செவ்வாய், 2 அக்டோபர், 2018

முல்லை-மயன் என்னும் மாயோன், மயனாட்டி-மீனாட்சி



தமிழர்கள் வகுத்த ஐந்திணை நிலங்களில் முல்லை என்ற நிலத்தின் வாழ்ந்த மாயோனை பற்றி தமிழனின் தடயங்களாக பதிவு செய்யபடுகிறது..

மாயோன்-என்பது மயன்,மாயன்,மாயோன் என வளமை பெற்றது..
மயன்-மாயன் என்றால் வித்தை காட்டும் வித்தகன்..

 *மறைந்த இருகின்ற ஒன்றை காட்டுவது..*

இது சிற்பி என நீங்கள் எளிதில் அடையாளம் கண்டு கொள்ளலாம்..

வெறும் கல்.. ஆனால் அதில் மறைத்த சிற்பத்தை வடிக்கும் வித்தகனே மயன்-மாயன் என்னும் மாயோன்..

*மாயோன் மேயகாடுறை யுலகமும்* முல்லை என தொல்காப்பியம் பதிந்துள்ளது.. யார் இந்த மயன் என்பதற்கு முன்..

முல்லை நிலத்தை கானுவோம்.. முல்லை நிலம்  மலையடிவாரத்தில் உள்ள பகுதிகளே..
முல்லை என்பது ஒரு வகை மல்லிகையே..

மல்லர்கள் வாழ்ந்த மலையடிவார பகுதிகளே முல்லை நிலம்.. அதில் பலர் இருப்பினும் இமயமலை அடிவாரத்தில் இருந்த மல்லர் இங்கிருந்து சென்றவர்களே..

 நே என்றால் இறக்கம் மற்றும் சரிவு
நேவார் என்றால் மலை இறக்கத்தில் வாழ்பவர்கள்.. இவர்கள் வேடர்களே.. காடுகளை காக்கும் வாழ்கை முறை கொண்டவர்கள்.. இவர்கள் இறகுகளை தலையில் முடிசூடி இருப்பர்..

மயனே தமிழர்களின் குமரி கண்டத்தில் வாழ்ந்தவர் என சங்க இலக்கியம் பதிந்துள்ளது..

கட்டடக் கலை
சிற்பக் கலை
ஓவியக் கலை
வானியற் கலை
மரக் கலை
மருத்துவ கலை என அனைத்தும் தந்தவர் இவரே..
இன்றைய நேபாளம் நேவார் என்னும் மல்லர்களால் தூய தமிழ் பெயர்பெற்றதுவே..

இந்த வேடுவ இன குழு தலைவனே இந்த மயன்.. இதனை பறைசாற்றும் வகையில் எஞ்சிய தடயமே இன்றைய மாமல்லபுரம்..

இந்த கருபொருளோடு தொடர்புடையவர்களே மயன் மாயன் மாறன் திருமால் பெருமால் விஷ்ணு..


மயன் மாயோன் என்பவர் வேடுவர் என்பதை நமக்கு பக்தி இலக்கியத்தில் மறைமுகமாக கூறப்பட்டுள்ளது..

அது அவரது துணைவியார் இலக்குமி யே. .  இலக்கு
என்று குறி வைத்து தாக்கும் வேடுவர்களை  குறித்ததுவே இலக்குமி என்னும் வேடுவர்..

திருமால் என்பதும் மயன் என்னும் சிற்பியே.. இசையும் நடனமும் எவ்வளவு பழமையான கலைகளோ அவைகளைப் போல மிகத் தொன்மையானது நமது சிற்பக்கலை. இந்த சிற்பகலையை தந்த தச்சனே மயன் என்னும் மாயோன்.. இராமாயணம் மற்றும் மகாபாரதம் ஒரே காலகட்டத்தில் குமரிகண்டதில் இருந்த போது நடந்தது என்பதற்கு இவரும் ஒரு தடயமே.. அனுமன் போல இவரும் இரண்டு இதிகாசத்திலும் பதிய பட்டுள்ளார்..























மயன் இராவணனின் மாமனார். . மண்டோதிரியின் தந்தையாக இராமாயணத்திலும் மற்றும்   இந்திரபிரஸ்தம் நகரம் பாண்டியர்களுக்காக காண்டவ வனத்தை அழித்த கிருஷ்ணன். .  குமரிகண்டதின் மாயசுரன்.. சிற்பகலைஞர் மயனால் உருவாக்கபட்டது என பதியபட்டுள்ளது.

அந்த இந்திரபிரஸ்தம் என்பது இனித்தபிரசாதமே..

 இன்றைய லட்டு அன்றைய பொங்கல்.. இந்திரபிரஸ்தம் என்பது இன்றைய திருப்பதியே..

இன்னும் திருப்பதி அடிவாரத்தில் விலங்குகள் பலியிட்டு பொங்கல் படையல் கோவிந்தன் தமக்கைக்கு படைக்கபடுகிறது அது கிருஷ்ணனே மற்றும் அடிவாரத்தில் கங்கம்மா என்பது திரௌபதியே..

மயன்-மாயோன்-திருமால் என்பவர் சக்கரம் மற்றும் ரதம் வடித்த தச்சன்.. அவர் தச்சரதன் என்னும் தசசரதனே.. இராமாயணத்தில் பதியபட்டுள்ள தசரதன் இந்த மயனே..

மயன் வடித்தது வாஸ்து சாஸ்திரம் வகுத்த வாண சாஸ்திரம்  தமிழர்கள் உலகிற்கு கொடையாக வழங்கிய மாயன் நாட்காட்டி..

9அடுக்கு படிகள் நாட்புரமும் படிகள் ஒரு திசைக்கு 91படி என 364 மற்றும் மேலே உள்ள கோபுரம் உச்சிபடி என ஒன்றை சேர்த்து 365 நாள் கொண்ட மாயன் நாட்காட்டி யே. .

மயனின் மகளையே இராவணன் மணந்தான்.. அவளே மண்டோதிரி என்னும் மீனாட்சி..

இதனை குறித்த நிகழ்வே மதுரையின் வருடா வருடம் நடக்கும்
சொக்கநாதர் மீனாட்சி திருகல்யாணம்..

கள்ளழகர் என்பது மயனின் புதல்வன் இராமனே.. அரங்கநாதன் என்பவர் இவரே..

ராகு என்பது இராகவன் என்னும் இராமனை குறித்தது.. கேது என்பது கிருஷ்ணனை குறித்தது.. இதனை போன்றே வரதராஜன் என்ற தசரதன் மகன் பரதனை குறித்தது பெருமாள் என்னும் பெயர்..

ராகு-ராகவன்-ராமன் -இராமநவமி..

கேது-மயில் இறகு முடிசூடியவன்-கோகுலஅஷ்டமி..

வரதராஜன் பெருமாள் -பரதன் என்னும் நாட்டை ஆண்ட மன்னனே..

இன்னும் எந்த திருமால் விஷ்ணு  பெருமாள் கோயில்களில் நவகிரகம் சன்னதி என்று உலகில் எங்கும் கிடையாது.. அதற்கு அவர் தலைமேல் குடையாக இருக்கும் ஐந்து தலை நாகமே.. இது ஐந்து தலை ஐந்து கூறுகளை கொண்ட பஞ்சாங்கத்தை குறித்தது..


விஷ்ணு என்பதும் இராமனை இராமனை குறித்த்தது வே (வீத்தனு-வீட்டிணன்).. அதே போல இவர்கள் அனைவரும் வாணியல் மருத்துவம் நன்கு கற்றவர்கள்.. மற்றவர்களுக்கு கற்று கொடுத்தவர்களே..

இதில் மிகவும் முக்கியமான ஒன்று *மயன் - திருமாலின் புதல்வியே..* காட்டின் அரசன் சிங்கம் என வழக்கம் வந்ததும் லட்சுமிநரசிம்மனை வைத்தே.. ஆனாலும் இவை குறிப்பது மயேசுவரியே..

இவர்கள் சின்னம் சிம்மம்.. அதே போல அரி என்ற பட்டபெயரும் மயனுக்கு சூட்டப்பட்டுள்ளது..காரணம் கடல்,காற்று,தீ,வாணம்,மண்,பொண்,விதை,சங்கு,சக்கரம்,அரிவாள், பாம்பு ,ஆயுதம், அரசன் என காக்கும் அனைத்தும் குறித்தது அரி என்னும் மயன் அரசனையே..

ஆக குமரி கண்டத்தில் மயன் ஆட்சியும் மயனின் மகள் மயனாட்டி என்னும் மீனாட்சி ஆட்சி நடந்துள்ளதை இதனை வைத்தே அறிந்து கொள்ள முடியும் இருப்பினும் இதனையும் காண்போம் ..

அதனை போல மயன் சக்கரம் கண்டுபிடித்து இவ்வுலகிற்கு  தந்தமையால் சக்கரவர்த்தி என்றும் சக்கரத்தாழ்வார் என்றும் பெயர் பட்டபெயராக வழக்கம் பெற்றதுவே..

இதன் மூலம் குறிஞ்சி நெய்தல் இடையில் முல்லை இருந்தமையால் கடல் எல்லை முதல் மலை உச்சி வரை காடுகளை ஆண்டுள்ளனர்..

இதனை போண்றே முல்லையில் குயவரும் இந்த மயனே.. இவர் தந்ததே பாணை, கடம் வீட்டில் இருக்கும்  சட்டி முட்டி தொட்டி  எல்லாம் அதன் பட்டபெயரே வீட்டிணன்..

இதன் தொடர்ச்சியாக இன்னும் புதைக்கும் ஈம முறை மயனாலும்.. எரிக்கும் முறை இராவணாலும் குமரி கண்டத்தில் இருந்துள்ளது..

 இதற்கு தடயமாக நெற்றியில் இடும் பட்டை,நாமம் பல வருடங்களாக இதனை அழியாமல் இன்றும் தாங்கி நிற்கிறது.. நாமம் வெள்ளை நிற கோடு பாணை விடிவமும்..இதன் நடுவே சிவப்பு கோடு சவஉடலை   குறித்ததுவே..

பட்டையில் நான்கு கோடு சவஉடலையும் இறுதி வைக்கும் நடுவே பொட்டு சவதுக்கு இறுதில் இடும்  தீயே..

மயன் இசையில்  உச்சத்தின் உச்சமாகவே இன்னும் பிரமிப்பை ஏற்படுத்துகிறார்.. காரணம் கல்லுக்குள் சுரங்களை வைத்து கட்டும் கட்டுமானம் மதுரை திருநெல்வேலி திருச்சி என கோயில்களில்  இன்றும் காண முடிகிறது.. இதுவே இ‌ப்படி இருக்க.. அப்ப குமரி கண்டத்தில் சொல்ல வார்த்தையே இருந்திருக்காது..

 இராமனின் வில் வேட்டைக்கு மட்டும் அல்ல இசைக்கும் இவர் வில்லடித்து பாடும் வில்லுப்பாட்டு காரனே.. முல்லை நிலத்தின் இடையன் இவர்களே கால்நடைகள் மற்றும் காடுகளை காப்பதை தொழிலாக வைத்து கட்டமைக்கபட்டதுவே இந்த முல்லை நிலம்..

மயன் நூல்கள் என பட்டியலிட்டால்.. ஐந்திறம் என்னும் நூல் மிக முக்கியமான ஒன்று..

