கள் நிலவாக நதியாக மண்ணாக காண்பது நமது தமிழ் மண்ணில் தோன்றியதே.. பெளர்ணமி வழிபாடு பிரிதலும், பிரிதல் நிமித்தமும் என பாலை திணையின் உரிபொருள்..

அமாவாசை அன்று சூரியனும் சந்திரனும் சேரும் அதே பவுர்ணமி அன்று சூரியனை விடுத்து பிரிந்து நிலவு நெடுந்தூரம் செல்லும்..
அதே போல உருவமில்லா இஸ்லாம் மார்கம் நிலவை அடிபடையாக கொண்டே அணைத்தும் கட்டமைக்கபட்டள்ளது..

அதே போல அம்மன் தேவி சூல வழிபாடுகள் பௌர்ணமியை மட்டும் அல்லாது நாட்களில் வெள்ளிகிழமையை தக்கவைத்துக் கொண்டுள்ளது.. இதனை போன்றே வெள்ளிகிழமை தவறாமல் வழிபடும் முறையை இஸ்லாமிய சமயம் நம்பிக்கையாக கொண்டுள்ளது.

இந்த தாய் தெய்வம் வழிபாடு என்பது பிற்காலத்தில் வாழ்ந்த ஔவைகள் தங்கள் வரிகளில் பதிந்துள்ளதை நாம் காணலாம் *தாயை சிறந்த ஒரு கோயிலும் இல்லை* என பெண்ணை தெய்வதோடே இனைத்திருக்கின்றனர்..

அதே போல மற்ற சமயம் மார்கத்தோடு இந்த சக்தி வழிபாட்டை அவ்வளவு எளிதாக சேர்க்க முடியாது யாராலும் பின்பற்றுவது என்பது கடிணமே..

சக்தி வழிபாட்டில் உடலை வருத்தி செய்வது என்பது ஆண்களை விட பெண்கள் அக்காலத்தில் எவ்வளவு வலிமையானவர்கள் என நன்றாக புரிந்துகொள்ள முடியும்..

அதே போன்றே குறிஞ்சியில் மலைமகளான பார்வதி என்பது வார்வதியே.. இதனை சூல வழிபாடு மட்டுமல்லாமல் குறி சொல்ல முன் அவர்கள் அருள்வாக்கு தர குப்பிடும் வழக்கத்தில் காணலாம்..

குறி மட்டும் அல்ல பக்தியில் சாமி வந்து ஆடுவது.. வேம்பு மரத்தை வழிபடுவது.. மஞ்சள் நீரிட்டு  என உடுக்கை அடித்து குறி சொல்வது என அம்பிகை என ஈஸ்வரி என வழக்கங்கள் இன்று அழியாமல் பல ஆண்டுகள் கடந்து வந்துள்ளது..

அதனை போண்றே தச்சர் குறவர் கொல்லர் வழிபாட்டை இதன் தீசட்டி ஏந்தும் சாயலில் காணலாம்.. இதனை முல்லை நிலத்தில் அதிகம் காணமுடியும்..

 மஞ்சள் நீரிட்டு ஆடுகள் காணிக்கை செலுத்துவது பொங்கல் வைப்பது மட்டும் அல்ல அக்காலத்தில் குறி சொல்லும் முல்லை நிலத்தவர் கையில் சக்கரத்தை பச்சைகுத்தி வைத்திருப்பது என இதன் ஆழம் சங்கு சக்கரத்தோடு
காட்சி தந்து துடிக்கை அடித்து குறி சொல்லும் துர்கையோடு சேர்ந்திருக்கிறது..

வாளோடு காட்சி அளிக்கும் அரசியாக அம்பிகை அம்பாள் என போற்றபட்டது ஒரு பெண் அரசியே..

 மருதநிலத்திலத்தில் வரண்ட காலங்களில் கரகமாக எடுத்து நீரோடு மழை வேண்டியே அம்மனை வழிபடுவது என்பது வேதநாயகியான இந்த கொற்றவையே.. இதனை இந்தபகுதியில் நடைபெறும் தீமிதி திருவிழாவில் காணலாம்..

 அதனை போன்றே இங்கு கும்பம் கரகம் என மண்ணையும் நீரையும் வழிபடுவது இதனை சுமந்து வந்து ஊர் கூடி கொண்டாடுவது என நீரை வழிபடும் மக்கள் தமிழ் தொண்மையான இயற்கை வழிபாடை காணலாம்..

