செவ்வாய், 18 ஜூலை, 2017

*🎠🗡🛡⚔மகாபாரதம் தமிழ்நாட்டில் நடந்ததற்கான தடயங்கள் - 3⚔🛡🗡🎠 **

வை-கை ஆற்றில் மிதந்த கர்ணன் தேரோட்டியின் வளர்ப்பு மகனாக இருந்தார்..

இன்று திருச்சிக்கு அருகே அமைந்துள்ள கரூர் சேர நாட்டின் வடக்கு தலைநகரம்.. இங்கு தான் கௌ(கு)ரவர் மற்றும் பாண்டியர்களுக்கு துரோனர் போட்டி வைத்துள்ளார்...

துரியோதனன் கர்ணின் மானம் காத்த இடம்...

துரியோதனன் "அங்கு தேசத்தின் அரசன் கர்ணன்" என்று  போட்டியின் போது அறிவித்தான்..

அங்கு தேசம் சமஸ்கிருதத்தில் மருவிய இன்றைய கொங்கு தேசம்..

கோயம்புத்தூர் - கோ+இயம்பிய+ஊர்
அரசனாக அறிவித்த ஊர்

கர்ணன் குந்தியின் தலைபிள்ளை
மருதமலையில் கோவில் அமைக்கப்பட்ட போதிலும் ஆதியில் இருந்த மரத்தினை அழிக்காது அதனை இன்றளவும் சுவாமிக்கு அருகில் தல விருட்சம் (தலமரம்) என்ற பெயரில் வளர்த்து வருகின்றனர். அவ்வகையில் மருதமரமானது இங்கு ஸ்தல விருட்சமாக இருந்து வருகிறது.

இடும்பனை வணங்கிச் சற்று மேலே சென்றால் குதிரைக்குளம்பு என்னும் சுவடு உள்ளது. 
தேரோட்டியின் மகன் என்பதற்கான சான்று..

அருணகிரிநாதர் திருபுகழலில் பாடப்பெற்ற தலமிது. பாடி வரிகள் இதோ....

பசலையொ டணையும் இளமுலை மகளை
மதன்விடு பகழி தொடலாமோ!
கரிதிரு முகமும் இடமுடை வயிறும்
உடையவர் பிறகு வருவானே!
கனதனமுடைய குறவர்தம் மகளை
கருணையொ டணையும் மணிமார்பா!
அரவணை துயிலும் அரிதிரு மருக
அணிசெயு மருத மலையோனே!
அடியவர்வினையும் அமரர்கள் துயரும்
அற அருள் உதவு பெருமாளே!

இதுமட்டுமின்றி பாம்பாட்டி சித்தர் என்பவர் பதினெண் சித்தர்களின்  ஒருவராவார். பாம்புகளை கையாளுவதில் திறன் கொண்டவர் என்பதால் பாம்பாட்டிச் சித்தர் என்று பெயர் பெற்றதாகக் கூறுவர்...இவர் பாடிய வரிகளும் இதோ..

இருவர் மண் சேர்த்திட, ஒருவர் பண்ண
ஈரைந்து மாதமாய் வைத்த சூளை
அருமையாய் இருப்பினும் அந்த சூளை
அரைக் காசுக்கு ஆகாதென்று ஆடுபாம்பே!

இங்கு கர்ணனுக்கு கோவில் உண்டு..இதனை கவிஞர் கண்ணதாசன் வேறு கோணத்தில் சொல்லியதுண்டு...

கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை ?
கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்த மலை ?
தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை ?
தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருத மலை!!!

மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா அய்யா!

*கர்ணன்**
சேரனின் குலம் காத்த சுப்பிரமணிய வேலன்...

குந்தி பெற்றெடுத்த கொங்கு தேசத்தின் கௌடை வள்ளல்...

🙏 வசந்த் வெள்ளைத்துரை 🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முல்லை-மயன் என்னும் மாயோன், மயனாட்டி-மீனாட்சி

தமிழர்கள் வகுத்த ஐந்திணை நிலங்களில் முல்லை என்ற நிலத்தின் வாழ்ந்த மாயோனை பற்றி தமிழனின் தடயங்களாக பதிவு செய்யபடுகிறது.. மாயோன்-என்பது ம...