ஐந்திறம் என்ற நூலை மயன் எழுதியிருக்கிறார்.
காந்த வேதம்,
சப்த வேதம்,
ஸ்தாபத்ய வேதம்,
நாட்டிய வேதம்,
 பிரணவ வேதம்
என்று ஐந்து வேதங்களாகவும்,

நம் தமிழ் ஐந்தமிழ்களாக நமது கலைமரபு இருந்திருக்கிறது . இயல்,
இசை,
நடணம்,
சிற்பம்,
கட்டிடம் ஆகிய ஐந்தும் கொண்டு தமிழ்களுக்கு இலக்கணம் கூறும் நூல் தான் ஐந்திறம்.

அது நமது தொன்மையான நூல். தொல்காப்பியத்திற்கு பாயிரம் வழங்கிய பெரும்பரனார் *‘ஐந்திறம் நிறைந்த தொல்காப்பியன்’* என்று குறிப்பிட்டிருக்கிறார். ஐந்திறம் காலத்தால் தொல்காப்பியத்திற்கு முந்தியது. இவைமட்டுமல்ல


கப்பல் கட்டுவது குறித்து மரக்கலச் செந்நூல், அணுவைப் பற்றிச் சொல்லும் அணுவியல்,
 வானசாஸ்திரம் பற்றிச் சொல்லும் சூரிய சித்தாந்தம்,

 பிரணவவேதம் போன்ற பல நூல்களை இயற்றியவர் இந்த மயனே.

*நுண்வினைக் கம்மியர் காணா மரபின;*
*துயர் நீங்கு சிறப்பின் அவர் தொல்லோர் உதவிக்கு*
*மயன் விதித்துக் கொடுத்த மரபின*

என்று சிலப்பதிகாரத்தில் பதிந்துள்ளது. .


அரியும் சிவனும் ஒன்னு; இதை அறியாதவர் வாயிலே மண்ணு என்பது மயனின் மகளை சிவன் மணந்ததை குறித்ததுவே... அதனை தாங்கி நிற்பதுவே ஐயப்பன் வரலாறு ..

மயனின் மகளான மண்டோதிரி மற்றும் இவளை மணந்த இராவணனை குறித்ததுவே..

இராவணன் சிவனாகவும்
மண்டோதிரி திருமாலாகவும் பின்னாளில்  உருவகபடுத்தபட்டது..

நடராஜ வடிவத்தை உலகுக்கு முதன் முதல் அறிமுகம் செய்தவன் மயன் என்னும் பழந்தமிழ் சிற்பி. இவன் ஓர் அரசன். ஈழத்தின் வடமேற்கே இருக்கும் மாந்தையை தலைநகராகக் கொண்டு உலகின் வடமேற்குப் பாகத்தை ஆண்ட தமிழ் அரசன்.

மயன் ஐந்தொழிலையே (மூலம், சீலம், காலம், கோலம், ஞாலம்) தனித்தொழிலாகச் செய்யும் மூலத்தின் வடிவமே நடராஜத்திருவுரு என்கின்றான்.மாந்தை மயன் இத்திருவுருவைமரகதக்கல்லில் செய்தான்.நடராஜவடிவமும் பீடமும் சேர்த்து ஏழு அடி உயரமான மரகதக்கல்லால் ஆன அத்திருவடிவம் உத்தரகோசமங்கையில் இருக்கிறது.


இந்த நடராஜ வடிவத்தின் தலையில் கங்கை இல்லை. கங்கைபற்றிய எண்ணமும் கருத்தும் தமிழரிடம் பரவமுன்னர் இந்த நடராஜ சிலை செய்யப்பட்டது என்பதற்கு இது ஓர் ஆதாரமாகும். மரகத நடராஜரின் இடையில் புலித்தோலும் இல்லை. இடுப்பிலோ, கழுத்திலோ பாம்பும் இல்லை. இதுவே தொன்மையான நடராஜர் என்பதை இவையாவும் எடுத்துக் காட்டுகின்றன.  அத்துடன்  உத்தரகோசமங்கை இன்றும் 'ஆதிசிதம்பரம்'  என்றே அழைக்கப்படுகின்றது. மாந்தைக்கு வடமேற்கே இருக்கும் உத்தரகோசமங்கை மயனின் ஆட்சிக்கு உட்பட்ட இடமாக  இருந்ததை மாந்தை மாண்மியம் என்னும் நூல் எடுத்து கூறுகிறது..

வீட்டிணன் -வீத்தணு என்பது இராமனே.. இவர் மனைவியே கலைவாணி.. இசையில் புலமை பெற்ற இராகவனே- இராமன்..
இராமன் என்பவர் பிரம்மன்
என்னும் பிராமணனே.. ..

இராமன்-சீதையின் மகன்களே லவன் ஐயப்பன்,குசன்-ஐயனார்..

ஆசோகவணத்தில் இருந்த சீதை என்பவள் இராவணன் புதல்வி அசோகசுந்தரியே..


சங்ககாலப் பெண்புலவரான நெட்டிமையார் புறநானூற்றில் பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதியை

*“செந்நீர்ப் பசும்பொன் வயிரியருக்கு ஈந்த*

*முந்நீர் விழவின் நெடியோன்*

*நன்னீர் ப்ஃறுளி மணலிலும் பலவே”*        *- (புறம்: 9: 9 - 11)*

என வாழ்த்துகிறார்.


பாண்டியன்-சிவன் என்னும் இராவணன் போல சோழன் சூரிய குலத்தவர் என்பது இந்த மயனே..

இதில் விஷ்ணு பின்னாளில் முடி சூட்டபட்ட முதல் சேர மண்ணன்.. இதனை இன்றைய
 கேரளமாக உள்ள பண்டைய சேர நாட்டில் மயன் மரபுத் தாக்கம் அதிகமாக காணலாம். கேரள மாநிலத்தில் மரவேலை செய்யும் சிற்பிகளை அதாவது, தச்சர்களை இன்றும் மயாச்சாரிகள் என்று அழைப்பதுண்டு.

குமரிக்கண்டத்தில் வாழ்ந்த இந்த மயன் இவர் வழி தோன்னலான விஷ்னு (இராமன்) தமிழர்கள் இலக்கியம், இலக்கணம், அறிவியல்,இசை, வானியல், சோதிடம், மருத்துவம், தத்துவம், நுண்கலைகள், கைவினைக் கலைகள் ஆகிய பல்வேறு துறைகளில் தேர்ச்சி பெற்று விளங்கினர் என்று அறிய முடிகிறது.

சூரியகுலத்தில் விஷ்னுவை  போண்றே ஐயப்பனும் அரசனாக முடிசூட்டபட்டார்..

மயனின் வரலாற்று எச்சங்களை குமரி மாவட்டத்திலும், கேரள மாநிலத்திலும் இன்றும் நாம் ஏராளமாக காண முடியும் . மலையாளம் மொழி தோற்றத்திற்கு முன்பே சேர நாடான மலைநாட்டில் மயன் பற்றிய பல தகவல்கள் சிதறி கொட்டி கிடக்கின்றன. குமரி மாவட்டத்தில் மயன் வாழ்ந்த மயன்பறம்பு உள்ளது. கேரளத்தில் மயன் ஆண்டு வந்த மயநாடு (மய்யநாடு) உள்ளது.

வின்னவர் என்னும் வைணவர்கள் இந்த மயன் வழி தோன்றியவர்களே. இந்த தேவர்களின் புதல்வியை தெய்வானையை மணந்தவரே முருகன்..இதனையே திருமுருகாற்றுப்படை மாயோன் மருகன் என்று பதிந்துள்ளது.. இவளையே மகாபாரதம் திரௌபதியாக பதிந்துள்ளது..

நாகர் இனத்தின் தோன்றிய இடையர் குல ஆயனே நாராயணன்.. முல்லையில் முதன்முதலாக சாழை அமைத்து வாழ்ந்தவரே இந்த சோழர்கள்..அதே போல வீட்டிணன் என்பது வாசன் என்பதும் ஒர் இடத்தில் வாசம் செய்பவன் என்றே பொருள் இதுவே பின்னாளில் திருவாசன் என்னும் ஸ்ரீனிவாசன்.. நிவாஸ் என்றால் வீடு என தோன்ற தமிழே மூலம்..கோவிந்தன் என்றால் இடையர் குல அரசன் என்பதுவே..

புரவிஎடுப்பு விழா என தமிழகத்தில் இதனை முல்லை நில பகுதியில் காணமுடிகிறது.. கிராமங்களில் ஊர் காவல் தெய்வமாக ஊர் மத்தியில் புரவி வைக்கும் மரபும் காலம் காலமாக உள்ளது.. இந்த மய வழிபாடுடன் புரவி நேர்த்திகடனாக இன்றைய ஐயனார் கோவில்களில் செலுத்துவதை இன்றும் காணலாம்.

முல்லை நில கிராமங்களில்  திருவிழா எடுக்கும் முன்னதாக மண் குதிரைகளை செய்யும் சிற்பிகள் வீட்டில் கோயிலுக்கு தேவையான குதிரைகள் உட்பட சுவாமி சிற்பங்கள் செய்யப்படும். பின்னர் மேளதாளம் முழங்க கிராமத்தில் இருந்து கிராம மக்கள் புறப்பட்டு குதிரை செய்யும் இடத்துக்கு சென்று அங்கு குதிரைக்கு கண்திறக்கும் வழிபாடு செய்வர் பின்னர் புரவியோடு கிராமத்தை சுற்றி வருவார்கள்..

இராவணன் பஞ்சங்க நூலை வைத்து மயன் வாஸ்து சாஸ்திரம் கண்டது.. மயனின் வாஸ்து சாஸ்திரம் மற்றும் இராவணன் பஞ்சாங்க நூலை வைத்து தான்  இராமன்(விஷ்ணு) வானசாஸ்திரம் படைத்தார்.. (இதுவே இன்று விஷ்னு பஞ்சாங்கம்)..

மதுரை (விஷ்னு)கள்ளழகர்-ஆற்றில் இறங்குவது சொக்கநாதன் -மீனாட்சி திருமணம்.. திருமால் கைபட  மணமுடிப்பது.. மயன் சிவன் விஷ்னு மீனாட்சி யாவர் என அடையாளம் காண முடிகிறது..


சொர்கம் என்பது மயன் வடிவமைத்த நகரங்களையே..
திரிபுரம்,அழகாபுரி,இந்திரபிரஸ்தம் என நகரங்கள் இன்னும் தமிழக எல்லையில் இருப்பதை காணலாம்..

இந்த சொர்க வாசல் திறப்பு  சூரியன்    வீத் *தனு* சு இராசியில் புகும் மாதமான மார்கழியில் வைணவர்களின் புனித மாதமாகவும் போற்றி கொண்டாட படுகிறது.. துவாரகை என்பதும் விஷ்னு,கிருஷ்ணன் முக்தியடைந்த இடமே அது இன்றைய கொற்கை அருகே உள்ள வைகுந்தம் என்னும்  வைகுண்டம்.. வைகுண்ட ஏகாதேசி - சொர்க்க வாசல் திறப்பே..