நெய்தலில் காணும் வழிபாடும் இந்த மூன்றையும் சேர்த்தே உள்ளது தீசட்டி கடலன்னை வழிபாடு கரகம் எடுத்து கடலில் பூஜை செய்வது ,தீமதி திருவிழா என போற்ற முத்துமாரியம்மன் என நெய்தலின் முத்தோடு இருப்பதை காணலாம்..

அது மட்டும் அல்லாது எந்த தாயும் ஒரு குழந்தை பசியோடு இருப்பதை விரும்பமாட்டாள்.. ஆடி மாதம் காற்றின் வேகம் அதிகமாகயிருக்கும் கடலுக்குள் செல்ல இயலாது.. இக்காலத்தில் கூல் ஊற்றி முல்லை மருதம் மக்கள் நெய்தல் மக்களுக்கு உணவளித்ததே ஆடி மாதம் முழுவதும் கூல் ஊற்றுவது... ஒரு திணை மக்களுக்கு உணவளிக்க பண்டிகை திருமணம் என அனைத்து நல்லவையும் தள்ளி வைத்து தமிழனால் இன்றும் அழியாமல் பாரம்பரியமாக வந்துள்ளது..

கொற்றவை என்னும் இவள் ஆண்ட இந்த நிலபரப்பே குமரி கண்டம்.. அவளே குமரியை ஆண்ட மண்டோதிரி என்னும் மீனாட்சி அம்மன்..

ஏழு சுரமும் சப்தகன்னியும் கொட்டும் முரசும் கொற்றவை..


தமிழ் இலக்கியத்தில் பார்வதியை-மலைமகள், கொற்றவை, பழயோள் என திருமுருகாற்றுப்படை பதிந்துள்ளது..


மலைமகள் மகனே! மாற்றோர் கூற்றே!

வெற்றி வெல் போர்க் கொற்றவை சிறுவ!

இழை யணி சிறப்பின் பழயோள் குழவி!

பழணம் என்றால் மருதநிலம் கொண்ட வயல் பரப்பு.. பழயோள் என்றால் வயல் நிலம் கொண்டவளே..


திருவாசகமோ கொற்றவையை  என தெளிவாக விவரித்துள்ளது..

*இயக்கி மார்அறு பத்து நால்வரை*
    
*எண்குணம் செய்த ஈசனே*

*மயக்க மாயதோர் மும்ம லப்பழ*
    
*வல்வி னைக்குள் அழுந்தவும்*

*துயக்க றுத்தெனை ஆண்டு கொண்டுநின்*

    *தூய்ம லர்க்கழல் தந்தெனைக்*

*கயக்க வைத்தடி யார்மு னேவந்து*

    *காட்டினாய் கழுக் குன்றிலே*

இயக்கி என்பது சக்தி தோற்றமே சப்தகன்னியர் மற்றும் பார்வதி இந்த எட்டு பேரே எட்டு திசைகளை குறித்தவர் இதன் எட்டு வடிவ பெருக்கமே (8×8)  ஆறுபத்திநான்கு.. சக்திகள் இது எட்டு திசைகளை குறித்தது..

புராணத்தில் முருகனை காத்து வளர்த்து 6 செவிலி தாய் மற்றும் கங்கை..
என்பவர்களே சப்தகன்னியர் எட்டவது பார்வதியோடு சேர்த்துவே சக்தி வடிவமே இவர்கள் எட்டுதிசையும் காக்க
கற்று தந்த கலையே ஆயகலைகள் ஆறுபத்தி நான்கு முருகனுக்கு.. . இதனை முருகனின் புராணங்களில் மறைமுகமாக நமக்கு கொடுக்கபட்ட செய்தியே..


கங்கை என்பது அங்கை என்னும் அங்காளம்மன் நாகர் குல மலைமகள்.. 

இதனை தொடர்ந்து வரும் எல்லையம்மன் 
பேய்ச்சியம்மன்
முப்பிடாரியம்மன்
காளியம்மன்
பிடாரியம்மன்
பத்திரகாளியம்மன்
என சப்தகன்னிகளை ஊர்களில் இன்றும் வணங்கி வருவதை காணலாம்..

சப்தகன்னி வழிபாடு அதிகமாக மருதநிலத்தில் தவறாமல் காணலாம்.. இதனோடு கருப்புசாமி அல்லது ஐயனார் வழிபாடு ஊர்களில் சேர்ந்தே இருக்கும்..