நன்றி




🙏வசந்த் வெள்ளைத்துரை🙏

செவ்வாய், 18 செப்டம்பர், 2018

பாலை-அவ்வை என்னும் கொற்றவை



தமிழனின் தடயங்கள் இன்னும் எங்கோ ஒரு இடத்தில்  புதைந்து கிடக்கிறது அதனை பல்வேறு வழிகளில் பலர் இவ்வுலகிற்கு எடுத்துரைத்தாலும் இதில் உள்ள வேர்களின் ஆழம் மிக நீண்டது..

முன்பே இதனை முல்லை நெய்தல் மருதம் குறிஞ்சி என தொல்காப்பியம் தரவுகள் நாம் இன்றும் கடைபிடிக்கும் பண்டிகைகள் வழக்கங்கள் மற்றும்  இலக்கியம்,புராணம், இதிகாச தடயங்கள் என இங்கு போற்றபட்டவர்கள்..

மற்றும் இதன் தெய்வங்கள் யார் யார் என தெளிவாக விவரித்தது போல பாலை என்ற திணையும் இங்கு உண்டு..

இதன் காலம் தொண்மையான குமரி கண்டம் என்பதுவே.. நால்வகை தீவே நாவலந்தீவு..
இதில் ஐந்தாம் திணையான பாலை அனைத்து திணைகளிலும் உள்ளது..

இந்த உலகில் மதங்கள்  பல உண்டு அவ்வாறு திரிய காரணம் மடம்.. பல்வேறு காலகட்டங்களில் பலரால் தோற்றுவிக்கபட்டு கட்டமைக்கபட்டதே..

மடம்-மதம்-மயம்-சமயம் என தோற்றத்தை தமிழில் எளிதாக கண்டுபிடித்து விடலாம்..

இந்த கட்டமைப்பு உள் சென்றால் வழிமுறைகள் இதில் கடைபிடிக்கும் நெறிமுறைகள் பல தெரியும்.. ஆனால் தமிழர்களின் இந்த
திணை வாழ்வியலை வைத்தே
உலகில் பல மடங்கள் கிளைகளாக பிறந்தது அதில் உலகிற்கு என்னற்ற நல்வழிகளை சொன்னவர்கள் கடவுளாக இன்று போற்றபடுவர்கள்.. இவர்கள் மடம் என்னும் இடத்தை மட்டும்  நிறுவவில்லை மக்களின் மனதில் தங்களுக்கு என இடத்தை தக்கவைத்துக் கொண்டவர்கள்...

ஆறுமார்கத்தை உள்ளடக்கிய ஏழாவது மார்கம் என கொண்ட ஆசீவகம் (சித்தர் வாழ்வியல்)  பிறப்பதற்கு முன்பே தமிழ் திணைகளில் இயற்கை மற்றும் இறந்தோர் வழிபாடுகள்  பிறந்துவிட்டது..
இதன் பின்னர் தோன்றிய  மற்ற மடங்களிலும் (மதங்களிலும்) தமிழின் தாக்கம் இருப்பதையும் பல புராணங்கள் ஒன்று போல் மற்ற மார்கங்களில் இருப்பதை காணலாம்.. அதே போல அவர்கள் மூதாதையர் என குறிப்பிடுவது குமரி கண்டத்து மக்களே. .

பாலை திணை இறந்தோர் வழிபாடு மட்டும் அல்ல இயற்கை வழிபாட்டை இசையோடு உள்ளடக்கியது..

பாலை நிலம் சுரமும் சுரம் சார்ந்த இடமும் ஆகும். சுரம் என்பது வறண்ட, பயனற்ற வெயில் கொளுத்தும் காட்டுப் பகுதியைக் குறிக்கும். எனவே பாலை எனத் தனி ஒரு நிலப் பகுப்பு இல்லை. வறட்சியின் காரணமாகவே பாலை நிலம் தோன்றுகிறது. என என்பது போல இசை தோன்றிய நாண்கு திணைகளிலும் குறித்தது பாலை திணையே..

கொற்றவை என்றால்  பார்வதி என்று பொருள் இது   குறிஞ்சியில்..
கொற்றவை என்றால் மயேசுவரி என்று பொருள் இது முல்லையில்..
கொற்றவை என்றால் வேதநாயகி என்று பொருள் இது மருதத்தில்..
கொற்றவை என்றால் மாரி என்று பொருள் இது நெய்தலில்..
கொற்றவை என்றால் காளி என்று பொருள் இது பாலையில்..

குறிஞ்சி-வெட்சி
முல்லை-வஞ்சி
மருதம்-உழிஞை
நெய்தல்-தும்பை
பாலை-வாகை
கைக்கிளை-பாடாண்
பெருந்திணை-காஞ்சி

ஆக இந்த அகத்தினை மற்றும் புறத்திணைகளில் ஏழு பெண் தெய்வ வழிபாடு என்பதே சப்தகன்னி வழிபாடு.. இவர்களே பாவை என்னும் அவ்வை (ஔவையார்கள்)...


















அவ்வை என்றால் சங்க காலத்தில் பல்வேறு காலகட்டங்களில் பண் பாடல் தந்து வாழ்ந்த வயதான பெண் புலவர்களை குறித்தது இந்த சப்தகன்னி யில் இருந்து தான்..

இதனை விரிவாக பார்க்கும் முன் பாலை நிலத்தின் தெய்வமாகிய கொற்றவை யார் என்பதை கண்டுகொள்வோம்.. பாலை நிலத்தின் தெய்வம் கொற்றவை இராவணன் மனைவி மண்டோதிரி.. இவள் மயனின் மகளே..

அதே போல மண்டோதரி என்றால் மண் தோத்தரம் (மண்ணையும் மன்னனையும் புகழ்ந்து பாடுவது).. மண்டோதிரி என்றாள் மண்ணையும் மன்னனையும் புகழ்ந்து பாடுபவள் என்றே பொருள்..

பெண் தெய்வம் வழிபாடு என்பது நம் வழிபாடுகளில் மிகவும் முக்கியமானது...
இதனை இந்து மதம் சக்தி வழிபாடாக கட்டமைத்தது சிறிது காலம் முன்பு தான்
ஆனால் இதற்கு முன் தேவி வழிபாடு மற்ற மதங்கள்
பிறப்பதற்கு முன்பே தோண்றியது..

இதில் மற்ற மதங்களில் மறைமுகமாக இருப்பதை இன்றும் நாம் அறியலாம்.. மேரியை இயேசுவின் தாயாக கருதி தாய்மையை போற்றும் வழிபாடாக கிருஸ்துவம் இருக்கிறது.. உருவ வழிபாடு இல்லாத இஸ்லாம் என்பது தூய பெண் தெய்வ வழிபாடே இதனை அவர்களின் கடைபிடிக்கும் வழங்களில் நாம் எளிதில் காணலாம்..

இவையெல்லாம் குறிஞ்சி திணையில் இருந்து பிறந்த பெண் தெய்வ வழிபாடுகள்..
வேட்டை சமூகமான குறவர் வழிபாட்டில் அமாவாசை அன்று இறந்தோர் வழிபாடு செய்வது போல பெளர்ணமி அன்று சூல வழிபாட்டை காணலாம்..

 இறந்த பெணகளை தங்கள் குலம் காப்பவர்களாக கருதி
வழிபடும் முறை.. அதே போண்று பெண்கள் நிலவாக நதியாக மண்ணாக காண்பது நமது தமிழ் மண்ணில் தோன்றியதே.. பெளர்ணமி வழிபாடு பிரிதலும், பிரிதல் நிமித்தமும் என பாலை திணையின் உரிபொருள்..

அமாவாசை அன்று சூரியனும் சந்திரனும் சேரும் அதே பவுர்ணமி அன்று சூரியனை விடுத்து பிரிந்து நிலவு நெடுந்தூரம் செல்லும்..
அதே போல உருவமில்லா இஸ்லாம் மார்கம் நிலவை அடிபடையாக கொண்டே அணைத்தும் கட்டமைக்கபட்டள்ளது..

அதே போல அம்மன் தேவி சூல வழிபாடுகள் பௌர்ணமியை மட்டும் அல்லாது நாட்களில் வெள்ளிகிழமையை தக்கவைத்துக் கொண்டுள்ளது.. இதனை போன்றே வெள்ளிகிழமை தவறாமல் வழிபடும் முறையை இஸ்லாமிய சமயம் நம்பிக்கையாக கொண்டுள்ளது.

இந்த தாய் தெய்வம் வழிபாடு என்பது பிற்காலத்தில் வாழ்ந்த ஔவைகள் தங்கள் வரிகளில் பதிந்துள்ளதை நாம் காணலாம் *தாயை சிறந்த ஒரு கோயிலும் இல்லை* என பெண்ணை தெய்வதோடே இனைத்திருக்கின்றனர்..

அதே போல மற்ற சமயம் மார்கத்தோடு இந்த சக்தி வழிபாட்டை அவ்வளவு எளிதாக சேர்க்க முடியாது யாராலும் பின்பற்றுவது என்பது கடிணமே..

சக்தி வழிபாட்டில் உடலை வருத்தி செய்வது என்பது ஆண்களை விட பெண்கள் அக்காலத்தில் எவ்வளவு வலிமையானவர்கள் என நன்றாக புரிந்துகொள்ள முடியும்..

அதே போன்றே குறிஞ்சியில் மலைமகளான பார்வதி என்பது வார்வதியே.. இதனை சூல வழிபாடு மட்டுமல்லாமல் குறி சொல்ல முன் அவர்கள் அருள்வாக்கு தர குப்பிடும் வழக்கத்தில் காணலாம்..

குறி மட்டும் அல்ல பக்தியில் சாமி வந்து ஆடுவது.. வேம்பு மரத்தை வழிபடுவது.. மஞ்சள் நீரிட்டு  என உடுக்கை அடித்து குறி சொல்வது என அம்பிகை என ஈஸ்வரி என வழக்கங்கள் இன்று அழியாமல் பல ஆண்டுகள் கடந்து வந்துள்ளது..

அதனை போண்றே தச்சர் குறவர் கொல்லர் வழிபாட்டை இதன் தீசட்டி ஏந்தும் சாயலில் காணலாம்.. இதனை முல்லை நிலத்தில் அதிகம் காணமுடியும்..

 மஞ்சள் நீரிட்டு ஆடுகள் காணிக்கை செலுத்துவது பொங்கல் வைப்பது மட்டும் அல்ல அக்காலத்தில் குறி சொல்லும் முல்லை நிலத்தவர் கையில் சக்கரத்தை பச்சைகுத்தி வைத்திருப்பது என இதன் ஆழம் சங்கு சக்கரத்தோடு
காட்சி தந்து துடிக்கை அடித்து குறி சொல்லும் துர்கையோடு சேர்ந்திருக்கிறது..

வாளோடு காட்சி அளிக்கும் அரசியாக அம்பிகை அம்பாள் என போற்றபட்டது ஒரு பெண் அரசியே..

 மருதநிலத்திலத்தில் வரண்ட காலங்களில் கரகமாக எடுத்து நீரோடு மழை வேண்டியே அம்மனை வழிபடுவது என்பது வேதநாயகியான இந்த கொற்றவையே.. இதனை இந்தபகுதியில் நடைபெறும் தீமிதி திருவிழாவில் காணலாம்..

 அதனை போன்றே இங்கு கும்பம் கரகம் என மண்ணையும் நீரையும் வழிபடுவது இதனை சுமந்து வந்து ஊர் கூடி கொண்டாடுவது என நீரை வழிபடும் மக்கள் தமிழ் தொண்மையான இயற்கை வழிபாடை காணலாம்..

நெய்தலில் காணும் வழிபாடும் இந்த மூன்றையும் சேர்த்தே உள்ளது தீசட்டி கடலன்னை வழிபாடு கரகம் எடுத்து கடலில் பூஜை செய்வது ,தீமதி திருவிழா என போற்ற முத்துமாரியம்மன் என நெய்தலின் முத்தோடு இருப்பதை காணலாம்..

அது மட்டும் அல்லாது எந்த தாயும் ஒரு குழந்தை பசியோடு இருப்பதை விரும்பமாட்டாள்.. ஆடி மாதம் காற்றின் வேகம் அதிகமாகயிருக்கும் கடலுக்குள் செல்ல இயலாது.. இக்காலத்தில் கூல் ஊற்றி முல்லை மருதம் மக்கள் நெய்தல் மக்களுக்கு உணவளித்ததே ஆடி மாதம் முழுவதும் கூல் ஊற்றுவது... ஒரு திணை மக்களுக்கு உணவளிக்க பண்டிகை திருமணம் என அனைத்து நல்லவையும் தள்ளி வைத்து தமிழனால் இன்றும் அழியாமல் பாரம்பரியமாக வந்துள்ளது..

கொற்றவை என்னும் இவள் ஆண்ட இந்த நிலபரப்பே குமரி கண்டம்.. அவளே குமரியை ஆண்ட மண்டோதிரி என்னும் மீனாட்சி அம்மன்..

ஏழு சுரமும் சப்தகன்னியும் கொட்டும் முரசும் கொற்றவை..


தமிழ் இலக்கியத்தில் பார்வதியை-மலைமகள், கொற்றவை, பழயோள் என திருமுருகாற்றுப்படை பதிந்துள்ளது..


மலைமகள் மகனே! மாற்றோர் கூற்றே!

வெற்றி வெல் போர்க் கொற்றவை சிறுவ!

இழை யணி சிறப்பின் பழயோள் குழவி!

பழணம் என்றால் மருதநிலம் கொண்ட வயல் பரப்பு.. பழயோள் என்றால் வயல் நிலம் கொண்டவளே..


திருவாசகமோ கொற்றவையை  என தெளிவாக விவரித்துள்ளது..

*இயக்கி மார்அறு பத்து நால்வரை*
    
*எண்குணம் செய்த ஈசனே*

*மயக்க மாயதோர் மும்ம லப்பழ*
    
*வல்வி னைக்குள் அழுந்தவும்*

*துயக்க றுத்தெனை ஆண்டு கொண்டுநின்*

    *தூய்ம லர்க்கழல் தந்தெனைக்*

*கயக்க வைத்தடி யார்மு னேவந்து*

    *காட்டினாய் கழுக் குன்றிலே*

இயக்கி என்பது சக்தி தோற்றமே சப்தகன்னியர் மற்றும் பார்வதி இந்த எட்டு பேரே எட்டு திசைகளை குறித்தவர் இதன் எட்டு வடிவ பெருக்கமே (8×8)  ஆறுபத்திநான்கு.. சக்திகள் இது எட்டு திசைகளை குறித்தது..

புராணத்தில் முருகனை காத்து வளர்த்து 6 செவிலி தாய் மற்றும் கங்கை..
என்பவர்களே சப்தகன்னியர் எட்டவது பார்வதியோடு சேர்த்துவே சக்தி வடிவமே இவர்கள் எட்டுதிசையும் காக்க
கற்று தந்த கலையே ஆயகலைகள் ஆறுபத்தி நான்கு முருகனுக்கு.. . இதனை முருகனின் புராணங்களில் மறைமுகமாக நமக்கு கொடுக்கபட்ட செய்தியே..


கங்கை என்பது அங்கை என்னும் அங்காளம்மன் நாகர் குல மலைமகள்.. 

இதனை தொடர்ந்து வரும் எல்லையம்மன் 
பேய்ச்சியம்மன்
முப்பிடாரியம்மன்
காளியம்மன்
பிடாரியம்மன்
பத்திரகாளியம்மன்
என சப்தகன்னிகளை ஊர்களில் இன்றும் வணங்கி வருவதை காணலாம்..

சப்தகன்னி வழிபாடு அதிகமாக மருதநிலத்தில் தவறாமல் காணலாம்.. இதனோடு கருப்புசாமி அல்லது ஐயனார் வழிபாடு ஊர்களில் சேர்ந்தே இருக்கும்..

இது குறவர் வழிபாடான குறிஞ்சி திணையில் இருந்து  வந்த குறவர் யக்கர்கள் என பல்வேறு சமுகத்தினரும் கடைபிடித்த அமாவாசை அன்று கருப்பு வழிபாடும்..
பௌர்ணமி அன்று சக்தி வழிபாடும்..

 இந்த சப்தகன்னியர் வழிபாடு என்பது
முளைப்பாரி போட்ட மறுநாளில் இருந்து வீட்டின் முன்பு வட்டமாக நின்று கொண்டு பெண்கள் கும்மியடிப்பார்கள். இந்த கும்மி ஓசை எழுப்புவது போல் முளைப்பாரியும் முளைத்து வெளிவரும் என்று நம்பிக்கை. அதில் இருந்து ஒன்பதாம் நாளில் இவ்வாறு பாதுகாத்த முளைப்பாரியை ஊர் பொது இடத்தில் வைப்பார்கள்.

பின் அந்த முளைப்பாரிகளை சுற்றி வட்டமாக பெண்கள் நின்று பாடலுடன் கும்மி கொட்டுவர். இன்னொரு பக்கம், அனைவரும் பார்க்கும் வண்ணம் ஒயிலாட்டம், பறையாட்டம், சிலம்பாட்டம், புலியாட்டம் என்று பாரம்பரிய கலைகளை சிறுவர்களும், இளைஞர்களும் செய்து காட்டுவர். அந்த முளைப்பாரியை தூக்கியபடி இதே ஆரவாரத்துடன் ஊர் முழுக்க சுற்றி வருவார்கள். பின் ஊரே ஒன்றுகூடி பொங்கல் வைத்து, கொழுக்கட்டை, மாவிளக்கு, துள்ளுமாவு, இளநீர், பானகம், நீர்மோர், வேப்பிலை கரகம் வைத்து பெண் தெய்வத்திற்கு படைப்பர்

இந்த கும்மியடித்து குளவையிடுவது சப்தகன்னியர்களை மற்றும் அம்மனை எட்டு திக்கில் இருந்து வரவேற்பதே..

இந்த குளவை சத்தம் கும்மி கொட்டும் முளைப்பாரி எடுக்கும் மருதத்தில் மட்டும்
அல்ல குறிஞ்சி முல்லை நெய்தல் என பெண்கள் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு நாட்களில் கும்மிகொட்டி குளவையிடுவதை காணலாம்..


*கொற்றவைக்குரியதாகலின் கடவுள் வாகை எனப்படும். மென்பூ வாகைப் புன்புறக் கவட்டிலை* - அகநானூறு . 136; 10

 *மல்குசுனை உலர்ந்த கல்கூர் சுரமுதல்குமரி வாகைக் கோலுடை நறுவி மடமாங் தோகைக் குடுமியின் தோன்றும் கான நீளிடை* -குறுந்தொகை. 347:1-4 " 

*போர்படு மள்ளர் போக்தொடு தொடுத்த கடவுள் வாகைத் துய்வி ஏய்ப்ப பூத்த முல்லை புதல் சூழ் பறவை* -பதிற்றுப்பத்து  66:14-16

*கூகைக் கோழி வாகைப் பறந்தலை*-குறுந்தொகை 303:3

*வாகை வெண்பூப் புரையும் உச்சிய தோகை* -பரிபாடல்.14:7-8 

*அத்தவாகை அமலைவால் கெற்று அரி.ஆர் சிலம்பின் அரிசி ஆர்ப்பக் கோடை தூக்கும் கானம்*-குறுந்தொகை 369:13 

*கயிறாடு பறையின் கால்பொரக் கலங்கி வாகை வெண்ணெற்று ஒலிக்கும் வேய்பயில் அழுவம் முன்னியோரே* -குறுந்தொகை , 7:3-6 

பாலைக்கு உரியது வாகையே..
வாகை-என்றால் வெற்றி 

வாகை மரம் சித்த மருத்துவத்தில் வீக்கம், கொப்புளம் வடிதலுக்கு மருந்தாகப் பயன்படுத்தப் படுகிறது.

வாகை என வெற்றி கொட்டே இக்கும்மியும் குளவையும்..
இது பின்னாளில் வெற்றியின் கொட்டாக கைதட்டல் விசில் என தமிழின் மூலம் கொண்ட வளர்ச்சியே..

வாகை மலர்ச்சூடுதல் வெற்றிக்களிப்பை உணர்த்தும் பாலை திணைக்கு உரிபொருளான பூ இதனை தொல்காப்பியம் பதிந்துள்ளது .

*மறங்கடைக் கூட்டிய குடிநிலை சிறந்த* 

*கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே*


சப்தகன்னிகள் என்றதும் ஏழு பெண் உருவங்கள் என நினைவிக்கு வரும்.. அதே போல ஏழு வண்ணங்கள், ஏழு சுரம் என ஏழு என வர கங்கையோடு சேர்த்த ஆறு கன்னிகளே..

இதனை புராணம் பல்வேறு காட்சிகளில் நமக்கு சிறப்பாக சித்தரித்தும் இதன் பொருள் இன்று வரை தவறாகவே பதிந்துள்ளது..

சித்தமருத்துவம் பல நோய்களுக்கு அக்காலத்தில் மருந்துகா இருந்தாலும்.. அம்மைக்கு வேம்பும் மஞ்சளும் மருந்தாக இருந்தது..

வேம்பை கடவுளாக வழிபட்ட மக்கள் இதனை மகமாயி என உருவகபடுத்தினர்.. ஊரில் அனைத்து மத்திய பகுதியிலும் ஊரை நோய்களின் இருந்து காக்க வேம்பு வழிபாடு இருப்பதை காணலாம்..


இதன் தொன்மை  காமாரி.. உடலில் உண்டாகின்ற கொப்புளங்களை ஆற்றுவது  கருமாரி என நோய் தீர்க்கும் சித்த மருத்துவரே..


ஏழு வண்ணங்கள் இதன் கலைகளில் ஏழு நிலைகளை குறிக்க பிற்காலத்தில் குருகுலம் வளர்த்த சித்தர்கள் கையாண்டனர்.. சப்தகன்னிகளே குருகுலம் மருத்துவம் தந்த பென்சித்தர்கள்..


இன்னும் சரஸ்வதி என்பது வீணையுடன் வீற்றிருக்கும்  பிரம்மினின் கலைவாணி.. சரம் என்றால் சேர்த்து தொடுப்பது.. சரவதியே சரஸ்வதி என்று இன்று வழக்கத்தில் இருப்பது  இந்த சப்தகன்னிகளே.. இதனை ஒரே கல்லில் பின்னாளில் வடித்த சப்தகன்னி வழிபாட்டில் காணலாம்..

நெடில் எழுத்தான
ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ
ச ரி க ம ப த நி
இதுவே இசைக்கான மூலம்..இவை உணர்ச்சிகளின் வெளிபாடு.. இதனை கோர்பதே இசை..