இது குறவர் வழிபாடான குறிஞ்சி திணையில் இருந்து  வந்த குறவர் யக்கர்கள் என பல்வேறு சமுகத்தினரும் கடைபிடித்த அமாவாசை அன்று கருப்பு வழிபாடும்..
பௌர்ணமி அன்று சக்தி வழிபாடும்..

 இந்த சப்தகன்னியர் வழிபாடு என்பது
முளைப்பாரி போட்ட மறுநாளில் இருந்து வீட்டின் முன்பு வட்டமாக நின்று கொண்டு பெண்கள் கும்மியடிப்பார்கள். இந்த கும்மி ஓசை எழுப்புவது போல் முளைப்பாரியும் முளைத்து வெளிவரும் என்று நம்பிக்கை. அதில் இருந்து ஒன்பதாம் நாளில் இவ்வாறு பாதுகாத்த முளைப்பாரியை ஊர் பொது இடத்தில் வைப்பார்கள்.

பின் அந்த முளைப்பாரிகளை சுற்றி வட்டமாக பெண்கள் நின்று பாடலுடன் கும்மி கொட்டுவர். இன்னொரு பக்கம், அனைவரும் பார்க்கும் வண்ணம் ஒயிலாட்டம், பறையாட்டம், சிலம்பாட்டம், புலியாட்டம் என்று பாரம்பரிய கலைகளை சிறுவர்களும், இளைஞர்களும் செய்து காட்டுவர். அந்த முளைப்பாரியை தூக்கியபடி இதே ஆரவாரத்துடன் ஊர் முழுக்க சுற்றி வருவார்கள். பின் ஊரே ஒன்றுகூடி பொங்கல் வைத்து, கொழுக்கட்டை, மாவிளக்கு, துள்ளுமாவு, இளநீர், பானகம், நீர்மோர், வேப்பிலை கரகம் வைத்து பெண் தெய்வத்திற்கு படைப்பர்

இந்த கும்மியடித்து குளவையிடுவது சப்தகன்னியர்களை மற்றும் அம்மனை எட்டு திக்கில் இருந்து வரவேற்பதே..

இந்த குளவை சத்தம் கும்மி கொட்டும் முளைப்பாரி எடுக்கும் மருதத்தில் மட்டும்
அல்ல குறிஞ்சி முல்லை நெய்தல் என பெண்கள் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு நாட்களில் கும்மிகொட்டி குளவையிடுவதை காணலாம்..


*கொற்றவைக்குரியதாகலின் கடவுள் வாகை எனப்படும். மென்பூ வாகைப் புன்புறக் கவட்டிலை* - அகநானூறு . 136; 10

 *மல்குசுனை உலர்ந்த கல்கூர் சுரமுதல்குமரி வாகைக் கோலுடை நறுவி மடமாங் தோகைக் குடுமியின் தோன்றும் கான நீளிடை* -குறுந்தொகை. 347:1-4 " 

*போர்படு மள்ளர் போக்தொடு தொடுத்த கடவுள் வாகைத் துய்வி ஏய்ப்ப பூத்த முல்லை புதல் சூழ் பறவை* -பதிற்றுப்பத்து  66:14-16

*கூகைக் கோழி வாகைப் பறந்தலை*-குறுந்தொகை 303:3

*வாகை வெண்பூப் புரையும் உச்சிய தோகை* -பரிபாடல்.14:7-8 

*அத்தவாகை அமலைவால் கெற்று அரி.ஆர் சிலம்பின் அரிசி ஆர்ப்பக் கோடை தூக்கும் கானம்*-குறுந்தொகை 369:13 

*கயிறாடு பறையின் கால்பொரக் கலங்கி வாகை வெண்ணெற்று ஒலிக்கும் வேய்பயில் அழுவம் முன்னியோரே* -குறுந்தொகை , 7:3-6 

பாலைக்கு உரியது வாகையே..
வாகை-என்றால் வெற்றி 

வாகை மரம் சித்த மருத்துவத்தில் வீக்கம், கொப்புளம் வடிதலுக்கு மருந்தாகப் பயன்படுத்தப் படுகிறது.

வாகை என வெற்றி கொட்டே இக்கும்மியும் குளவையும்..
இது பின்னாளில் வெற்றியின் கொட்டாக கைதட்டல் விசில் என தமிழின் மூலம் கொண்ட வளர்ச்சியே..