சரஸ்வதி என்பது கல்விகான கடவுளாக இருக்க காரணம் இவளே ஆய கலைகள் 64 க்கும் கலைமகள்.. இந்த கங்கை என்னும் சரஸ்வதியே இராமாயணம் காட்டிய சீதை.. இவள் இராவணன்-மண்டோதிரி மகளே..

இதனை வழியுறுத்தி சிம்மத்தில் இருந்து சூரியன் புகும் ஆறாவது மாதம் புரட்டாசி என ஆறுகன்னிகள் சிறப்பித்தனர் சோதிடத்தில் இந்த ஆறு கன்னிகளே கன்னிராசியாக  குறித்தனர்.. வடக்கில் சிம்ம வாகணத்தில்
அமர்ந்த துர்கையாக பக்தி இலக்கியத்தில் பதியபட்டது. .


புரட்டாசி மாதத்தில் வரும்  வளர்பிறைப் பாட்டிம்மை முதல் நவமி வரை ஒன்பது நாளும் அனுட்டிக்கப்படும் நவராத்திரி  நோன்பு இறுதி நவமியில் சரஸ்வதி பூஜை என்பது கன்னிமார்களை வணங்குவதே..அன்றே குழந்தை கல்வி சேர்க்கை என பல இன்று கட்டமைக்க பெற்றது இதன் கருபொருளே..



முற்றும்..


நன்றி
🙏வசந்த் வெள்ளைத்துரை🙏

திங்கள், 10 செப்டம்பர், 2018

குறிஞ்சி - இராவணன் என்னும் சிவன்



தமிழன் விட்டு சென்ற தடயங்கள் பல இன்னும் உள்ளது.. அதில் சிவனும் ஒன்று..

இராமாயணம்

இராவணன் புதல்வன் அட்சய குமாரன் முருகனே..(சேயோன்)

மூத்தவன் இந்திரசித்தன் இந்திரனே. .(வருணன்)

இதில் சிவதாசன் என்னும் இராவணனே முதல் பாண்டியன்.. இவனே சிவன்..

இதனை கானும் முன்பு குறிஞ்சிக்கான சரியான தொல்காப்பிய வரிகளை எடுத்து கொள்வோம்..

வேந்தன் மேய தீம்புணல் உலகமும்..

தீம்புணல் என்றால் நன்னீர்
இவை உருவாகும் இடம் மலையே..

மலையும் மலை சார்ந்த இடமே குறிஞ்சி..

வேந்தன் என்றால் இந்திரன் என தவறாக சித்தரித்துள்ளனர்.. பின்னாளில் இலக்கியங்களில் இதனை குறிஞ்சிக்கான தெய்வமாக முருகன் மாற்றபட்டது மட்டுமல்லாமல் இந்திரன் என்றால் வேந்தன் என்று பொருள் பட பதிந்தாலும் ..

தமிழில் காலமும் சுழலும் ஒருவன் என்னத்தான் முகமுடி போட்டாலும் தோலுரித்து விடும்..

வேந்தன் என்றால் தேவேந்திரன்-வேந்திரன் என்னும் வேந்தன் என்று குறிப்பிடுகிறோம்..

ஆனால் வேந்தன் என்றால் சிவன்

வேய்தல்-வேய்தன்-வேந்தன்
வேய்தல் என்றால் ஏய்தல்..
குறி வைத்து ஏய்பவன் வேடன்
(குறிவன்-குறவன்)

அவ்வை தன் பாடலில் கொன்றை வேந்தன் என சிவனை பதிவு செய்துள்ளார் ...
வேந்தன் என்றால் அரசன்..

 அதே போல மயன் வடித்த சிலையும் நடராசன் சிலை என இன்னும் தமிழ் வழக்கில்  நீங்காமல் உள்ளது..

நடராசன் என்றால் நடனமாடும் அரசன் என்றே பொருள் அவ்வாறு தமிழ் இலக்கியத்தில் புரட்டினால் நடனமாடிய முதல் அரசன் இராவணன்..

கொன்றை வேந்தன் என்றால்
கொன்றை மரத்தோடு ஒப்பிட்டு அடையாளத்தை மறைத்துள்ளனர்..

கொன் இறை வேந்தனே - அச்சமின்றி இறைக்கு வேட்டையாடுவன் என்பதே..

சிவம் என்னும் சொல் சிகப்பில் இருந்தே பின்னாளில் இவரை அடையாளம் காணமுடிகிறது..
குறவர் வழிபாடுகளில் சிகப்பு வண்ண ஆடை சிவனுக்கும் மற்றும் கருப்பு வண்ண ஆடை காளிக்கும் இன்று குறித்து நிற்கிறது..

தமிழ் இலக்கியத்தில் சிவ சிவம் என்னும் சொல் அரிதாகவே உள்ளது..

ஈசன் ஈசுவரன் என அடிகோடிட்டு சிவனை காணலாம்..

சுவன்-சுவரன்-விசுவன்-விசுவநாதன்-ஈசுவரன்-ஈசன் என்று சிவனை குறித்தது அனைத்தும் இவர்
கொல்லன் என்னும் அடையாளமே..

சிவத்தை பின்னாளில் அழிக்கும் சக்தியாகவே சித்தரித்தவர்கள்.. சித்தர்களின் வழிபாட்டில் ஆதி சித்தராகவே தென்படுகிறார்..

சூரியன் போல் பகலில்  இரை அடித்து கொடுத்து தன் குழுவினரை காப்பாற்றிய வேந்தன் இவரே.. தட்சிணாமூர்த்தி என்னும் குரு பகவான் ஆதி குறவர் ஆன
 சிவனே.. இப்பெயரும் சூரியன் தெற்கில் வரும் போது தட்சனாயனம் என்பது போல தெற்கில் உள்ளவர் தட்சிணாமூர்த்தி எனவும் வடக்கில் உள்ளவர்
உத்திரன் -ருத்திரன் என அழைத்திருக்க வேண்டும்..


தென்நாடு உடைய சிவனே போற்றி என சொல்லும் அளவுக்கு இவ்வுலகில் முதல் அரசனாக வாழ்ந்தார் என்பதை உணரலாம்..

அதே போல் தென்னாட்டில் சிவன் போன்ற ஒரு அரசன் வாழ்ந்தான் ஆயின்.. அது இராவணனே.. சிவனின் வாளான சந்திரகாச வாள் இராவணன் பரிசாக பெற்றான் என சொல்லும் இராமாயணம்.. காலம் சிவனை எந்த இடத்திலும் சிவன் வாளோடு இருந்ததாக உருவகபடுத்தவில்லை.. ஈட்டி என்னும் சூலமே அவர் ஆய்தம் என பக்தி இலக்கிய காலத்திலும் காட்சிபடுத்தி உள்ளனர்..


சந்திரகாசவாள் என்பது ஈட்டியே.. இந்த வாளினை வைத்திருப்பவர்கள் பாண்டியர் என புராணங்கள் ஆணிதரமாக பதிந்துள்ளன. .  அவ்வாறு சந்திரகாச வாள் வைத்திருந்த இராவணனே முதல் சிவன் என்னும் பாண்டியன்..


சங்கு பறை உடுக்கை என ஒலிப்பது விலங்குகளை வெளியில் வர எழுப்பி விடுவதே.. வேட்டை செல்லும் முன் சங்கொலித்து செல்வது வேட்டை கிடைத்ததும் பறை  அடித்து ஆடி வருது வழக்கம்..

சுவன்-சுவரன்-விசுவன்-விசுவநாதன்-ஈசுவரன்-ஈசன் என்று சிவனை குறித்தது அனைத்தும் இவர்
கொல்லன் என்னும் அடையாளமே..

அதே போல கருமன் என்னும் சொல் கொல்லனயே குறிக்கும்.. விசுவகர்மா ஆதி கொல்லனான சிவனை குறித்ததுவே..

இவரின் ஆயுதங்கள் சங்கு சக்கரம் சூலம் உடுக்கை என இருந்தாலும் வீனையோடு இருப்பது இராவணன் என கண்டு கொள்ள எளிதாக உள்ளது..

இன்னும் உடுக்கை அடித்து குறி சொல்லும் பழக்கம் உள்ளது.. சோதிடம் பல வகை என்றாலும் குறி என்பது கணித்து சொல்வது அவ்வாறு காலத்தை கணித்து வாணசாஸ்திரம் தந்தது இராவணனே..

இராவணன் கொல்லர் என்பதில் தீயை நன்கு கையாள தெரிந்தவர் மற்றும் வாணசாஸ்திரம் அறிந்த நிலையில் இவர் மூலம் மலையோடு வேட்டையாடினாலும் அதில் காயங்களை ஆற்றும் வித்தையை கற்ற சித்த மருத்துவர் என அவரின் மருத்துவ நூல்களில் காணலாம்..

மயேசுவரன் -மயேசுரன் என சிவனை குறிப்பது இராவணனே..
இவ்வுலகில் தேவலோக சிற்பி மயன் மகளை மணந்தவன் இராவணன்..
மயேசுவரன்-மயேசுவரி (இராவணன் -மண்டோதிரி)யே

மயன் ( மாயோன்) என்னும் திருமாலின் புதல்வியே.. மண்டோதிரி.. இவர் தந்ததே சங்கும் சக்கரமும்.. தஞ்சை பெரியகோவில் நடராஜன் சிற்பத்தில் உடுக்கை நெருப்பிருக்க சங்கும்
சக்கரமுமே வடிதுள்ளதை காணலாம்..

 சக்கரம் இதன் மூலம் கடம் பானை செய்யும் குயவர்களிடம் இருந்து சக்கரம் பிறந்தது.. கடம்-சகடம்-சக்கரம்
பறை-பண்டில்-பாண்டி என எருது வைத்து பாண்டி என்றனர்..
நத்தி(எருது) வாகணம் பூட்டிய பாண்டியன் இராவணன் என்னும் சிவனே















கொல்லன் சிவனின் முக்கண் என்ன என்பதை கானும் முன்பு மயன்,குபேரன்,இராவணன் இவர்களை சற்று தெளிவாக கண்டு கொண்டால்.. முன்றாவது கண்ணை எளிதில் கண்டுகொள்ளலாம்..

இராவணன் மயனின் மகளான மண்டோதிரியை மணந்தவன்..
குபேரன் இராவணனின் அண்ணன் என இதிகாசங்கள் கூறியுள்ளது..

குபேரன் என்பது கு+பரன் உலகை மேல் இருந்து கண்காணிப்பவன்..
உலகை எவ்வாறு மேல் இருந்து கண்காணிக்க முடியும் பறந்தால் மட்டுமே..

அதற்காக மயன் வடித்ததே  விமானம்.. இதனை மயன் குபேரனுக்கு வடிவமைத்தார்.. குபேரன் நாட்டில் இருந்தது என்பது காற்றில் பறக்கும் சக்தி கொண்ட இன்றைய பாரசூட்..வடிவில்..
நெருப்பின் சுடான வாயுவை உள்ளடக்கி காற்றின் அழுத்ததை கீழ் மேல் பிரித்தால்.. பாராசூட்..
இதனை மூலம்  குபேரன் வைத்திருந்த விமானம்  பாராசூட் போன்ற ஒரு விமானமே..

ஆனால் மயன் இராவணனுக்கு இதே வடிவில் வடிவமைக்கவில்லை என்பது இதிகாசம் தெளிவாக சித்தறிக்கிறது.. ஆடி காற்றில் அம்மியும் பறக்கும் என பழமொழி காற்றை அக்காலத்தில் எந்தளவு பிரித்து பார்த்தனர் என புலப்படும்..

காற்றின் அழுத்தம் கீழ் நோக்கி இழுக்கும் எனில் கூரை ஓடு மட்டும் அல்ல புயலென மரத்தையே வேரோடு பேத்தெடுக்கும்.. இதன் அடிப்படையில் பிறந்தது தான் விமானம்..

சொல்ல போனால் பறக்க றெக்கை தேவை என்பதை
விட பறக்க காற்றே தேவை என்பது தான் உண்மை..

எளிதில் புரிந்து கொள்ள காகிதத்தில் இன்றும் ராக்கெட் செய்து விளையாடுவோம் இதன் மூலம் ஏரோப்ளைன் கண்டுபிடித்தது என எளிதில் விளங்கும்..

காகிதத்தை வெறுமென விசினால் அது மேலே பறக்காது.. அதுவே ஒரு வடிவம் கொடுத்து வீசினால் பறந்து நெடுதூரம் செல்லும் அவ்வடிவமே றெக்கை வைத்தபடி நாம் மடிக்கும் ராக்கெட்..

புட்பக விமானம் குபேரனுக்கு கொடுத்தது போல, இராவணுக்கு மயன் வடிவமைக்கவில்லை.. காற்றை பிரித்து காற்றின் அழுதத்தை மேல் கீழ் பிறிப்பதற்கு எதுவாக றெக்கை வடிவில் அமைத்தார்..
அந்த றெக்கை வடிவமே அவரது தலை கீரிடம் வடிவில் அமையபெற்றது..இதுவே பத்து தலை கொண்ட ராவணன் என இதிகாசத்தில் மறைமுகமாக  இராவணுக்கு பத்து தலை என கூறப்படுகிறது...

பத்துதலை கொண்ட இராவணனின் புகைபடத்தை வரைந்து பார்த்தாலே தெரியும் இராவணன் உடல் அமைப்பு விமான வடிவில் இருப்பது ..

மயன் என்பவர்  தச்சன்.. இவர் தந்ததே சக்கரம் ரதம் அதனாலே சக்கரத்தை கையில் ஏந்தி மாயோன் என கூறினர்.. இந்த ரதம் வடித்த தச்சனே தச்சரதன் என்னும் தசரதன்..


அதே போல தச கீரிவன் என்பது பத்து தலைகள் அல்ல தலையில் அணிந்திருந்த புட்பகவிமாணம் என்னும் கீரிடமே..

இவ்வுலகில் இறந்த உயிரற்ற உடல் அனைத்தும் சவம் என்றே கூறுவோம்.. சவம்-சடலம் எல்லாம் சிவத்தை குறித்தது.. உயிர் என்பது சக்தி.. நம் உடலில் தோன்றும் சக்தியை ஏழு சக்தியாக பிரித்து அச்சக்தியை ஏழுசக்கரங்களில் அடக்கினால்
நமக்கு கிடைக்கும் சக்திகளாக இதிகாசங்களில் கூறபட்டது..
இதனை சித்தர்கள் பல வழிமுறைகள் கண்டாலும் சிவன் இதனை எளிதாக பகுத்தார்..அதுவே
இன்றைய ஓம்ஸ் law..

Volts=power= மூன்றாவது கண்..
அது சக்தி இதனை எந்த ஒரு எதிர்மின் அழுத்தம் தராமல் ஒன்றின் மீது தந்தால் கருகிவிடும்..
இதனையே நெற்றி கண்ணில் திறந்து நக்கீரை சுட்டெரித்தார் என புராணங்களில் வேறு விதத்தில் சொல்லியுள்ளனர்..

இதனை இன்று மின்தகன மேடை முறையே எவ்வித எதிர்மின் அழுத்தம் இல்லாமல் நேரடியாக உடலில் மின்சாரம் செலுத்தினால் சாம்பல் கிடைப்பது போல..

இதனையே பவர் மற்று வோல்ட் என மூன்றாவது கண்ணாக புராணத்தில் கூறபட்டது..

அணு என்பது வெறுமை ஆனால் இதில் இருப்பது அயனிகள் அயன் என்னும் சிவனையும்.. இதில் உயிரான சக்தியை குறித்ததுவே..

ப்ரோடான் நீயூட்ரான் எலக்டிரான் என்பதில் எலக்ட்ரான் அயன் சிவத்தையும்.. ப்ரோடான் அயன் சக்தியை உள்ளடக்கியதுவே..
சவமும் சக்தியும் (உடலும் உயிரும்) சிவசக்தி..

ஓரு அணு எத்தனை நூறாக உடைத்தாலும் அதில்
மெல்லிய சல்பர் துகள் எலக்ட்ரான்.. மற்றும் மெல்லிய குளோரைட் துகள் ப்ரோட்டான்..

மெல்லிய சல்பர் குறைந்த எண் கொண்ட  துகள் அணுவை விட்டு விலகி செல்லும்.. அதிக எண் கொண்ட சல்பர் துகள் குலோரைட் உடன் சேர்ந்து நியூட்ரானை சுற்றிகொள்ளும்..

எந்த பொருளாயினும் உராயும் போது சூடாவது இந்த குறைந்த எண் கொண்ட சல்பர் துகள்களால் தான்..ஒரு வேளை இவை அதிக துகளோடு மோதும் போது தீயாக பற்றி எரியும்..

அக்காலத்தில் உடலில் நீண்ட அரோக்கியம் மற்றும் உறுப்புகள் செயலிழக்காமல் இருக்க உடலில் இந்த சல்பர் குறைபாடுகளை கண்டு எளிதில் கட்டுபடுத்தினர்..
அவையே முக்கணிகள் மா பலா வாழை.. ரத்தம் சதையுமாக வேட்டையாடி உண்ணும் உணவு மற்றும் பால் தயிர் தேன் இதில் அதிகமாக இருக்கும்..இதனால் அணுகள் உடையாது இதன் மின்னூட்டம் பல்வேறு சக்திகளாக மனிதனிடம் பிறக்கிறது..

அதே போல நடணத்தில் தலைசிறந்த நடராஜர்
பாவம் ராகம் தாளம் சேர்த்து ஆடும் ஆட்டமே பரதம்.. தாண்டவங்கள் மயேசுரன் மயேசுவரி இருவரும் ஆடும் ஆட்டம்.. அவ்வாறு இருவரும் சேர்ந்து அம்பலத்தில் ஆடும்
ஆட்டமே பரதாட்டம் என்னும் பிரதோடம்..(பிரதோசம்)
இந்நாளில் கோயிலை சுற்றி வளம் வருவது வழக்கம்..

 அந்நாள் முடிந்து  இறந்தோர்க்கு வேட்டை ஆடுவது வழக்கம்..
வேட்டை ஆடி வருவதை அமாவாசை அன்று நடுகல் வழிபாட்டிலும்... பெளர்ணமி நாளில் சூல வழிபாட்டில் விருந்தாக படைப்பது மலை வாழ் பழங்குடியினர் வழக்கத்தில் காணலாம்..

மலைவாழ் குறவர்கள் தங்களுக்கு தேவையானவை அனைத்தும் அவர்களே செய்து கொள்வர் இதில் இவர்கள் குருவாக வழிபடும் குழு தலைவர்கள்  அனைத்தும் கற்ற முக்கியமாக சித்தர்கள்..

 கற்களை பல வடிவில் தட்டும் தட்டன் மூலிகை மற்று வைத்தியத்திற்கு எப்போதும் கற்களை செதுக்கி அரைக்க மற்றும் மூலிகை மருந்துகள் தயாரிக்க வைத்து கொள்வர் அவ்வாறு உரல் உலக்கை குழவி என வடித்தில் பிறந்ததுவே லிங்கம்..

  குழுதலைவர் அல்லது சித்தமருத்துவர் என குறிக்க குறியீடான வடிவமே லிங்கம் இதனை நடுகல் வழிபாடுவே லிங்க வழிபாடு..

மாசி சதூர்த்தசி சிவராத்திரி

வேந்தன் மேய தீம்புணல் உலகமும் சிவனை குறித்ததே வேந்தன் ராவணன் என்னும் சிவனே..

அதே போல சிவராத்திரி மாசி மாதம் சதூர்த்தசியில் வருவது கூட்டு வேட்டைகாகவே..

ஆனால் புரட்டாசி மாதம் தசமி என்பது ஆதி மலைவாழ் பழங்குடியினர் கொண்டாடிய பண்டிகை என்பது தான் உண்மை..

புரட்டாசி மாதம் அமாவாசை முடிந்தது வரும் முதல் 9நாள் நவராத்திரி.. நவமியில் சரஸ்வதி பூஜை கொண்டாடுகிறோம்..

ஆனால் தசமி யில் தசரா என வடக்கில் கொண்டாடிய மக்கள் ராம்லீலா என ராவணனை கொன்ற பண்டிகையாக கொண்டாடுவது பின்னாளில் இராமாயணம் கூறிய தகவலினாலே . . ஆனால் வடக்கிலும் மலைவாழ் பழங்குடினர் வழி வந்த தச்சர்கள் தங்கள் கருவிகளுக்கு புஜை செய்த நாளே தசரா..

இதனை தமிழன்   ஈசனின் நினைவாக வாழ்க்கை தந்த.. வாழ்வு அளிக்கும் கருவிகளை வணங்கி கொண்டாடுகிறோம் ஆயுதபூஜை என்று..

சரஸ்வதி யாழ் மீட்டும் கலைவாணி இராவணன் என்னும் சிவனின் புதல்வி சீதையே..
பிரம்மன் -இராமன் (மயன் என்னும் தசரதன் மகனே) ...

நன்றி

🙏வசந்த் வெள்ளைத்துரை🙏

புதன், 29 ஆகஸ்ட், 2018

மருதம்- பிள்ளையார்????



தமிழன் விட்டு சென்ற தடயங்கள் பல இன்னும் உள்ளது.. அதில் பிள்ளையாரும் ஒன்று..


இராமாயணம்

இராவணன் புதல்வன் அட்சய குமாரன் முருகனே..

மூத்தவன் இந்திரசித்தன் இந்திரனே. .

மருதம் என்றால் பழனம்

*வயலும் வயல் சார்ந்த இடம்..*

புராணங்கள் எடுத்து கொண்டால் என்னறவை அதில் ஒன்று திருவிளையாடல் புராணம்..

அதில் ஞாணபழதிற்கு முருகன் உலகை மூன்று முறை வலம் வந்தும் மாம்பழம் கணபதிக்கே கிடைக்கும்..

அதில் குறிப்பிட்ட மாம்பழம் என்பது மருதம்
(பழனம்) என்னும் மாம்பழமே..
மா என்றாலே வயல் மற்றும் கழனியை குறித்தது..

பழனிஆண்டி என்பதும் வயல் மற்றும் கழனியை தவறவிட்டவன் என்றே பொருள்..

நாவலந்தீவு என்னும் சொல் தமிழர்கள் அனைவராலும் அறியபட்ட குமரிகண்டத்தை குறித்தது..