வாகை மலர்ச்சூடுதல் வெற்றிக்களிப்பை உணர்த்தும் பாலை திணைக்கு உரிபொருளான பூ இதனை தொல்காப்பியம் பதிந்துள்ளது .

*மறங்கடைக் கூட்டிய குடிநிலை சிறந்த* 

*கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே*


சப்தகன்னிகள் என்றதும் ஏழு பெண் உருவங்கள் என நினைவிக்கு வரும்.. அதே போல ஏழு வண்ணங்கள், ஏழு சுரம் என ஏழு என வர கங்கையோடு சேர்த்த ஆறு கன்னிகளே..

இதனை புராணம் பல்வேறு காட்சிகளில் நமக்கு சிறப்பாக சித்தரித்தும் இதன் பொருள் இன்று வரை தவறாகவே பதிந்துள்ளது..

சித்தமருத்துவம் பல நோய்களுக்கு அக்காலத்தில் மருந்துகா இருந்தாலும்.. அம்மைக்கு வேம்பும் மஞ்சளும் மருந்தாக இருந்தது..

வேம்பை கடவுளாக வழிபட்ட மக்கள் இதனை மகமாயி என உருவகபடுத்தினர்.. ஊரில் அனைத்து மத்திய பகுதியிலும் ஊரை நோய்களின் இருந்து காக்க வேம்பு வழிபாடு இருப்பதை காணலாம்..


இதன் தொன்மை  காமாரி.. உடலில் உண்டாகின்ற கொப்புளங்களை ஆற்றுவது  கருமாரி என நோய் தீர்க்கும் சித்த மருத்துவரே..


ஏழு வண்ணங்கள் இதன் கலைகளில் ஏழு நிலைகளை குறிக்க பிற்காலத்தில் குருகுலம் வளர்த்த சித்தர்கள் கையாண்டனர்.. சப்தகன்னிகளே குருகுலம் மருத்துவம் தந்த பென்சித்தர்கள்..


இன்னும் சரஸ்வதி என்பது வீணையுடன் வீற்றிருக்கும்  பிரம்மினின் கலைவாணி.. சரம் என்றால் சேர்த்து தொடுப்பது.. சரவதியே சரஸ்வதி என்று இன்று வழக்கத்தில் இருப்பது  இந்த சப்தகன்னிகளே.. இதனை ஒரே கல்லில் பின்னாளில் வடித்த சப்தகன்னி வழிபாட்டில் காணலாம்..

நெடில் எழுத்தான
ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ
ச ரி க ம ப த நி
இதுவே இசைக்கான மூலம்..இவை உணர்ச்சிகளின் வெளிபாடு.. இதனை கோர்பதே இசை..

சரஸ்வதி என்பது கல்விகான கடவுளாக இருக்க காரணம் இவளே ஆய கலைகள் 64 க்கும் கலைமகள்.. இந்த கங்கை என்னும் சரஸ்வதியே இராமாயணம் காட்டிய சீதை.. இவள் இராவணன்-மண்டோதிரி மகளே..

இதனை வழியுறுத்தி சிம்மத்தில் இருந்து சூரியன் புகும் ஆறாவது மாதம் புரட்டாசி என ஆறுகன்னிகள் சிறப்பித்தனர் சோதிடத்தில் இந்த ஆறு கன்னிகளே கன்னிராசியாக  குறித்தனர்.. வடக்கில் சிம்ம வாகணத்தில்
அமர்ந்த துர்கையாக பக்தி இலக்கியத்தில் பதியபட்டது. .


புரட்டாசி மாதத்தில் வரும்  வளர்பிறைப் பாட்டிம்மை முதல் நவமி வரை ஒன்பது நாளும் அனுட்டிக்கப்படும் நவராத்திரி  நோன்பு இறுதி நவமியில் சரஸ்வதி பூஜை என்பது கன்னிமார்களை வணங்குவதே..அன்றே குழந்தை கல்வி சேர்க்கை என பல இன்று கட்டமைக்க பெற்றது இதன் கருபொருளே..



முற்றும்..


நன்றி
🙏வசந்த் வெள்ளைத்துரை🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முல்லை-மயன் என்னும் மாயோன், மயனாட்டி-மீனாட்சி

தமிழர்கள் வகுத்த ஐந்திணை நிலங்களில் முல்லை என்ற நிலத்தின் வாழ்ந்த மாயோனை பற்றி தமிழனின் தடயங்களாக பதிவு செய்யபடுகிறது.. மாயோன்-என்பது ம...