இதனை நாவல் மர காடு.. நேவல் என்னும் சொல்.. கப்பல் கட்டி பல ஆயிரம் கால்நடைகள் மக்கள் கடல்கோளின் போது தப்பினர் என்பதை விடுத்து..

*நால்வகை  திணை வளங்களை உள்ளடக்கி தீவே நாவளந்தீவு..*

அதில் ஒன்றே இம் பழனம் என்னும் மருதம்

குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் என நால்வகை நிலமிருந்தாலும்..

குறிஞ்சி முல்லை நெய்தலில்
நாடோடியாக வாழ்க்கை வாழ்ந்தவன்..

இல்வாழ்க்கை கண்டது இந்த மருத நிலத்தில் தான்

இல்லறம் இல்லம் இடம்  குடும்பம்  என வார்த்தை பிறந்ததும் இங்கு தான்..

இல்+திரன்-குடும்பம் குடும்பமாக ஒரிடத்தில் கூட்டமாக வாழ்பவர்களே இல்திரன் என்னும் இந்திரன்
இவனே மருத நிலத்தின் தலைவன்..

இந்திரன் மழைக்கான கடவுள் தேவர்கள் தலைவன்.. என்பது போல வருணனே மழைக்கான கடவுள் என்கிறது..

இந்திரனின் வாகணம் யானை போல வாரணன் என்பதும் யாணையே.. இவற்றின் பொருள் விநாயகனே மழைகான கடவுள்..

வேள்-மணல் வெள்-வெள்ளம் என்றால் நீர்.. மண் நீர் இதனை கண்காணித்து விளைவிப்பதே
வேளாண்மை மற்றும் வெள்ளாமை..

வேள்+வி+நாயகன் (மன்னின் நிகரற்ற தலைவனே) - வேள்விநாயகன் என்றால் இந்திரனை குறிக்கும்..

குறிஞ்சி மற்றும் நெய்தல் நிலப்பரப்பில் நடுவே பள்ளமான பகுதியே முல்லை மற்றும் மருத நிலபரப்பு..

பள்ளமான பகுதியில் காட்டை அழித்து கழனி கண்டவர்கள் வேளாளன்..

இதனை தாங்கி நிற்கும் சுவடே வேளாளர் என்னும் பிரிவினர்
இவர்களை பிள்ளைமார் என அழைப்பது வழக்கம்..

மேலும் தேவேந்திரகுல வேளாளர் என தேவ+இந்திர+குல+வேளாளர் என்பதும் மருத நிலத்தின் வேளாளன்மை செய்தவர்கள்..

தேவம் என்றால் மாமரத்தையும் வயலையும் குறிக்கும்

தேவேந்திரகுல வேளாளர் என்பது வயல்களில்  குடும்பம் குடும்பமாக கூட்டமாக வாழ்ந்தவர்..

ஆற்றுபடுகைகளில் அருகிலேயே மருத நிலப்பரப்பை உருவாக்கினர்..
இந்திரன் மழைக்கான தெய்வமாக இவர்கள் பின்னாளில் வழிபட்டனர்..

இன்றைய காவிரியும் இந்த உழவுகுடிக்கு இந்திரனாலேயே உருவானது என்று புராணத்திலும் எளிய பாமரனுக்கும் விளங்கும் படி சொல்லி சென்றுள்ளனர் நம் முன்னோர்கள்..

அகத்தியர் காவிரியை காகமாக மாறி கழனிக்கு பாய்ச்சியவன் இந்திரன் என்னும் இந்த விநாயகனே...

மருத நிலத்தின் கணக்கதிகாரன்..வயலோடு வாழும் தேவர்கள்..


மருத நிலத்தின் கணக்கதிகாரம் தந்தவன்   கணபதி..

கிராமத்தில் இன்னும் கணக்கு என்று தெரியாமலேயே வழி சொல்லும் பழக்கமுண்டு..

செந்துறைக்கு எவ்வளவு தூரம் என்றால்?

கிழக்க கூப்பிடும் துலைதான் என்பார்..

 lower limit of audibility is defined to 0 dB.. கூப்பிடும் துலை என்பது 1.2கிமி தூரத்திற்கு மேல் எவ்வித தடையில்லை என்றால் 5கிமி குள் வரையறுக்கப்பட்டது..

தமிழனின் செழுமை இங்கேயே புலப்பட்டது.. கணிதம் இவன் வாழ்வியலோடு ஒன்றியதென்று..

மருத நிலமே.. ஒர் மனிதனுக்கு தேவையான அனைத்தையும் உற்பத்தி செய்யும் கூடம்
என்றும் செல்லலாம்..
தேவலோகம்-இந்திரலோகம்-என்பது மருதநில வயல்கள் தான் 

இந்திரனே இந்த தேவர்களின் தலைவன்.. தேவன் என்றால் அரசன், தேவி என்றால் அரசி.

*சுழி என்பது தொடக்கமே..*

பிள்ளையார்சுழி என்றால்
எழுதி பார்க்க கிறுக்கியது
என்பதெல்லாம் தமிழனின் கணித தத்துவத்தை மறைக்க முயற்சிப்பதுவே..

முப்பத்துமுக்கோடி தேவர்கள் என்பது கீழே உள்ள 22 சுழியம் தான்

0 = சுழியம் -சுன்யா-zero

10 = பத்து -ten

100 = நூறு -hundred

1000 = ஆயிரம் -thouand

10000 = பத்தாயிரம் -ten thousand

100000 = நூறாயிரம் -hundred thousand

1000000 = பத்துநூறாயிரம் - one million

10000000 = கோடி -ten million

100000000 = அற்புதம் -hundred million

1000000000 = நிகர்புதம் - one billion

10000000000 = கும்பம் -ten billion

100000000000 = கணம் -hundred billion

1000000000000 = கற்பம் -one trillion

10000000000000 = நிகற்பம் -ten trillion

100000000000000 = பதுமம் -hundred trillion

1000000000000000 = சங்கம் -one zillion

10000000000000000 = வெல்லம் -ten zillion

100000000000000000 = அன்னியம் -hundred zillion

1000000000000000000 = அர்த்தம் 

10000000000000000000 = பரார்த்தம் 

100000000000000000000 = பூரியம் 

1000000000000000000000 = முக்கோடி

10000000000000000000000 = மஹாயுகம் (மூபத்துமுக்கோடி)

இந்த இருபத்தி இரண்டு சுழியமே உ மற்றும் அதன் கீழே இரண்டு கோடு மற்றும் ஒரு புள்ளி..

சுழியத்தை கண்டுபிடித்ததும் உலகுக்கு அறிமுகம் செய்தவனும் மருத நிலத்தின் இந்திரன் என்னும் பிள்ளையாரே..

பிள்ளையார் சுழி என்பது (முப்பத்துமுக்கோடி) மகாயுக குறியீடே 

ஒன்றுக்கு பக்கத்தில்
சுழி போட்டால் அது பத்து, நூறு, ஆயிரம் என்று அதிகரிக்கிறது. ஆனால்

ஒன்றுக்கு இடப்பக்கதில் எத்தனை பூஜ்யங்களைப் போட்டாலும் ஒன்று ஒன்றாகவே இருக்கிறது. ...

இது மட்டுமன்றி எல்லையற்ற பிரபஞ்சத்தில் ஆயிரம், பத்தாயிரம், லட்சம் என்ற

எண்களெல்லாம் மிக மிகச் சிறியவை ஆகி விடுகிறது. பெரிய பெரிய எண்களைக்

குறிக்கும் வார்த்தைகள் எந்த நாகரிகத்தில் இருக்கிறது ...
உலகில் தமிழை தவிர எந்த நாகரிகத்திலும் இல்லை..


8 மயிர்நுண = 1 நுண்மணல் அல்லது 10^-22 " இந்த அளவு சிறிய அளவின் அவசியம் என்ன? எதை அளந்து என்ன செய்தார்கள் என்று யூகிக்க முடிகிறதா?

அதேபோல் "10^22 " இந்த பெரிய அளவின் அவசியமும் உபயோகமும் என்ன ...


இந்திரலோத்தில் கணக்குப்பிள்ளையின் அளவுகள் தொடரும்..


அளவுகள் அளக்க சாண்களையும் உழக்கையும் அந்த காலத்தில் மருத நிலத்தில் பயன்படுத்தினர்

விரல்களை அகல விரித்து கட்டை விரல் முதல் சுண்டு விரல் வரை உள்ள அளவு பகுதியே 1சான்

2 சான் என்பது 1முழம்

12 கைவிரல்கட்டை-1சாண்

முழம் என்றால் நடுவிரல் முதல் கைமுட்டி முடியும் அளவு

அணைவரிடமும் கைமுட்டி விரல்  இருக்கிறது தமிழன் தான் இதனை கண்டுபிடித்தான் என ஆதாரம் கல்வெட்டில் உண்டா? இலக்கியத்தில்  உண்டா?

இந்த அளவிடும் முறை அவன் பண்பாடு பாரம்பரியமாக போற்றி புகழும் வேட்டி இன்னும் தாங்கி வைத்துள்ளது..

இன்னும் தமிழனின் வேட்டி முழத்திலேயே விற்பனை செய்வார்கள்..
உங்களுக்கு 4முழம் வேணுமா இல்ல 8முழம் வேணுமா..

ஒரு அங்குலம் என்பது ஆள்காட்டி விரல் முதல் சுண்டு விரல் வரை உள்ள அளவுகள்..

இடுப்பில் கட்டும் கோவணம் துணி 5 அங்குலம்

தன் உடம்பில் கட்டை விரல் கை விரல்கள் அளவுகள் சொல்ல வைத்தனர். .

இருப்பினும் திருமந்திரம் இதனை பதிந்ததுள்ளது

கூடம் எடுத்துக் குடிபுக்க மங்கையர்

ஓடுவர் மீளுவர் பன்னிரண்டு அங்குலம்

நீடுவர் எண்விரல், கண்டிப்பர் நால்விரல்

கூடிக்கொள்ளில் கோல அஞ்செழுத்து ஆமே


1 இம்மி 11 மும்மி
1 மும்மி 7 அணு
1 அணு 9 குணம்
1 குணம் 5 பந்தம்
1 பந்தம் 6 பாகம்
1 பாகம் 7 விந்தம்
1 விந்தம் 17 நாகவிந்தம்

1 நாகவிந்தம் 60குரல்வளைப்படி
1 குரல்வளைப்படி 60 வெள்ளம்
1 வெள்ளம்100 நுண்மணல்

*உழக்கு கணக்கு உண்டு..*

360 நெல் = 1 செவிடு
5 செவிடு = 1 ஆழாக்கு
2 ஆழாக்கு = 1 உழக்கு
2 உழக்கு = 1 உரி
2 உரி = 1 படி

இப்படி கணிதத்தை உலகிற்கு மனித உடலை கொண்டே அளவுகள் வடித்தது  மருதநில மக்களே..  பிள்ளை என கணிதவியாளர் மற்றும்  நிலஅளவிடுவோரை    கணக்குபிள்ளை என அழைத்தனர்.. வேளாண்மை இல் இருந்து பிறந்ததினாலே..

அதே போல் பிள்ளை என செடிகள் கண்றுகளை அழைத்தனர்

இத்தனை அளவுகள் எதனை அளக்க வின்னை அளக்கவா
இல்லை மண்ணை அளக்கவா..

















அங்குச பாகன்  என்றால் அங்குசம் ஏந்திய யானை பாகன்கள்.. யானையே
மருத நிலம் உருவாதற்கு முக்கிய காரணி எனலாம்..

அதற்கு முன் மண்ணில் கூட்டமாக தன் இனத்தோடு வாழும் உயிரினங்களில் எலியும்,எறும்பும் ஒன்று..

இதுவே மருதநிலத்தின் மூலம் தனக்கு தேவையானவை உணவை எடுத்து  கொண்டு பொந்தில் வைத்து கொள்ளும்..

அதே போல யானைக்கும் ஒரு பண்பு உண்டு...எப்பவுமே கூட்டமாய் வாழும்.. காலங்கள் கடந்தாலும்  அதன் பயண பாதைகள் நன்கு அறியும். . எங்கும் தனித்து செல்லாது கூட்டமாகவே செல்லும்..

எங்கு உணவு இருக்கும் அடுத்து எங்கு சென்றால் கிடைக்கும் என அறிந்து ஒரு பாதை அது ஏற்படுத்தி கொள்ளும் அவைகளை  ஒரு போதும் மறக்காது...

இதில் ஏதேனும் தடைகள் இருப்பின் அதற்கு பின் நீளும் பாதை வரலாற்றின் சுவடிகளில் இருந்தே கூட காலபோக்கில் அழிந்துவிடும்..
இவை மருதநிலத்தில் தெளிவாக மனிதன் இதனை புரிந்து கொண்டான்..

ஆகையால்  அனைத்து போக்குவரத்து மற்றும் உணவு  தேவைகளை யானையிடம் பார்த்து கற்று கொண்டான்..

இதன் காரணமாகவே இந்திரனின் வாகணம் யானையாகவும் பிள்ளையாரின் வாகணம் எலியாகவும் பிற்காலத்தில் சித்தரிக்க பட்டது..

ஏன் இன்னும் எறும்புகளில் கூட பிள்ளையார் எறும்பு என நம்மை அறியாமலேயே நம் பேச்சு வழக்கில் உண்டு..

அப்படி என்னதான் மருத நிலத்தில் செய்தனர்..

 வேட்டையாடி உணவு உண்ட மக்கள்..
 மேய்ச்சல் வகை விலங்குகளை உணவாக்கி உண்டனர்..
அப்போது காயங்கள் ஆற்ற
சித்தமருத்துவம் மூலிகைகள் என கண்டறியபட்டு வாழ்ந்த நிலையில் தான்..

மனிதன் தன் உணவை பிற உயிரினங்களை அழிக்காது அருகம்புல் வைத்து உணவை தயாரிக்க முடிவு செய்த இடமே மருத நிலம்..இதற்கு முன் திணை விவசாயம் என்றொன்று இல்லவே இல்லை..

வாதம், பித்தம், சளி(கபம்) ஆகிய முக்குற்றங்களினால் உண்டாகும் நோய்கள், ஈளை, கண் புகைச்சல், குருதிப் பித்தம், சிறு நச்சுப் பூச்சிகளின் கடி ஆகியவற்றுக்கு மருந்து இந்த அருகம்புல்லே..

முக்கியமாக நம் ரெத்தில்
உள்ள சிகப்பணுக்கள் தூய்மை செய்யவும்  நம் உடல் சக்தியை கடத்தும் திறன் கொண்டது..

அவ்வாறு அருகம்புல்லில் இருந்து வளர்ச்சி கண்டு கண்டறியபட்டதே நெல்..
நெல் என்பது  விதையே..
உமி நீக்கினால் அரிசி..

இன்றும் பிள்ளையாருக்கு அருகம்புல் சாற்றுவது வழக்கம்..பிள்ளையாருக்கு மட்டுமே அவில்,பொறிகடலை,அரிசி கொழுக்கட்டை என அரிசியில் இருந்து வரும் அனைத்தும் படையல் இடுவர். .

திணை விவசாயம் 10000 ஆண்டுகளுக்குள் தான்
வேளாண்மை செய்தவர்கள்
வரட்சி பருவ மாற்றம் என மாறியிருப்பர்..

ஆனால்  நெல் விவசாயம் எனும் இந்த புல்லரிசியை சிவனின் காலத்தில் தென்கிழக்கே குமரி கண்டத்தில் 25000 ஆண்டுகள் முன்னர் கண்டிப்பாக இருந்திருக்க வேண்டும்..

இந்திரசித்தன் என்னும் சித்தனின் கணக்கதிகாரத்தால்..
இராவணன் வின்னை அளக்க சோதிடம் பிறந்தது ..
மயன் மண்னை அளக்க மனையடி சாஸ்திரம் பிறந்தது ..
மருத நிலத்தில் அபிவிருத்தி அடைந்த இதனை சார்ந்த பல்வேறு குடிகள் அதில் ஒவ்வொன்றிலும் எத்தனை கண்டுபிடிப்புகள்..

வாணசாஸ்திரம் வாஸ்துசாஸ்திரம் கொண்டு  சித்தமுருவத்துவம்
(ஆயுள்வேதம்) மண்டலங்களாக பிரித்து உடற்கூறு வரை என எத்தனை பரிணாமத்தை கண்டதது..

இவ்வளவும் கண்டவன் உடலினுள்ள அணுக்கு சக்தி பரிமாறவே..அப்படி செல் அணுவுக்குள் என்ன இருக்கும் என்ற தமிழன் கண்டுபிடிக்க சுழியம் என்ற வெறுமையை இருந்தது..ஆணால் அதில் ஒவ்வொன்றிலும் மிண்சாரசக்தி இருந்தை அறிந்தவன் சக்தியை கடத்தி மற்றொரு சக்தியாக மாற்றினான்.. 

அவைகள் குறையும் போதும் ஒன்றில் இருந்து மற்றொன்ருக்கு சக்தியை கடத்தி நீண்ட ஆயுள் வாழ கற்றுகொண்டான்..

இப்படி அனைத்தும் அறிந்தவன் செய்த தவறு.. குளிர்ந்த நிலபரப்பை வயல்வெளி காடுகளாக மாற்றி வெப்பத்தை அதிகரித்தான்..

வாணியல் கண்ட தேவர்கள் மட்டுமே அறிந்தனர் இவன் படைத்த இவ்வுலகம் அழியும் நேரம் நெருங்கியது என்று..

அணுவில் வெறுமையில் சேர்ந்து இருப்பது ஆண்மா என்பதை அறிந்தவன் ஆண்மாவை  பட்சிகளில் உட்புகுந்தி பட்சி சாஸ்திரம் கற்றான்.. (கூடு விட்டு கூடு பாயும் வித்தை)

குமரி கண்டத்தை கடல் தீண்டினாலும் குமரன் இந்த மருதநில தேவர்களை காத்துதந்தான்..

 தெய்வானையுடன் திருமணம் பின்பே வேளாண்மை செய்தவர்களில் சிலர் போர் கலைகளையும் பயிண்றனர் அவர்களே பின்னாளில் மள்ளர்..


இதனை வெவ்வேறு இடங்களில் புராணங்களில் எளிதாக நாம் கண்டு கொள்ள முடியும்.. மித்ரவருண சக்தி என்பது மின்சாரமே மின்கலனில் காப்பர்சல்பேட் வைத்து ஆராய்ந்தால் 1.5வோல்ட் மின்சாரம் கிடைக்கும்..

மித்ரவருணன்-மத்ர வருணன்(மருத வாரணன்)  என்பதுவே..

வருணன் மேய பெருமணல் உலகமும் என்பது மருத நிலத்திற்கு உரியதுவே.. பெருமணல் என்பது ஆற்றுபடுகை மண்னே.. 

வேந்தன் மேய தீம்புணல்
உலகமும் என்பது குறிஞ்சியே
வேடன்-வேந்தன்..
கோபதி கோமன் கோசன் என்றால் வேந்தனையே குறிக்கும் அது சிவனை குறித்தது நன்னீர் சுரக்கும் இடம் மலையே.. அதற்கு சிவன் தலையே சாட்சி..

மேலும் அகத்தியர் தந்தையே விநாயகர் மருத வாரணன் என்னும் இந்திரன்..

புராணத்தில் காகமாக விநாயகரை அகத்தியர் மூதாதையராக சித்தரித்தனர்..
அகத்தியர் தந்தையே மித்ரவருணன்..

மகாபாரத்தை வியாசர் எழுதினார் என்று சொல்லி தந்தவர்கள்..அவர்களுக்கு எழுத்து கிடையாது எழுத சொல்லி கொடுத்ததே விநாயகர் என..

 எழுத்துகளுக்கு எண்களுக்கு மூலமான விநாயகன் தந்தத்தை உடைத்து முழுகதையும் எழுதினார் என பசுமரத்து அணி போல் பதிந்து சென்றுள்ளனர்..

விநாயகரை ஆறு ஏறி குளமென  வழிபட்டது பிற்காலத்தில் பிறந்தது தான்..
ஒரு கைபிடி சேற்றை பிடித்து வயலில் இந்திரன் திசை கிழக்கில் ஈசானி மூளையில் சாமி கும்பிட்டே இன்றும்
 நாற்று நடவு செய்வர்..இதுவே தமிழனின் மருதநிலத்தின் முதல் உருவ வழிபாடு..

சேரதேசம்(கொங்கதேசம்)-வஞ்சி(கருவூர்-கரூர்)-உள்ளி விழா

சோழதேசம்-உறையூர்-பங்குனி உத்திரம்

பாண்டியதேசம்-மதுரை-ஆவணி அவிட்டம்

இந்த நாளில் சலங்கையை காலில் கட்டி தொழி மிதித்து ஆடுவர்..மருதநிலத்தவர்..


 அவ்வாறு பிடித்த மண்ணையே அருகில் உள்ள ஏரி குளம் நீர் நிலையில் கரைத்தனர்.. அதுவே பிள்ளையார் சதூர்த்தி.

மருத நிலத்தில் 28நாட்கள் இந்திரவிழாவாக கொண்டாடினர் என தமிழ் இலக்கியம்  கூறுகின்றன.. அவ்விழா நாம் மூன்று நாட்களில் கொண்டாடி முடிக்கும் பொங்கல் பண்டிகையே..

தமிழர்கள் வாழ்கையோடு பல மரபுகள் ஒன்றியுள்ளது..
 போகி என்றால் இந்திரனே.. போகி பண்டிகை காமன் பண்டிகையே.. கரும்பு வில் காமனின் பாணமே அது விநாயகனே என்னும் இந்திரன் சித்தன் உடையதுவே..

போகி பண்டிகை பாகன் யானை வைத்து போர் அடிக்கும் பண்டிகையே..பாகன்-போகன்-போகி 


செத்தலை மாதம் என்பது சித்திரை மாதமே -உழவு கணக்கு தொடக்கம் முதல் நாள்..



நன்றி

🙏வசந்த் வெள்ளைத்துரை🙏

முல்லை-மயன் என்னும் மாயோன், மயனாட்டி-மீனாட்சி

தமிழர்கள் வகுத்த ஐந்திணை நிலங்களில் முல்லை என்ற நிலத்தின் வாழ்ந்த மாயோனை பற்றி தமிழனின் தடயங்களாக பதிவு செய்யபடுகிறது.. மாயோன்-என்பது ம...